Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

நாம எதிர்பார்த்த கூகுளின் முதல் Foldable Phone எப்ப வருது தெரியுமா? | Google Pixel Foldable Phone

Priyanka Hochumin Updated:
நாம எதிர்பார்த்த கூகுளின் முதல் Foldable Phone எப்ப வருது தெரியுமா? | Google Pixel Foldable PhoneRepresentative Image.

கூகுள் நிறுவனம் தனது பிக்சல் ஃபோல்ட் சாதனத்தை வரும் மே 10, 2023 ஆம் தேதி அதிகாரபூர்வமாக அறிவிக்க திட்டமிட்டுள்ளது.

கூகுள் நிறுவனம் ஒவ்வொரு ஆண்டும் கூகிள் I/O நிகழ்வை நடத்துவதுண்டு. அதில் கூகுள் நிறுவனம் வெளியிடபோகும் தொழில்நுட்ப அம்சங்கள், சாதனங்கள் பற்றிய விவரங்கள் முழுமையாக தெரிவிக்கப்படும். அதே போல, இந்த ஆண்டு கூகிள் I/O நிகழ்வு வரும் மே 10, 2023 அன்று நடைபெற உள்ளது. அந்த நிகழ்வில் நாம் அனைவரும் எதிர்பார்த்துக் கொண்டிருந்த கூகுள் பிக்சல் ஃபோல்ட் சாதனத்தை அறிமுகம் செய்ய உள்ளதாக ட்விட்டரில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளனர்.

வதந்திகள் அடிப்படையில் கூகுள் பிக்சல் ஃபோல்ட் அம்சங்கள் - இந்த டிவைஸ் 5.8 இன்ச் மற்றும் டேப்லெட்டாக விரியும் போது 7.6 இன்ச் ஆக இருக்கும். சாதனம் கூகுள் டென்சர் ஜி2 செயலியை உள்ளடக்கியுள்ளது. மடிக்கக்கூடிய ஃபோனில் இதுவரை இல்லாத அளவுக்கு இந்த சாதனம் நீடித்திருக்கும் கீலைக் கொண்டிருகிறது. இதன் விலை சுமார் $1,700 (சுமார் ரூ.1,38,845) என கூறப்படுகிறது. இந்த தகவல் அனைத்துமே வதந்திகளின் அடிப்படையில் அளிக்கப்பட்டுள்ளது.

வீடியோவின் அடிப்படையில் சாதனத்தின் டிசைன் விவரங்கள் - பிக்சல் வரிசையில் வெளியான சாதனைகளின் காட்சியைத் தான் இந்த பிக்சல் ஃபோல்டு சாதனமும் கொண்டுள்ளது. அந்த வீடியோவில் இன்டர்னல் கேமரா பற்றிய விவரம் எதுவும் இல்லை. ஒருவேளை இந்த மாடலுக்கு கூகுள் கேமராவைத் தவிர்க்கலாம் அல்லது அண்டர் டிஸ்ப்ளே கேமராவை அறிமுகப்படுத்தலாம். இதைப் பற்றிய முழு விவரமும் கூடிய விரைவில் தெரிய வரும்.

டீசர் வீடியோவின் அடிப்படையில், முன் எதிர்கொள்ளும் திரையானது உள்ளே திரையில் தெரியும் மடிப்புடன் கணிசமாக பெரியது. மேலும் ஆண்ட்ராய்டின் மெட்டீரியல் யுஐ டிசைன் இன்டர்-பேஸைக் காட்டுகிறது. மெட்டல் விளிம்பில் பவர் மற்றும் வால்யூம் ராக்கர்கள் தென்பட்டுள்ளது. இந்த சாதனத்தின் முழுமையான அம்சங்களைத் தெரிந்துக்கொள்ள மே 10 ஆம் தேதி வரை காத்திருக்க வேண்டும். 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்