Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

ஐபோன் யூசர்ஸ்-க்கு ஒரு ஹாப்பி நியூஸ்...உங்களுக்கு எப்ப 5ஜி வரப்போகுது தெரியுமா?

Priyanka Hochumin November 03, 2022 & 11:45 [IST]
ஐபோன் யூசர்ஸ்-க்கு ஒரு ஹாப்பி நியூஸ்...உங்களுக்கு எப்ப 5ஜி வரப்போகுது தெரியுமா?Representative Image.

இந்திய ஐஓஎஸ் பயனர்களுக்கு ஒரு குட் நியூஸ். ஐஓஎஸ் பீட்டா நிகழ்ச்சியில் ஆப்பிள் நிறுவனம், இந்திய பயனர்களுக்கு 5ஜியை அடுத்த வார தொடக்கத்தில் செயல்படுத்தும் என நம்பத்தகுந்த வகையில் அறியப்பட்டுள்ளது. என்ன தான் ஆப்பிள் நிறுவனம் இந்த தகவலை அறிவித்தாலும், எப்போது 5ஜி சேவைகள் ஐஓஎஸ் பயனர்களுக்கு பயன்பாட்டிற்கு வரும் என்று தெரியவில்லை.

இந்திய அரசாங்கத்தின் அழுத்தத்தைத் தொடர்ந்து தங்கள் சாதனங்களில் 5G சேவைகளை இயக்க ஆப்பிள் நிறுவனம் பயனர்களுக்கு தேவையான சாப்ட்வேர் அப்டேட்களை டிசம்பரில் வெளியிடுவதாகக் கூறியது. பின்பு வெளியிட்ட அறிக்கையில், " நெட்வொர்க் சரிபார்ப்பு, தரம் மற்றும் செயல்திறனுக்கான சோதனை முடிந்தவுடன்" ஐபோன் பயனர்களுக்கு 5G அனுபவத்தை வழங்குவதற்கு கேரியர் பார்ட்னர்களுடன் இணைந்து செயல்படுவதாக ஆப்பிள் கூறியது.

பீட்டா சாப்ட்வேர் ப்ரோக்ராமில் பங்கேற்கும் ஏர்டெல் மற்றும் ஜியோவில் உள்ள ஆப்பிள் பயனர்கள் அடுத்த வாரம் புதுப்பித்தலுக்குப் பிறகு 5ஜியை முயற்சிக்க முடியும். மேலும் ஆப்பிள் பீட்டா சாப்ட்வேர் ப்ரோக்ராமில் ஐஓவில் பயனர்கள் ப்ரீ-ரிலீஸ் சாப்ட்வேரை முயற்சிக்கவும், மென்பொருள் பொதுவில் கிடைக்கும் முன் சமீபத்திய அம்சங்களை அனுபவிக்கவும் உதவுகிறது. இந்த காலகட்டத்தில், பயனர்கள் தரம் மற்றும் பயன்பாட்டினைப் பற்றிய கருத்தை ஆப்பிள் நிறுவனத்திற்கு வழங்கலாம். பயனர்கள் இந்த பீட்டா திட்டத்தில் பங்கேற்க வேண்டும் என்றால் தனித்தனியாக பதிவு செய்ய வேண்டும்.

ஆப்பிளின் ஐபோன் 14, ஐபோன் 13 மற்றும் ஐபோன் 12 தொடர் போன்கள் மற்றும் ஐபோன் எஸ்இ (3வது தலைமுறை) மாடல்கள் 5ஜி உடன் இணக்கமாக உள்ளன. இந்த சாதனங்கள் அடுத்த வாரம் பீட்டா சாப்ட்வேர் அப்டேட் மற்றும் டிசம்பரில் முழு அப்டேட்டைப் பெறும்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்