Fri ,Mar 29, 2024

சென்செக்ஸ் 73,651.35
655.04sensex(0.90%)
நிஃப்டி22,326.90
203.25sensex(0.92%)
USD
81.57
Exclusive

ஆப்பிள் வெளியிட்ட புதிய அப்டேட்...எந்தெந்த iphone-க்கு கிடைக்கும்? | Apple Security Response Update

Priyanka Hochumin Updated:
ஆப்பிள் வெளியிட்ட புதிய அப்டேட்...எந்தெந்த iphone-க்கு கிடைக்கும்? | Apple Security Response UpdateRepresentative Image.

ஆப்பிள் ஐபோன் iOS 16 இல் இயங்கும் சாதனங்களுக்கு ஒரு புதிய விரைவான பாதுகாப்பு புதுப்பிப்பை (Rapid Security Response [RSR]) நிறுவனம் வெளியிட்டுள்ளது.

திடீரென இந்த மென்பொருளை வெளியிட காரணம் என்ன? அதாவது ஐபோன் பயன்பாட்டின் போது ஏதேனும் ஒரு பெரிய பிழை [bug] அல்லது பாதுகாப்பு ஓட்டையை [security loophole] ஆப்பிள் நிறுவனம் கண்டறிந்தால், அதனால் ஏற்படப்போகும் பாதிப்பை தடுத்து விரைவான தீர்வைக் கண்டறிய இந்த மென்பொருள் பயனுள்ளதாக இருக்கும். இந்த புதிய சாஃப்ட்வேர் OS 16.4.1 இல் இயங்கும் ஐபோன்களுக்கு கிடைக்கும். இந்த பஅப்டேட்டில் மற்ற புதிய அம்சங்கள் எதுவும் கொண்டு வரவில்லை. எனவே, இதற்கான தேவை வெறும் 90 MB மட்டுமே. ஒருவேளை நீங்கள் iOS இன் முந்தைய வெர்சனை பயன்படுத்திக் கொண்டிருந்தால், உங்கள் iPhone இன் பாதுகாப்பை மேலும் மேம்படுத்த இந்த பேட்சை நிறுவ பரிந்துரைக்கப்படுகிறது.

தற்போது வரை சமூக ஊடகங்களில் ஐபோன் பயனர்கள் தங்கள் போனில் இந்த அப்டேட்டை நிறுவ முயற்சிக்கும் போது "பாதுகாப்பு பதிலைச் சரிபார்க்க முடியவில்லை" என்ற மெசேஜ் வருவதாக கூறுகின்றனர். மேலும் அவர்களால் அந்த அப்டேட்டை தங்கள் போனில் நிறுவ முடியாவில்லை என்றும் கூறுகின்றன. இதற்கான தீர்வு - உங்கள் ஐபோனை ரீஸ்டார்ட் செய்து, மென்பொருள் புதுப்பிப்பை மீண்டும் பதிவிறக்கம் செய்ய வேண்டும். முக்கியமாக புதிய அப்டேட் டவுன்லோட் ஆகும் வரை உங்கள் சாதனம் இணையத்துடன் இணைக்கப்பட்டுள்ளதா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.

iOS 16 புதுப்பிப்புக்குத் தகுதியான அனைத்து iPhoneகளுக்கும் சமீபத்திய மென்பொருள் புதுப்பிப்பு கிடைக்கிறது. எனவே, iPhone 8, iPhone X, iPhone XR, iPhone 11, iPhone 12, iPhone 13 மற்றும் iPhone 14 சீரிஸ் ஸ்மார்ட்போன்களுக்கும் இந்த அப்டேட் கிடைக்கும்.    


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்