Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

கேமிங் பிரியர்களுக்கான அசத்தலான மொபைல்! | Asus Rog Phone 7 Ultimate Specifications

Gowthami Subramani Updated:
கேமிங் பிரியர்களுக்கான அசத்தலான மொபைல்! | Asus Rog Phone 7 Ultimate SpecificationsRepresentative Image.

ஆசஸ் நிறுவனம் ஆனது, கேம் பிரியர்களால் விரும்பப்படும் Asus Rog Phone 7 மற்றும் Asus Rog Phone 7 Ultimate போன்றவற்றை இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் அம்சங்களை விரிவாகக் காணலாம்.

Asus Rog Phone 7 & Asus Rog Phone 7 Ultimate Specifications

இந்த இரண்டு மொபைல்களும், Qualcomm SM8550-AB Snapdragon Gen 2 மற்றும் android 13 உடனான OS-ஐக் கொண்டுள்ளது.

இந்த இரண்டு பிராண்டுகளும் 6.78 இன்ச் அமோல்டு டிஸ்பிளேயைக் கொண்டுள்ளது. மேலும், இதன் புதுப்பிப்பு வீதம் 165 ஹெர்ட்ஸ் அமோல்டைக் கொண்டுள்ளது. இதனைத் தொடர்ந்து, ஒரே ஸ்னாப்ட்ராகன் 8 ஜென் 2 சிப்செட்டைக் கொண்டுள்ளது. பேட்டரியைப் பொறுத்த வரை, 6000mAh பேட்டரியுடன் 65 வாட் வேகமான சார்ஜிங் அம்சத்தைக் கொண்டுள்ளது.

ROG Phone 7 Ultimate-ல் ஏரோ ஆக்டிவ் போர்டல் உள்ளது. இந்த மொபைலின் பின்புறத்தில் iconic ROG vision டிஸ்பிளேயைக் கொண்டுள்ளது. மெமரியைப் பொறுத்த வரை, 6 ஜிபி ரேம் + 512 ஜிபி உள் சேமிப்பைக் கொண்டிருக்கும். ஸ்னாப்டிராகன் செயலி Qualcomm Adreno 740 GPU உடன் இணைக்கப்பட்டுள்ளது.

ROG-ல் 12GB RAM-ம். ROG Phone 7 Ultimate 16 GB RAM-ஐ வழங்குகிறது.

ROG phone 7 series-ல் மூன்று பின்புற கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. 50MP Sony IMX766 பிரதான சென்சார், 13MP அல்ட்ரா-வைட் மற்றும் 8 MP Macro Camera அமைப்பைக் கொண்டுள்ளது. இந்த இரண்டு மொபைல்களும், முன் பக்க கேமராவைப் பொறுத்த வரை 32MB-ஐக் கொண்டுள்ளது.

நிறத்தைப் பொறுத்தவரை

ROG Phone 7 மாடல் இரண்டு வண்ண வகைகளில் கிடைக்கும் – Phantom Black மற்றும் Storm White

ROG Phone 7 Ultimate மாடல் ஆனது Storm White நிறத்தில் கிடைக்கும்.

விலை

Asus ROG Phone 7 மொபைல் ஆனது 12GB RAM + 256GB Internal Memory – ரூ.74,999 க்கு விற்பனை செய்யப்படுகிறது.

இந்தியாவில் Asus ROG Phone 7 Ultimate மொபைல் ஆனது 16GB RAM + 512 GB Internal Memory – ரூ.99,999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்