Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

ஐபோன்களுக்கான புதிய அணுகல் அம்சங்கள்..! | iOs 17 Update New Accessibility Features

Gowthami Subramani Updated:
ஐபோன்களுக்கான புதிய அணுகல் அம்சங்கள்..! | iOs 17 Update New Accessibility FeaturesRepresentative Image.

ஆப்பிள் iOS 17-ல் புதிய அணுகல் தன்மை அம்சங்களை ஆப்பிள் நிறுவனம் காட்சிப்படுத்தி உள்ளது. இது குறித்த முழு விவரங்களை இந்தப் பதிவில் காணலாம்.

ஆப்பிள் நிறுவனம் iOS 17 அப்டேட்டில் புதிய அம்சங்கள் சேர்க்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. அதன் படி, சமீபத்தில் வெளியிட்டுள்ள அறிவிப்பானது, ஆப்பிள் ஐபோன் ரசிகர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. இது, iOS 17 புதுப்பிப்பில், அணுகல்தன்மை அம்சங்களை வெளிப்படுத்தியுள்ளது. அதன் படி இந்த புதுப்பிப்பானது, Cognitive improvement, Vision, Speech Accessbility உள்ளிட்டவற்றில் முக்கிய நோக்கத்தைக் கொண்டுள்ளது. இதில் குறிப்பிட்டுள்ள பல்வேறு முக்கிய அம்சங்கள் குறித்த விவரங்களைக் காணலாம்.

iOS 17 உடன் வரவிருக்கும் புதிய Accessibility Features

தனிப்பட்ட குரல் (Personal Voice)

Apple iPhone-ன் iOS 17 மொபைல் ஆனது, தனிப்பட்ட குரல் அம்சத்தை வெளியிட்டுள்ளது. அதன் படி, பயனர்கள் iPhone அல்லது iPad Device-ல் 15 நிமிட ஆடியோவைப் பதிவு செய்யும் வகையில் அமைகிறது. இதில் ரேண்டம் செய்யப்பட்ட உரைத் தொகுப்பைப் படிப்பதன் மூலம் குரலை உருவாக்குவர். இந்த தனிப்பட்ட குரல் அணுகல்தன்மை அம்சமானது பயனர்களின் தகவலை பாதுகாப்பாகவும், தனிப்பட்டதாகவும் வைத்திருக்க உதவுகிறது.

படங்களை இடைநிறுத்துதல் (Pause Images)

Low Vision கொண்ட பயனர்களுக்கு எழுத்துக்களை எளிமையாகப் படிக்க Adjust செய்யும் வசதியைக் கொண்டுள்ளது. அதன் படி, Mac App ஆனது Finder, Messages, Calendar, Mail and Notes-ஐக் கொண்டுள்ளது.

வாய்ஸ்ஓவர் மேம்படுத்துதல் (VoiceOver Upgrade)

வாய்ஸ்ஓவரைப் பொறுத்த வரை, Siri Voice ஆனது அதிகமாக பேசும் சமயத்தில் கூட இயல்பாகவும், வெளிப்படையாகவும் கேட்கும். மேலும், பயனர்கள் Siri உடன் பேசுவதின் முழு ஆதரவையும் பெறுவர்.

எழுத்து அளவு மாற்றங்கள் (Text Size Tweaks)

குறைந்த பார்வை கொண்ட பயனர்களுக்கு ஏதுவாக, எழுத்து அளவில் மாற்றங்களை ஏற்படுத்திக் கொள்ளலாம். அதன் படி, ஃபைண்டர் செய்திகள், அஞ்சல், காலன்டர், Notes போன்றவற்றில் உரை அளவை சரி செய்து மாற்றி படிக்க முடியும்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்