Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

என்கிட்டையும் கடன் வாங்குங்க - இந்தியாவில் நுழையும் ஆப்பிள் கிரெடிட் கார்டு | Apple Pay

Abhinesh A.R Updated:
என்கிட்டையும் கடன் வாங்குங்க - இந்தியாவில் நுழையும் ஆப்பிள் கிரெடிட் கார்டு | Apple PayRepresentative Image.

உலகின் முன்னணி டெக் நிறுவனமான ஆப்பிள், புதிய பேமெண்ட்ஸ் செயலியை உருவாக்க திட்டமிட்டுள்ளது. முன்னதாக பல நாடுகளில் உள்ள Apple Pay சேவையை இந்தியாவில் கொண்டுவர முனைப்புக் காட்டி வருகிறது. இதனுடன் ஆப்பிள் கிரெடிட் கார்டு திட்டத்தை அறிமுகப்படுத்த உள்ளதாம்.

இதற்காக NPCI எனும் நேஷனல் பேமெண்ட்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. இவை அனைத்தும் தொடக்க கட்டத்தில் இருப்பதாகக் கூறப்படுகிறது. முதலில், ஆப்பிள் கடன் அட்டையை இந்தியாவுக்குள் கொண்டு வருகிறது.

இதன் மூலம் அனைத்து ஆப்பிள் சேவைகள், பொருள்களை பயனர்கள் தள்ளுபடி விலையில் வாங்க முடியும். கிரெடிட் கார்டை அறிமுகம் செய்ய, ரிசர்வ் வங்கி அலுவலர்களுடன் கடைசி கட்ட பேச்சுவார்த்தையில் ஆப்பிள் ஈடுபட்டுள்ளது. கடந்த ஏப்ரல் மாதம் ஆப்பிள் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அலுவலர் டிம் குக் இந்தியா வந்திருந்தபோது, ஹெச்டிஎஃப்சி வங்கியின் நிர்வாக இயக்குநர் சஷிதர் ஜகதீஷனை சந்தித்துப் பேசினார்.

என்கிட்டையும் கடன் வாங்குங்க - இந்தியாவில் நுழையும் ஆப்பிள் கிரெடிட் கார்டு | Apple PayRepresentative Image

ஆப்பிள் பே / ஆப்பிள் கார்டு என்றால் என்ன?

ஆப்பிள் பே என்பது டிஜிட்டல் கட்டண முறையாகும். இது பயனர்கள் தங்கள் ஐபோன் அல்லது ஆப்பிள் வாட்சை காண்டாக்ட்லெஸ் ரீடருக்கு அருகில் கொண்டு செல்வதன் மூலம் பணம் செலுத்த அனுமதிக்கிறது. இருப்பினும், இந்தியாவில் Apple Pay-ஐச் செயல்படுத்துவது கடினமான காரியம். ஏனென்றால், பெருநகரங்களைத் தவிர பிற இடங்களில் NFC பயன்பாடு மிகக் குறைவு என்பதால், இது சவால் நிறைந்ததாக இருக்கும் என்று கூறப்படுகிறது.

இது iPhone, iPad, Apple Watch மற்றும் Mac உள்ளிட்ட பல்வேறு ஆப்பிள் சாதனங்களில் பாதுகாப்பான மற்றும் தனிப்பட்ட கட்டணப் பயன்பாட்டை வழங்குகிறது. இதில் பயனர்கள் தங்கள் கிரெடிட், டெபிட் அல்லது ப்ரீபெய்ட் கார்டுகளை இணைக்கலாம். கூடுதலாக ஆப்பிள் அறிமுகம் செய்ய இருக்கும் Apple Card என்பது Goldman Sachs மற்றும் Mastercard ஆகியவற்றுக்கு இடையேயான பிரீமியம் கிரெடிட் கார்டு கூட்டாண்மை ஆகும். இது ஒரு குறைந்தபட்ச வட்டியைக் கொண்டு பயனர்களுக்கு பல நன்மைகளை வழங்குகிறது.

என்கிட்டையும் கடன் வாங்குங்க - இந்தியாவில் நுழையும் ஆப்பிள் கிரெடிட் கார்டு | Apple PayRepresentative Image

ஜப்பானுக்கு முன் இந்தியா

அதிகரித்து வரும் ஐபோன் விற்பனை மற்றும் வருவாய் வளர்ச்சி காரணமாக ஆப்பிளின் முக்கிய சந்தையாக இந்தியா மாறி வருகிறது. 2023 நிதியாண்டில், இந்தியாவில் ஆப்பிள் நிறுவனத்தின் வருவாய் சுமார் ரூ.50,000 கோடியை ($6 பில்லியன்) எட்டியது. இது முந்தைய ஆண்டை விடவும் குறிப்பிடத்தக்க வளர்ச்சி ஆகும்.

தற்போது, சுமார் 20 மில்லியன் பயனர்களுடன் இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் 4% விழுக்காடு பங்குகளை ஆப்பிள் கொண்டுள்ளது. இந்திய ஸ்மார்ட்போன் பயனர்களில் கணிசமான பகுதியினர் (20-30%) அடுத்த பத்து ஆண்டுகளில் ஐபோன்களுக்கு மாறினால், பிற நடுத்தர வருமான நாடுகளைப் போலவே, அமெரிக்கா மற்றும் சீனாவுக்குப் பிறகு ஆப்பிளின் மூன்றாவது பெரிய சந்தையாக இந்தியா மாறும்.

ஜப்பான் அல்லது ஐரோப்பிய நாடுகளுக்கு முன்பாக இந்தியாவில் ஆப்பிள் கார்டை அறிமுகப்படுத்த ஆப்பிள் தேர்வு செய்ததற்கு ஒரு காரணம், பெரும்பாலான கார்டு பேமெண்ட்கள் இந்தியாவில் பரவலாக ஏற்றுக்கொள்ளப்படவில்லை. இந்தியாவில், iCloud சேமிப்பகம் மற்றும் iMusic போன்ற சேவைகளைத் தவிர, பெரும்பாலான பிற சேவைகளுக்கு UPI பணப் பரிவர்த்தனை முறையே பயன்படுத்தப்படுகிறது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்