Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Apple iOS 16: ஐபோனில் வந்துள்ள புதிய iOS 16 அப்டேட்! என்னென்ன புதுசா இருக்க பாருங்க!

Priyanka Hochumin June 07, 2022 & 11:50 [IST]
Apple iOS 16: ஐபோனில் வந்துள்ள புதிய iOS 16 அப்டேட்! என்னென்ன புதுசா இருக்க பாருங்க!Representative Image.

Apple iOS 16: மக்கள் அனைவருக்கும் மிகவும் பிடித்த ஆப்பிள், தங்களின் வருடாந்திர டெவலப்பர் மாநாடு நடைபெற்று முடிந்தது. அதில் புதிதாக என்னென்ன அம்சங்கள் சாப்ட்வேரில் இடம் பெற உள்ளது போன்ற முக்கிய தகவல் தற்போது வெளியாகியுள்ளது. மேலும் இந்த நிகழ்ச்சியின் பொழுது ஐபோன்களுக்கான குபெர்டினோ அடிப்படையிலான தொழில்நுட்ப நிறுவனமான முக்கிய சாப்ட்வேர் அப்டேட்டான iOS 16 அடங்கும் என்று கூறப்படுகிறது.

ஆப்பிள் iOS 16 இல் என்ன புதுசா இருக்கு?

லாக் ஷ்கிரீன் விட்ஜெட்டுகள்

ஐபோனில் iOS 16 எம்பேடெட் விட்ஜெட்களுடன் வால்பேப்பர்களை அமைக்க பயனர்களுக்கு இந்த புதிய அம்சம் அனுமதிக்கிறது. மிஸ்ட்டு கால், டெக்ஸ்ட் நோட்டிபிகேஷன் மற்றும் அப்கம்மிங் அலெர்ட் போன்ற தகவல்களை விரைவாக ஆக்சஸ் செய்ய, இந்த விட்ஜெட்களை லாக் ஷ்கிரீனில் இருந்து நேராகப் பார்க்கலாம். மேலும் Customisation options-களை உடனடியாக உள்ளிட பயனர்கள் லாக் ஷ்கிரீனில் நீண்ட நேரம் அழுத்தவும். 

 

iCloud ஷேர்டு போட்டோ லைப்ரரி

ஐபோனில் பயனர்கள் ஒரு தனி iCloud லைப்ரரியை உருவாக்கலாம். இப்பொழுது வெளியான புதிய அம்சம், பொதுவான நூலகத்தில் ஐந்து பேர் வரை பங்களிக்க அனுமதிக்கிறது. இதில் என்ன சிறப்பு என்றால், அந்த லைப்ரரியில் ஈடுபட்டுள்ள பயனர்கள் ஏதேனும் பார்க்க விரும்பினால் அந்த போட்டோக்களை அணுக முடியும். நீங்கள் மற்ற பங்களிப்பாளர்களுடன் படங்களை எடுக்கும்போது, ஷேர்டு லைப்ரரியில் தானாகப் பகிரப்படும் புகைப்படங்களுடன் பயனர்கள் புத்திசாலித்தனமாகப் பகிரலாம்.

மெசேஜ் ஆப்

இந்த iOS 16 அப்டேட்டில் ஆப்பிள் நிறுவனம் மூன்று முக்கிய அம்சங்களை சேர்க்கிறது. அது என்னென்ன என்றால்,

  • நீங்கள் ஏற்கனவே அனுப்பிய செய்திகளைத் திருத்த உங்களுக்கு அனுமதி வழங்கப்படுகிறது.
  • பயனர் தாங்கள் அனுப்பிய மெசேஜை 'undo' செய்ய முடியும். ஆனால் வாட்ஸ்அப் போல் திருத்தங்களை காண்பிக்காது.
  • பயனர்கள் படித்த மெசேஜை, ஈமெயிலில் செய்வது போல் 'unread'  எனக் குறிக்கவும் உதவுகிறது.

மெயில்களுக்கான புதிய டூல்ஸ்

iOS 16 உடன், பயனர்கள் இப்போது ஈமெயில்களை முன்கூட்டியே schedule செய்யலாம். அப்படி ஒரு வேலை அது வேண்டாம் என்றால், அந்த மெயிலை பெறுநரின் இன்பாக்ஸை அடைவதற்கு முன்பு டெலீட் செய்யலாம். மெயில் ஆப் இப்பொழுது ஈமெயிலில் விடுபட்டுள்ள அட்டாச்மெண்ட்ஸ் போன்றவற்றை தானாகவே கண்டறிந்து, அதைப் பயனருக்குத் தெரியப்படுத்துகிறது.

ஷேர்பிளே

ஆப்பிள் ஐபோனில் வந்துள்ள iOS 16 அப்டேட்டில், பயனர்கள் FaceTime மட்டுமின்றி Messages மூலமாகவும் நேரடியாக SharePlayக்கு செல்லலாம். பயனர்கள் இப்போது Messages இல் SharePlay மூலம் மற்ற பயனர்களுடன் சரியான ஒத்திசைவில் (sync) உள்ளடக்கத்தைப் பார்க்கலாம்.

பாதுகாப்பு சோதனை

iOS 16 இல் இருக்கும் இந்த அம்சம் முக்கியமாக domestic abuse மற்றும் வன்முறையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும் வகையில் அமல்படுத்தப்பட்டுள்ளது. எனவே, இந்த பாதுகாப்பு சோதனை (Safety Check) எனப்படும் புதிய தனியுரிமை அம்சம் பயனர்களை தவறான உறுப்பினருடன் இருந்து விலக அனுமதிக்கிறது. அதாவது லொகேஷன் மற்றும் மெசேஜ்களுக்கான ஆக்சஸ் போன்றவற்றை துண்டிக்க உதவுகிறது. மேலும் இது போன்ற கொடுமைகளை அனுபவிக்கும் பெண்கள், யாருக்கு அணுகலை வழங்குகிறார்கள் என்பதை நிர்வகிக்கவும் உதவுகிறது.

இதுமட்டும் இல்லாமல் New notification center, Live Activities, Live Text gets video support, Visual Look Up improvements, Apple Wallet, New CarPlay, Improved dictation, Apple Maps, Apple News gets MySports, Improved Parental Controls போன்ற நிறைய அம்சங்கள் புதுப்பிக்கப்பட்டுள்ளது.

எந்த ஐபோன் மாடல்களுக்கு இந்த புதிய iOS 16 அப்டேட் பெறப்போகிறது?

இந்த iOS 16 அப்டேட், ஐபோன் 8 மற்றும் அதற்கு பிறகு வந்துள்ள ஐபோன்களுக்கு கிடைக்கும். அதில் முதன்மை எண்-தொடர் ஐபோன்கள், iPhone XR மற்றும் iPhone SE இன் மூன்று வகைகளும் அடங்கும். ஆப்பிள் டெவலப்பர் ப்ரோகிராம் மூலம் iOS 16 க்கான முதல் பீட்டாவை ஆப்பிள் விரைவில் வெளியிடும். அதே போல் இந்த ஆண்டின் பிற்பகுதியில் ஆதரிக்கப்படும் அனைத்து சாதனங்களுக்கும் நிலையான அப்டேட் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Apple iOS 16, Apple iOS 16 update, apple ios 16 release date, apple ios 16 beta, apple ios 16 developer beta, apple ios 16 wallpaper, apple ios 16 beta profile, apple ios 16 features, 

உடனுக்குடன் செய்திகளை (Technology News) தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்