Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

ஆப்பிளின் புதிய AR ஹெட்செட்..! இதுல என்ன ஸ்பெஷல் தெரியுமா..? | Apple Vision Pro Headset

Gowthami Subramani Updated:
ஆப்பிளின் புதிய AR ஹெட்செட்..! இதுல என்ன ஸ்பெஷல் தெரியுமா..? | Apple Vision Pro HeadsetRepresentative Image.

நீண்ட கால இடைவெளிக்குப் பிறகு, ஆப்பிள் தனது முதல் AR ஹெட்செட்டை அறிமுகப்படுத்துவதாக அறிவித்துள்ளது.

ஆப்பிள் நிறுவனம் நீண்ட கால தாமதத்திற்குப் பிறகு ஆப்பிள் விஷன் ப்ரோ எனப்படும் ஆக்மென்டட் ரியாலிட்டி ஹெட்செட்டை ஆப்பிள் அறிவித்துள்ளது. இது உண்மையான டிஜிட்டல் உலகத்தை காட்டுவதாக உள்ளது.

இந்த ஆப்பிள் விஷன் ப்ரோ ஆனது தனி பேட்டரி பேக்கைக் கொண்டுள்ளது. இவை, கண்கள், கைகள் மற்றும் குரல் மூலம் இது கட்டுப்படுத்தப்படுகிறது. இந்த ஆண்டின் பிற்பகுதியில் இந்த வெர்சன் ஆனது அமெரிக்க சந்தையில் தொடங்குவதாக உள்ளது. விஷன் ப்ரோ முதன்மையான AR சாதனமாக நிலைநிறுத்தப்பட்டுள்ளது.

ஆப்பிள் ஹெட்செட் அணிந்திருப்பவர்கள், தங்களைச் சுற்றியுள்ள உண்மையான அல்லது இயற்பியல் உலகத்தைப் பார்க்க அனுமதிப்பதாக அமைகிறது. இது VR ஹெட்செட்டுகளை போல அல்லாமல் முகத்தை முழுவதுமாக மூடி, பார்வையைக் கட்டுப்படுத்துகிறது. இதை அணிந்திருப்பவர்கள், இதனைக் கட்டியவுடன் முகப்புக் காட்சி தெரியும்.

ஆப்பிள் விஷன் ப்ரோ டிசைன்

இந்த ஹெட்செட்டின் முழு முன்பக்கமும், பளபளப்பான கண்ணாடியைக் கொண்டிருக்கும். இந்த ஹெட் செட்டின் மேற்புறம் ஒரு பொத்தான் இருக்கும். மற்றும் டிஜிட்டல் கிரீடமை கொண்டுள்ளது. இது ஒரு பயனர் சூழலில் எவ்வாறு இருக்கிறோம் என்பதைக் கட்டுப்படுத்த அனுமதிக்கிறது.

ஹார்டுவேர்

ஆப்பிள் விஷன் ப்ரோ ஆனது இரண்டு மைக்ரோ OLED டிஸ்பிளேயைக் கொண்டுள்ளது. அதில் 23 மில்லியன் பிக்சல்கள் அளவு கொண்ட அதி-உயர்-தெளிவுத் திறன் கொண்ட டிஸ்பிளேயைக் கொண்டிருக்கும். மேலும், இது 4K-க்கு அதிகமான அளவைக் கொண்டுள்ளது.

அம்சங்கள்

கண்கள், கைகள் மற்றும் குரல் மூலம் ஆப்பிள் விஷன் ப்ரோ ஹெட்செட் கட்டுப்படுத்தப்படுகிறது. அதன் படி, அப்ளிகேஷனைப் பார்ப்பதன் மூலமோ, விரல்களைப் பயன்படுத்தி தேர்ந்தெடுப்பதன் மூலமோ, மணிக்கட்டைப் பயன்படுத்தி ஸ்க்ரோல் செய்வது அல்லது குரலைப் பயன்படுத்துவதன் மூலமாகவோ இவற்றை உணரலாம். மேலும், இது ஆப்பிளின் மேஜிக் கீபோர்டு மற்றும் மேஜிக் டிராக்பேடை ஆதரிக்கிறது.

இது ஒரு தனிப்பட்ட திரையரங்கமாக மாற்றி, அதிவேக வீடியோக்களைப் பார்க்கக் கூடியதாக அமையும். விஷன் ப்ரோ ஹெட்செட்டை அன்லாக் செய்யவும், பயனர்களை அங்கீகரிக்கவும் ஆப்டிக் ஐடி-ஆனது அணிந்தவரின் கருவிழியைப் பயன்படுத்துகிறது. ஆப்பிளின் முதல் 3டி கேமராவாக, இந்த விஷன் ப்ரோ உள்ளது. ஸ்பாஷியல் ஆடியோவுடன், வீடியோவைக் காட்டுகிறது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்