Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

வெறும் ரூ.12,599/- தான்...பட்ஜெட் விலையில் நோக்கியா ஸ்மார்ட்போன் | Nokia G42 5G Specification in Tamil

Priyanka Hochumin Updated:
வெறும் ரூ.12,599/- தான்...பட்ஜெட் விலையில் நோக்கியா ஸ்மார்ட்போன் | Nokia G42 5G Specification in TamilRepresentative Image.

பட்ஜெட் ஸ்மார்ட்போன்களுக்கான பிராண்ட்டாக திகழ்வது நோக்கியா. அந்த வகையில் இன்று நோக்கியா ஜி42 ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த போனில் இருக்கும் முக்கிய விவரக்குறிப்புகள், அம்சங்கள், விலை போன்ற விஷயத்தை பற்றி பார்க்கலாம்.

வெறும் ரூ.12,599/- தான்...பட்ஜெட் விலையில் நோக்கியா ஸ்மார்ட்போன் | Nokia G42 5G Specification in TamilRepresentative Image

நோக்கியா ஜி42 விவரக்குறிப்புகள்

இது 90ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 560 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் உள்ளிட்ட அம்சங்களுடன் 6.56-இன்ச் HD+ LCD டிஸ்பிளேவைக் கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் ஆக்டோ-கோர் ஸ்னாப்டிராகன் 480+ SoC சிப்செட் மூலம் இயக்கப்படும். கேமராவைப் பொறுத்தவரையில் 50எம்பி பிரைமரி சென்சார் மற்றும் இரண்டு 2எம்பி சென்சார் அடங்கிய ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப்புடன் வருகிறது. செல்பீ கேமரா ஆனது, 8எம்பி சென்சார் கேமரா அமைப்பை பெற்றுள்ளது. இறுதியாக, 20W வயர்டு பாஸ்ட் சார்ஜிங்கை ஆதரிக்கும் 5000mAh பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. ஒரு முறை சார்ஜ் செய்தால் மூன்று நாட்களுக்கு தாங்கும் என்று கூறப்படுகிறது.

வெறும் ரூ.12,599/- தான்...பட்ஜெட் விலையில் நோக்கியா ஸ்மார்ட்போன் | Nokia G42 5G Specification in TamilRepresentative Image

விலை

கூடுதலாக, 5G, GPS, USB Type-C போர்ட், ப்ளூடூத் 5.1, மற்றும் Wi-Fi 802.11 a/b/g/n/ac/ax உள்ளிட்ட இணைப்பு விருப்பங்கள் இந்த ஸ்மார்ட்போனில் அடங்கும். மேலும் accelerometer, ambient light sensor, e-compass மற்றும் proximity sensor ஆகியவை இடம் பெற்றுள்ளது. அத்துடன், IP52-மதிப்பிடப்பட்ட கட்டமைப்பையும் கொண்டுள்ளதால் இது தூசி மற்றும் நீர் எதிர்ப்பை வழங்குகிறது. இத்தனை அம்சங்களைக் கொண்ட நோக்கியா ஜி42 5ஜி ஸ்மார்ட்போன் கிரே மற்றும் பர்பில் ஆகிய இரண்டு கலர் ஆப்ஷனில் கிடைக்கும். 6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி ஸ்டோரேஜ் என்னும் ஒரே ஒரு வேரியண்ட் ரூ.12,599/-க்கு விற்பனையாகிறது. வரும் செப்டம்பர் 15 ஆம் தேதி முதல் அமேசான் வலைத்தளத்தில் விற்பனை ஆரம்பமாகிறது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்