Sat ,Apr 13, 2024

சென்செக்ஸ் 74,244.90
-793.25sensex(-1.06%)
நிஃப்டி22,519.40
-234.40sensex(-1.03%)
USD
81.57
Exclusive

Apple iPhone 14 Pro Price in India: ஆப்பிளின் iphone 14 pro, 14 pro max பிரம்மாண்ட அறிமுகம்!

Priyanka Hochumin September 08, 2022 & 11:25 [IST]
Apple iPhone 14 Pro Price in India: ஆப்பிளின் iphone 14 pro, 14 pro max பிரம்மாண்ட அறிமுகம்!   Representative Image.

Apple iPhone 14 Pro Price in India: ஆப்பிள் நிறுவனம் தங்களின் அடுத்த பிரம்மாஸ்திரத்தை களமிறக்க உள்ளது. அதாவது ஐபோன் 14 மற்றும் ஐபோன் 14 பிளஸ் உடன் சேர்த்து ப்ரீமியம் மாடல்களான ஐபோன் 14 ப்ரோ மற்றும் ஐபோன் 14 மேக்ஸூம் அறிமுகம் செய்யவுள்ளது. இந்த பதிவில் முற்றிலும் புதுமையாக மேம்படுத்தப்பட்ட ஐபோன் 14 ப்ரோ மற்றும் ஐபோன் 14 மேக்ஸ் மாடல்களின் விவரங்களை தெரிந்துகொள்வோம்.

Apple iPhone 14 Pro சிறப்பம்சங்கள்

டிஸ்பிளே - இதுவரை பார்க்காத புதுமையான 6.1-இன்ச் சூப்பர் ரெடினா எக்ஸ்டிஆர் ஓஎல்இடி டிஸ்ப்ளேவைக் கொண்டுள்ளது. மேலும் 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரஷிங் ரேட் மற்றும் 2000 நிட்ஸ் உச்ச பிரகாச நிலை ஆதரவு உள்ளது. இதில் இருக்கும் HDR அம்சம் பரந்த வண்ண வரம்பு ஆதரவை (wide color gamut support) வழங்குகிறது.

சிப்செட் - இதில் புதுவித சிப்செட் ஒன்று பொருத்தப்பட்டுள்ளது. ஆப்பிள் ஐபோன் 14 ப்ரோ 4nm-அடிப்படையிலான A16 பயோனிக் சிப் மூலம் இயக்கப்படுகிறது. இந்த மாறியான சிப்செட் பயன்படுத்துவதால் கேமிங் மற்றும் கிராபிக்ஸ் செயல்திறன் முற்றிலும் மேம்படுத்தப்பட்டு வழங்கப்படுகிறது.

கேமரா - Apple iPhone 14 Pro போனில் 48MP பிரைமரி குவாட்-பிக்சல் சென்சார், 12MP டெலிஃபோட்டோ லென்ஸ் மற்றும் 12MP அல்ட்ரா வைட்-ஆங்கிள் கேமரா என டிரிபிள் ரியர் கேமரா அமைப்பை உள்ளது. மேலும் எந்த நேரத்திலும் துல்லியமாக போட்டோ எடுக்க போர்ட்ரெய்ட், நைட் மோட், நைட் மோட் போர்ட்ரெய்ட், ஸ்டெபிலைசேஷன் டூயல் ஓஐஎஸ், ஸ்மார்ட் எச்டிஆர், மேக்ரோ மோட், ஆப்பிள் ப்ரோரா உள்ளிட்ட பல்வேறு கேமரா ஆதரவுகள் இதில் இருக்கிறது. ஒரு வேளை வீடியோ எடுப்பதாக இருந்தால் 4k தரத்தில் சும்மா சூப்பர் கிளாரிட்டியுடன் எடுக்க முடியும்.

செல்பி கேமரா - வீடியோ கால் மற்றும் செல்பி ஆகியவற்றிற்கு Apple iPhone 14 Pro-வின் முன்புறத்தில் 12MP ஸ்னாப்பர் பொருத்தப்பட்டுள்ளது. செல்பி கேமரா நாட்ச் உடன் கவர் ஆகிய டிஸ்பிளே காட்சியைக் கொண்டுவருவதால் இந்த போனில் செல்பி கேமரா இருக்கிறது நிறைய பேத்துக்கு தெரியாது. ஏதாவது ஒரு நோட்டிபிகேஷன் வந்தா வேண்ணா தெரியலாம்.

பேட்டரி - எப்பையும் போல பேட்டரி மற்றும் ரேம் விவரங்களை நிறுவனம் வெளியிடவில்லை. ஆனால் ஒருமுறை சார்ஜ் செய்தால் ஒரு நாள் முழுவதும் தாங்கும் என்று மதிப்பிடப்படுகிறது. வயர் மற்றும் வயர்லெஸ் சார்ஜிங் ஆதரவுடன் மேக்சேஃப் வயர்லெஸ் சார்ஜிங் ஆதரவும் இதில் உள்ளது. இந்த புதிய Apple iPhone 14 Pro , iOS 16 மூலம் இயங்குகிறது.

Apple iPhone 14 Pro Max அம்சங்கள்

ஆப்பிள் 14 ப்ரோவிற்கும் ஆப்பிள் 14 ப்ரோ மேக்ஸ்-க்கும் பெரிய வித்தியாசம் ஒன்றும் இல்லை. ஏதேனும் ஒருசில வித்தியாசங்களே உள்ளன. 6.7 இன்ச் சூப்பர் ரெடினா எக்ஸ்டிஆர் ஓஎல்இடி டிஸ்ப்ளே இதில் பொருத்தப்பட்டுள்ளது. 120Hz வரையிலான அடாப்டிவ் ரெஃப்ரஷிங் ரேட் உடன் ProMotion ஆதரவு இதில் இருக்கிறது. ப்ரோ மாடலை விட ப்ரோ மேக்ஸ் எடை சற்று அதிகமாக இருக்கும் என்று கூறப்படுகிறது.

GB Variant

Apple iPhone 14 Pro விலை

Apple iPhone 14 Pro Max விலை

128 ஜிபி வேரியண்ட்

ரூ. 1,29,900/-

ரூ. 1,39,900/-

256 ஜிபி வேரியண்ட்

ரூ. 1,39,900/-

ரூ. 1,49,900/-

512 ஜிபி வேரியண்ட்

ரூ. 1,59,900/-

ரூ. 1,69,900/-

1 டிபி வேரியண்ட்

ரூ. 1,79,900/-

ரூ. 1,89,900/-

இந்த இரண்டு மாடல் ஸ்மார்ட்போன்களும் ஸ்பேஸ் பிளாக், சில்வர், கோல்ட் மற்றும் டீப் பர்பில் என்ற வண்ண விருப்பங்களில் கிடைக்கிறது. Apple iPhone 14 Pro மற்றும் Apple iPhone 14 Pro Max செப்டம்பர் 9 ஆம் தேதி மாலை 5.30 முதல் முன்பதிவிற்கு கிடைக்கிறது. பிறகு செப்டம்பர் 16 ஆம் தேதி முதல் விற்பனை மூலம் வாங்க முடியும்.

Tags | Apple iPhone 14 Pro Price in India, Apple iPhone 14 Pro max Price in India, apple iphone 14 pro price, apple iphone 14 pro max, Apple iPhone 14 Pro max Price in USA, Apple iPhone 14 Pro Price in USA, Apple iPhone 14 Pro max colors, Apple iPhone 14 Pro Max Price in Dubai, Apple iPhone 14 Pro colors, Apple iPhone 14 Pro Price in Dubai.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்