Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

ஆப்பிளின் புதிய வடிவமைப்பு கொண்ட ஆப்பிள் வாட்ச்OS 10..! | Apple introduces watchOS

Gowthami Subramani Updated:
ஆப்பிளின் புதிய வடிவமைப்பு கொண்ட ஆப்பிள் வாட்ச்OS 10..! | Apple introduces watchOSRepresentative Image.

ஆப்பிள் நிறுவனம் ஆப்பிள் வாட்ச்-ஐ புதிய அம்சங்களுடன் வெளியிட்டுள்ளது. புதிதாக அறிமுகப்படுத்தி உள்ள WatchOS 10 வாட்ச்சின் புதிய அம்சங்கள், வெளியீட்டு தேதி மற்றும் இதன் பல்வேறு முக்கிய விவரங்களை இந்தப் பதிவில் காணலாம்.

ஆப்பிள் நிறுவனத்தின் இந்த வாட்ச் ஆனது, பயனர்களை சுறுசுறுப்பாகவும், ஆரோக்கியம் மற்றும் பாதுகாப்பாகவும் வைத்திருக்க உதவுகிறது. இந்த வகை அம்சங்கள், ஆப்பிள் வாட்ச்-ன் 9 சீரியஸில் எதிர்பார்க்கப்பட்டது. தற்போது, வாட்ச்ஓஎஸ் 10 விட்ஜெட்டுகள், ஸ்மார்ட் ஸ்டாக்குகளால் இயக்கப்படக்கூடிய மறு வடிவமைப்பு செய்யப்பட்ட முகப்புத் திரையின் அனுபவத்தைக் கொண்டிருக்கும்.

AppleOS 10 புதிய அம்சங்கள்

ஸ்மார்ட் ஸ்டாக்குகளைக் கொண்ட இந்த வாட்ச்ஓஎஸ் 10 ஆனது Machine Learning அடிப்படையில், தகவல் மற்றும் பயன்பாடுகளை பயனர்களுக்கு வழங்குகிறது.

மேலும், இதன் மூலம் சைக்கிள் ஓட்டுதல், புளூடூத் சென்சார்களைப் பயன்படுத்துதல், FTP அளவீடு மற்றும் Power Zone அளவீடுகளை ஆதரிக்கக் கூடிய பிரத்யேக அனுபவத்தை வழங்குகிறது.

ஃபிட்னஸ் பிளஸ் திட்டங்களால், பயனர்கள் வொர்க் அவுட் செய்யும் போது, அவர்களது தேவைக்கேற்ப தனிப்பயன் வொர்க் அவுட் அம்சம் அல்லது தியான திட்டத்தை வழங்குகிறது.

இந்த வாட்சில் இரண்டு புதிய வாட்ச் முகங்கள் உள்ளன. Mindfulness பயன்பாட்டின் மூலம் பயனர்களின் தற்காலிக உணர்ச்சிகளைப் பதிவு செய்யும் வகையில் அமைகிறது.

அதே போல, சுற்றுப்புற ஒளி சென்சார் மூலமாக, நீங்கள் பகலில் செலவழித்த நேரத்தை அளவிடலாம். இதன் FaceTime Video Message Playback மூலமாக, பயனர்கள் ஆப்பிள் வாட்சில் நேரடியாகச் செய்திகளைப் பார்க்க முடியும்.

Apple WatchOS 10 அறிவிப்பு மற்றும் வெளியீட்டு தேதி

iOS 17 மற்றும் பிற மென்பொருள் புதுப்பிப்புகளுடன், WatchOS அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் பீட்டா பதிப்பு வெளியிடப்படும் என அறிவித்தது. மேலும், WatchOS செப்டம்பர் 10-ல் முழுமையாகக் கிடைக்கும் எனக் கூறப்படுகிறது. இதில், ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 9 அறிவிப்பு வெளியான சில வாரங்களுக்குள் வெளியாகும் எனக் கூறப்படுகிறது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்