Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

விலை குறைவான ப்ரீபெய்டு திட்டங்களை அறிமுகப்படுத்திய ஏர்டெல்...!

madhankumar July 13, 2022 & 17:47 [IST]
விலை குறைவான ப்ரீபெய்டு திட்டங்களை அறிமுகப்படுத்திய ஏர்டெல்...!Representative Image.

ஏர்டெல் நிறுவனமானது விலை குறைவான மூன்று ப்ரீபெய்டு திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. அதுகுறித்த தகவல்களை இந்த பதிவில் பார்க்கலாம் வாங்க.

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் அணைத்து டெலிகாம் நிறுவனங்களும் தங்களது ப்ரீபெய்டு மற்றும் போஸ்ட்பெய்டு திட்டங்களின் விலையை மாற்றினர். அனைத்துவிதமான குறைந்த கட்டணங்களும் முற்றிலுமாக மாற்றப்பட்டன. இதனால் வாடிக்கையாளர்கள் மிகவும் சிரமத்திற்குள்ளாகினர். இந்நிலையில் ஏர்டெல் நிறுவனம் விலை குறைவான மூன்று ப்ரீபெய்டு திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது.

அந்த புதிய பிளான்கள் ரூ. 99, ரூ. 109 மற்றும் ரூ.111 விலையில் கிடைக்கின்றன. 

ஏர்டெல் ரூ . 99 ப்ரீபெயிட் திட்டம்

இந்த திட்டம் ரூ. 99 டாக் டைம் உடன் 200 MB அதிவேக டேட்டாவை வழங்குகிறது. இதன் வேலிடிட்டி 28 நாட்கள்.
அழைப்புகள் மற்றும் டேட்டா மட்டுமே இந்த திட்டத்துடன் வழங்கப்பட்டுள்ளது. SMS அனுப்புவதற்கு ரூ. 1 /- வசூலிக்கப்படும். STD அழைப்புகளுக்கு, ஒரு நிமிடத்துக்கு ரூ. 5 வசூலிக்கப்படும்.

ஏர்டெல் ரூ. 109 ப்ரீபெயிட் திட்டம்

இந்த திட்டம் ரூ. 99 டாக் டைம் உடன் 200 MB அதிவேக டேட்டாவை வழங்குகிறது. இதன் வேலிடிட்டி 30 நாட்கள்.
அழைப்புகள் மற்றும் டேட்டா மட்டுமே இந்த திட்டத்துடன் வழங்கப்பட்டுள்ளது. SMS அனுப்புவதற்கு ரூ. 1 /- வசூலிக்கப்படும். STD அழைப்புகளுக்கு, ஒரு நிமிடத்துக்கு ரூ. 5 வசூலிக்கப்படும்.

ஏர்டெல் ரூ. 111 ப்ரீபெயிட் திட்டம்

இந்த திட்டம் ரூ. 99 டாக் டைம் உடன் 200 MB அதிவேக டேட்டாவை வழங்குகிறது. இதன் வேலிடிட்டி ஒரு மாதம், அதாவது மாதத்தில் எத்தனை நாட்கள் உள்ளதோ, மாதம் முழுமைக்கும் செல்லுபடியாகும்.31 நாட்கள் இருந்தால், 31 நாட்களுக்கு திட்டம் செல்லுபடியாகும். அழைப்புகள் மற்றும் டேட்டா மட்டுமே இந்த திட்டத்துடன் வழங்கப்பட்டுள்ளது. SMS அனுப்புவதற்கு ரூ. 1 /- வசூலிக்கப்படும். STD அழைப்புகளுக்கு, ஒரு நிமிடத்துக்கு ரூ. 5 வசூலிக்கப்படும்.

இந்த திட்டங்கள் மூலம், தங்களின் மொபைல் நம்பர் ஆக்டிவாக இருக்க வேண்டும் என்று விரும்புபவர்கள், மினிமம் ரீச்சார்ஜ் செய்து கொள்வதன் மூலம், டாக்-டைம் மற்றும் டேட்டாவும் பெற முடியும். 
 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்