Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Super Earth Planet: மனிதர்கள் வாழ்வதற்கு தகுதியான கிரகம் 'சூப்பர் எர்த்' கண்டுபிடிப்பு!

Priyanka Hochumin August 06, 2022 & 12:30 [IST]
Super Earth Planet: மனிதர்கள் வாழ்வதற்கு தகுதியான கிரகம் 'சூப்பர் எர்த்' கண்டுபிடிப்பு! Representative Image.

Super Earth Planet: மனிதர்கள் வாழ்வதற்கு தகுதியான பண்புகளைக் கொண்ட பூமியைப் போலவே ஒரு சூப்பர் எர்த்தை ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். எதனை அடிப்படையாகக் கொண்டு இந்த முடிவுக்கு வந்தனர், அது எப்படி பட்ட கிரகமாக இருக்கும் என்று பல கேள்விகள் நம்முள் தோன்றும். அதற்கு விளக்கம் அளிக்கும் வகையில் இந்த பதிவு இருக்கும் என்று நம்புகிறோம்.

இது தான் இயற்கை, என்று நம் முன்னோர்கள் சொல்வதை சற்றும் ஏற்காமல் தங்களின் தேடுதலை தொடங்கியுள்ளனர் ஆய்வாளர்கள். அதாவது இந்த பெரிய பிரபஞ்சத்தின் மிகப்பெரிய பால்வெளி மண்டலத்தில் மனிதம் இனம் வாழ்வதற்கு தகுதியானது பூமி மட்டும் தான் என்னும் கருத்தை ஆய்வாளர்கள் ஏற்க மறுக்கின்றனர். நிச்சியம் பூமியைப் போலவே ஏதேனும் ஒரு கிரகத்தில் உயிரினங்கள் வாழும் தகுதி இருக்கும் என்ற நம்புகின்றனர்.

அது தான் இது!

அவர்களின் இந்த நம்பிக்கைக்கு பாத்திரமாக 'சூப்பர் எர்த்' என்ற கிரகத்தை ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். இவர்களின் இந்த தேடல் எந்த அளவுக்கு போயிருக்கிறது என்றால், சூரியக் குடும்பம், பால்வீதி கேலக்ஸிகளையம் தாண்டிவிட்டது. இவ்ளோ தூரங்கள் மற்றும் தடைகளைத் தாண்டி கண்டுபிடித்தாலும் இதில் ஒரு சிக்கல் உள்ளது. அது என்னவென்றால், இந்த கிரகம் சுற்றுவட்ட பாதையில் நேராக செல்லாமல் உள்ளே வெளியே என்று மாறி மாறி செல்வதாக ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர். இது இருந்தால் பரவால்ல என்று கூறும் வகையில், இந்த பிரச்சனை இருந்தாலும் மற்ற கிரகங்களைக் காட்டிலும் வெப்பம் சற்று குறைவாகவே உள்ளது. எனவே, இந்த கிரகத்தில் உயிரினங்கள் வாழ்வதற்கான வாய்ப்பு அதிகமாக இருக்கிறது.

இப்ப அடுத்தது தண்ணீர்...

இனி அடுத்த கட்ட நடவடிக்கையாக பிரபல ஜேம்ஸ் வெப் டெலஸ்கோப் பயன்படுத்தி இந்த கிரகத்தின் மேற்பரப்பில் நீர் இருக்கிறதா என்று சோதனை மேற்கொள்ளலாம். ஏனெனில் Ross 508 b என்று அழைக்கப்படும் இந்த கிரகமானது சூரியனைப் போன்ற ஒரு நட்சத்திரத்தை தான் சுற்றி வருகிறது. எனவே, இங்கு தண்ணீர் இருக்க அதிக வாய்ப்புள்ளதாக ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

கரெக்ட் டிஸ்டன்ஸ்ல இருக்கனும்

அந்த நட்சத்திரத்தில் இருந்து இந்த சூப்பர் எர்த் கிட்டையும் இருக்கக்கூடாது தொலைவாகவும் இருக்கக்கூடாது. ஏன் என்றால் ரொம்ப குறைவான தூரத்தில் இருந்தால் தண்ணீர் ஆவியாகிவிடும், தொலைவான தூரத்தில் இருந்தால் தண்ணீர் உறைந்து போய்விடும். அதனால் சரியான தூரத்தில் இருக்க வேண்டும் அப்போது தான் அங்கு உயிரினங்கள் செழிப்பாக இருக்கும். அப்படி பட்ட சரியான தூரத்தில் தான் Ross 508 b இருக்கிறது. அது பூமியில் இருந்து 37 ஒளி ஆண்டுகள் தொலைவில் இருப்பதாக கூறப்படுகிறது. இந்த கிரகமானது சூரியனை விட ஐந்தில் ஒரு பங்கு நட்சத்திரத்தை சுற்றி வருகிறது.

ஆராய்ச்சிய தொடங்க வேண்டியது தான்...

இந்த கிரகம் பூமியின் நிறையை (Mass) விட நான்கு மடங்கு பெரியது. இந்த கிரத்திற்கும் அதனின் மைய நட்சத்திற்குமான தூரம் பூமி-சூரியன் தூரத்தை விட 0.05 மடங்கு அதிகமாக உள்ளது. இதற்கு பின்பு உயிரினங்கள் வாழ்வதற்கு சாத்தியம் உள்ளதா என்ற ஆராச்சியை ஆய்வாளர்கள் மேற்கொள்வார்கள் என்று கூறப்படுகிறது. வெப்பம் குறைவாகவே இருக்கிறது என்னும் காரணத்திற்காக இங்கு உயிரினங்கள் வாழ்வதற்கு தகுதியானது என்று கூறப்படுகிறது. இனி வரும் காலங்களில் இதே போன்று நிறைய ஆராய்ச்சிகளை மேற்கொண்டு உயிரினங்கள் வாழ தகுதியான நிறைய கிரகங்களை கண்டுபிடிக்கும் தேடலை ஆய்வாளர்கள் தொடங்குவார்கள் என்று நம்பப்படுகிறது.  

Super Earth Planet, Super Earth Planet discovered, Super Earth Planet name, super earth with possibility for life, super earth with possibility for life in tamil, super earth with possibility of life discovered, super earth with possibility of life discovered in tamil, super earth is real.

உடனுக்குடன் செய்திகளை (Technology News) தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்