Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

பூமிக்கு நீர் கொண்டு வரப்பட்ட காரணம்...அதிர்ச்சி தகவல்களை வெளியிட்ட ஆராய்ச்சியாளர்கள்!

Priyanka Hochumin August 16, 2022 & 17:00 [IST]
பூமிக்கு நீர் கொண்டு வரப்பட்ட காரணம்...அதிர்ச்சி தகவல்களை வெளியிட்ட ஆராய்ச்சியாளர்கள்!Representative Image.

சூரிய குடும்பத்தில் பூமியில் மட்டும் உயிர் வாழ காரணம் என்ன? தண்ணீர் இங்கு மட்டும் எப்படி இருக்கும்? என்று என்னைக்காவது நீங்க யோசித்து இருக்கிறீர்களா? என்னைக்குமே கேள்வி ஒன்று இருந்தால் அதற்கான பதில் கட்டாயம் நமக்கு கிடைக்கும். அந்த வகையில் பூமியில் தண்ணீர் எப்படி உருவாகியிருக்கும் என்று ஜப்பானிய ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

வருஷக்கணக்கா நடந்த ஆராய்ச்சி!

சுமார் ஆறு வருட ஜப்பானிய விண்வெளிப் பயணத்தில் சேகரிக்கப்பட்ட அரிய மாதிரிகளை (sample) விஞ்ஞானிகள் ஆராய்ச்சி செய்து வருகின்றனர். சூரிய மண்டலத்தின் வெளிப்புற விளிம்புகளில் இருந்து சிறுகோள்களால் பூமிக்கு நீர் கொண்டு வரப்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது.

ஹயபுசா-2 கொண்டுவந்த சாம்பிள்

இந்த பிரபஞ்சம் எப்படி உருவானது மற்றும் உயிரின் தோற்றம் குறித்து நாடாகும் தேடல் பணியில், 2020ல் ரியூகு என்ற சிறுகோளில் இருந்து பூமிக்கு கொண்டு வரப்பட்ட பொருட்களை ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு செய்து வருகின்றனர். அந்த பொருட்கள் 5.4 கிராம் (0.2 அவுன்ஸ்) பாறைகள் மற்றும் தூசிகளாகும். அவற்றை ஹயபுசா-2 எனப்படும் ஜப்பானிய விண்வெளி ஆய்வு மூலம் சேகரிக்கப்பட்டன. அது விண்ணுலகில் தரையிறங்கி அதன் மேற்பரப்பில் ஒரு "இம்பாக்டரை" செலுத்தியதாக கூறப்படுகிறது.

பூமியில் கடல் உருவனத்திற்கான காரணம்!

இந்த் சாம்பிள் பற்றிய ஆய்வுகள் வெளியிடத் தொடங்கியுள்ளன. மேலும் ஜூன் மாதத்தில் ஒரு குழு ஆராய்ச்சியாளர்கள் கரிமப் பொருட்களைக் கண்டுபிடித்ததாகக் கூறினர். அது பூமியில் உயிர் வாழ்வதற்கு தேவையான அமினோ அமிலங்கள் விண்வெளியில் உருவாகியிருக்கலாம் என்பதைக் காட்டுகிறது.

அதே போல், Ryugu மாதிரிகள் பல பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு பூமியில் கடல்கள் எவ்வாறு தோன்றின என்ற மர்மத்திற்கான விடை கிடைக்கும் என்று விஞ்ஞானிகள் கூறியதாக, Nature Astronomy இதழில் வெளியிடப்பட்டது. மேலும் திங்களன்று வெளியிடப்பட்ட ஜப்பான் மற்றும் பிற நாடுகளைச் சேர்ந்த விஞ்ஞானிகளின் ஆய்வில், "கொந்தளிப்பான (Volatile) மற்றும் கரிம நிறைந்த சி (organic-rich C) டைப் சிறுகோள்கள் பூமியின் நீரின் முக்கிய ஆதாரங்களில் ஒன்றாக இருந்திருக்கலாம்" என்று தெரிவித்துள்ளது.

அது எப்படி இவ்ளோ உறுதியாக சொல்றாங்க?

இப்ப நமக்கு ஒரு சந்தேகம் வரும் எதுக்கு இந்த் ஆவியாகும் பொருட்கள் பூமிக்கு வந்திருக்கும்? பிறகு எப்படி வந்திருக்கும்? ஆனால் இதற்கான பதில் இப்போதேய்க்கு நம்மிடம் இல்லை. ஆனால் இந்த ஆய்வில் கிடைத்த கரிம பொருட்கள் மிக முக்கிய ஆதார பொருட்களாக திகழ்கிறது. மேலும் அத்தகைய பொருட்கள் "வெளிப்புற சூரிய குடும்பத்தின் தோற்றம்" என்று விஞ்ஞானிகள் கருதுகின்றனர். ஆனால் இது "ஆரம்பகால பூமிக்கு வழங்கப்பட்ட ஆவியாகும் பொருட்களின் ஒரே ஆதாரமாக இருக்க வாய்ப்பில்லை" என்று கூறினார்.

Asteroid ryugu, asteroid ryugu amino acids, asteroid ryugu outer solar system water earth, asteroid ryugu sample, Hayabusa mission, outer solar system study.

உடனுக்குடன் செய்திகளை (Technology News) தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்