Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Apps that Banned in India: உங்க ஸ்மார்ட்போன்ல இந்த ஆப் இருக்கா...உடனே தூக்கிடுங்க!

Priyanka Hochumin May 16, 2022 & 16:05 [IST]
Apps that Banned in India: உங்க ஸ்மார்ட்போன்ல இந்த ஆப் இருக்கா...உடனே தூக்கிடுங்க!Representative Image.

Apps that Banned in India: நமது ஸ்மார்ட்போனில் சுமார் 2 ஆண்டுகளுக்கு மேல் அப்டேட் செய்யப்படாத செயலிகளை நீக்க கூகுள் பிலே ஸ்டார் மற்றும் ஆப்பிள் ஆப் ஸ்டார் திட்டமிட்டுள்ளது. 

உலகின் டெக் ஜாம்பவான்களான கூகுள் மற்றும் ஆப்பிள் நிறுவனம் டெவெலப்பர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. அது என்னவென்றால், குறிப்பிட்ட காலத்திற்குள் எந்தெந்த ஆப்ஸ் அப்டேட் செய்யப்படாமல் இருக்கிறதோ அதை அகற்ற முடிவெடுத்துள்ளதாக தெரிவித்துள்ளது. இதை பற்றி புள்ளி விவரத்துடன் சொல்ல வேண்டும் என்றால், Pixalate என்னும்  Analytics நிறுவனம் வெளியிட்ட அறிக்கை தெரிவிப்பது, கூகுள் பிலே ஸ்டார் (Apps Banned by Google Play Store) மற்றும் ஆப்பிள் ஆப் ஸ்டார் ஆகியவற்றில் இருந்து சுமார் 30% செயலிகள் ஆபத்தில் இருப்பதாக குறிப்பிடுகிறது. அது 15 லட்சத்திற்கும் அதிகமான செயலிகள் அளவைக் கொண்டுள்ளது. 

ஏன் இந்த முடிவு? | Apps Banned in India 2022 

இவர்கள் இந்த முடிவிற்கு வர காரணம், கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக செயலிகளில் அப்டேட்கள் வெளியிடாததே இதற்கு காரணம் என்று கூறப்படுகிறது. குழந்தைகளுக்கு பிடித்த, அன்றாட வாழ்க்கையில் தேவையான மற்றும் விளையாட்டு, கல்வி போன்ற முக்கிய செயலிகள் இதில் இடம்பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

Pixalate வெளியிட அதிர்ச்சி தகவல், சுமார் ஐந்து ஆண்டுகளுக்கு மேலாக பயனர்களுக்கு அப்டேட் வழங்காத செயலிகள் எண்ணிக்கை 3 லட்சத்து 14 ஆயிரமாகும். இதில் ஆப்பிள் ஆப் ஸ்டோரில், 58% அதாவது ஒரு லட்சத்து 84 ஆயிரம் செயலிகளும், 42% கூகுள் பிலே ஸ்டோரில் (Apps Banned by Google Play Store) இருந்து கண்டறியப்பட்டதாக தெரிவித்துள்ளது. இப்படி இருந்தா இந்த முடிவை எடுக்காமல் என்ன செய்வார்கள்.

பயனர்களுக்கு ஆபத்தா? | Apps Banned in India 2022  

இவர்களின் இந்த எச்சரிக்கையை கருத்தில் கொண்டு, 2022 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் 13 லட்சத்திற்கும் அதிகமான செயலிகள் அப்டேட் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த அப்டேட் வழங்கப்படாத செயலிகளை வைத்திருக்கும் பயனர்களுக்கு ஏதேனும் பாதிப்புகள் இருக்கிறதா? எந்த பயனர்களின் ஸ்மார்ட்போனில் அந்த குறிப்பிட்ட செயலிகளை டவுன்லோட் செய்தலும் அவர்களுக்கு எந்த பாதிப்பும் இருக்காது என்று ஆப்பிள் நிறுவனம் திட்டவட்டமாக குறிப்பிட்டுள்ளது. 

இதற்கான காரணம்? | Apps Banned in India 2022 

அப்படி இந்த செயலிகளை அப்டேட் செய்யாமல் விடுவதால் என்ன சிக்கல் ஏற்படும்? இந்த கேள்விக்கு கூகுள் அளித்த பதில். கூகுள் பிலே ஸ்டாரின் (Apps Banned by Google Play Store) முக்கிய இலக்கு நிலையான API தேவைகளை விரிவுபடுத்துவது என்று கூறியது. இதற்கான பொருள், ஒரு வருடத்திற்குட்பட்ட இயங்குதள API தேவைகளை (operating system API requirements) புதிய செயலிகள் மற்றும் அப்டேட்கள் பூர்த்தி செய்ய வேண்டும். மேலும் அப்டேட் செய்யப்படாத செயலிகளில் செக்யூரிட்டி ஆபத்து அதிகமாக இருக்கும். ஒரு வேலை செயலிகள் அப்டேட் ஆகவில்லை என்றால், அவை பாதுகாப்பு இணைப்புகளைப் (security patches) பெறாது. ஒரு டெவலப்பர் விளம்பரதாரர்களிடமிருந்து வருமானம் பெற விரும்பினால், தொடர்ந்து செயலியை அப்டேட் செய்ய வேண்டும். 

லாஸ்ட் தேதி எப்பொழுது? | Apps Banned in India 2022 

ஆப்பிள் நிறுவனம், டெவலப்பர்களுக்கு ஈமெயில் மூலம் செயலிகளை 30 நாட்களுக்கும் அப்டேட் செய்யவில்லை என்றால் செயலிகள் ஆப் ஸ்டோரில் இருந்து அகற்றப்படும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளது. ஆப்பிள் நிறுவனம் எப்பொழுது செயலிகளை அகற்றப்போகிறது என்று தெரியவில்லை. 

ஆனால் கூகுள் நிறுவனம் (Apps Banned by Google Play Store) சற்று கால அவகாசத்தை நீட்டி கொடுத்துள்ளது. வரும் நவம்பர் 1, 2022 ஆம் தேதிக்குள் செயலிகளை அப்டேட் செய்யவில்லை என்றால் மற்றும் புதிய இயங்குதளத்திற்கு ஏற்ற வாறு மாற்றம் செய்யவில்லை என்றால் அந்த தேதிக்கு பின்பு செயலிகள் அகற்றப்படும் என்று திட்டவட்டமாக குறிப்பிட்டுள்ளது. 

உடனுக்குடன் செய்திகளை (Technology News) தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்