Tue ,Apr 30, 2024

சென்செக்ஸ் 74,964.55
293.27sensex(0.39%)
நிஃப்டி22,723.90
80.50sensex(0.36%)
USD
81.57
Exclusive

சூரியனில் இருக்கும் அந்த ஒன்று...இல்லாமல் போனால்...என்ன ஆகும்!

Priyanka Hochumin October 19, 2022 & 21:00 [IST]
சூரியனில் இருக்கும் அந்த ஒன்று...இல்லாமல் போனால்...என்ன ஆகும்!Representative Image.

நமக்கு சயின்ஸ்னாலே ஞாபகம் வருவது ஐன்ஸ்டீன் தல மேல ஆப்பிள் விழுந்தது அவர் கண்டுபிச்சது, அப்புறம் சுவாசிக்க என்னெல்லாம் வேணும் இது போன்ற முக்கிய தகவல்கள் நமக்கு தெரிந்திருக்கும். ஆனால் இதெல்லாம் பாடங்களில் வருவதால் தான் நமக்கு தெரியும். இதையும் தாண்டி நிறைய சுவாரஸ்யமான அறிவியல் விளக்கங்கள் உள்ளது. அதெல்லாம் தெரிஞ்சிக்க ஆர்வமா இருக்குறவங்க தொடர்ந்து படிச்சு தெரிஞ்சிக்கோங்க.

சூரியனில் இருக்கும் அந்த ஒன்று...இல்லாமல் போனால்...என்ன ஆகும்!Representative Image

நெருப்பு ஏறிய எது தேவை...

இப்ப வீட்ல மெழுகுவர்த்திய பத்த வச்சி அது மேல ஒரு பாட்டில் வச்சீங்கன்னா நெருப்பு அணஞ்சி போயிடும். காரணம் அந்த பாட்டில் தாண்டி காற்று உள்ளே போகாததால் ஆக்ஸிஜன் கிடைக்காது, அதனால் நெருப்பு அமையும். இவ்ளோ சின்ன மெழுகுவர்த்தியே ஆக்ஸிஜன் கிடைக்கலைனா அமையுது, அப்போ விண்வெளியில காத்து இல்லையே அப்ப எப்படி சூரியன் மட்டும் எரிஞ்சிட்டே இருக்கு இதுல எது உண்மைனு பாக்கலாம்.

சூரியனில் இருக்கும் அந்த ஒன்று...இல்லாமல் போனால்...என்ன ஆகும்!Representative Image

பிளாஸ்மா என்றால் என்ன?

பொதுவாக பொருட்களில் solid, liquid, gas என்னும் மூன்று தான் இருக்குதுன்னு நினைப்போம். ஆனால் நாலாவது ஒன்னு இருக்கு, அது தான் plasma. இப்போ ஒரு பொருள்ல நடக்கும் வெவ்வேறு செயல்படால் கிடைக்கும் விடை தான் அந்த நாளும். விளக்கமா சொல்லனும்னா - ஐஸ் கட்டிய (solid) சூடு பண்ண தண்ணியா (liquid) மாறும். இப்ப அதை அதிகமா சூடு பண்ணா நீராவியா (Gas) மாறும். அடுத்து எப்படி பிளாஸ்மா நிலைக்கு கொண்டு வருவது தெரியுமா?

எல்லா அணுக்களுக்கும் உள்ளே இருப்பது protons மற்றும் neutrons. இவை இரண்டும் சேர்ந்தது தான் அந்த அணுவின் nucleus. அந்த nucleus சுற்றியும் electrons இருக்கும். நீராவி வடிவத்தில் இருப்பதை அதிக வெப்பத்தால் சூடாக்கும் போது electrons அந்த அணுவில் இருந்து பிரிந்து செல்லும். இந்த செயல்பாட்டிற்கு பெயர் தன ionization. இப்படி மூன்றாம் தரப்பால் ionize ஆகிய வாயு அணுக்களின் தொகுப்பைத் தான் plasma என்று கூறுகிறோம். 

சூரியனில் இருக்கும் அந்த ஒன்று...இல்லாமல் போனால்...என்ன ஆகும்!Representative Image

சூரியனில் நடக்கும் அறிவியல்....

சூரியன்ல அதிகமான பகுதி hydrogen-னால் ஆனது. அவரை சூரியனின் வெப்பத்தால் plasma நிலையில் இருக்கிறது. Hydrogen இன் nucleus இல் ஒரு proton அதை சுற்றி ஒரு electronம் இருக்கும். இவரை சூரியனின் வெப்பத்தால் தனி தனியே வேகமா அங்கிட்டு இங்கிட்டு சுத்திக்கிட்டே இருக்கும். இவற்றை சூரியனை விட்டு வெளியே செல்லவிடாமல் சூரியனின் ஈர்ப்பு விசை தான் சிதறிய proton மற்றும் electron-களை ஒண்ணா இழுத்து பிடிச்சிட்டு இருக்கு.

சூரியனில் இருக்கும் அந்த ஒன்று...இல்லாமல் போனால்...என்ன ஆகும்!Representative Image

இதனால் தான் எரியுதா...

சூரியனில் இருக்கும் எல்லா hydrogenம் பிளாஸ்மா நிலையில் தான் இருக்கும். பிளாஸ்மா நிலையில் இருக்கும் hydrogen atom இல் ஒரு proton இருக்கும். அது இன்னொரு proton உடன் மோதும் போது, அது neutrino மற்றும் positron போன்றவற்றை வெளியிட்டு ஒரு neutron ஆக மாறும். அந்த neutron இல் ஒரு proton, ஒரு neutron சேர்ந்து இருப்பதால் அதனை deuterium nucleus என்று கூறப்படுகிறது. இப்போ அந்த deuterium nucleus-ஐ ஒரு proton வந்து மோதும் போது gamma rays-ஐ வெளியிட்டு helium 3 nucleus ஆக மாறிடும்.

இதே மாறி உருவாக்கப்பட்ட helium 3 nucleus இரண்டும் ஒன்றோடு ஒன்று மோதும் போது அதில் இருக்கும் proton-ஐ வெளியிட்டு helium nucleusஆ மாறிடும். இதைத் தான் nuclear fusion என்று குறிப்பிடுகிறோம். சூரியனில் இந்த செயல்பாடு நடைபெறுவதால் தான் அது எரிவது போன்ற தோற்றத்தில் இருக்கிறதாம். எனவே, இதற்கு காற்று மூலம் கிடைக்கும் ஆக்ஸிஜன் தேவையில்லை.

சூரியனில் இருக்கும் அந்த ஒன்று...இல்லாமல் போனால்...என்ன ஆகும்!Representative Image

இது கடைசி வர நடந்துட்டே இருக்குமா?

இந்த ரியாக்ஷன் நடந்ததில் இருக்கும் proton மற்றும் கடைசியாக கிடைத்த helium nucleusம் சமமாக இருக்காது. இதை விட proton கம்மியாக இருப்பதால் தான், அது ஹீட் மற்றும் லைட் எனர்ஜியாக மாறி நமக்கு சூரிய ஒளியாக கிடைக்குது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்