Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

யாருகிட்ட சவால் விடுறீங்க...இனி ட்விட்டர் அவ்ளோ தான்...திரெட்ஸ் ஆப் லான்ச் | Meta Launches Threads App

Priyanka Hochumin Updated:
யாருகிட்ட சவால் விடுறீங்க...இனி ட்விட்டர் அவ்ளோ தான்...திரெட்ஸ் ஆப் லான்ச் | Meta Launches Threads AppRepresentative Image.

ட்விட்டருக்கு போட்டியாக 'திரெட்ஸ்' எனும் செயலியை அசத்தலாக அறிமுகப்படுத்தியுள்ளார் மார்க் ஜூக்கர்பெர்க். திடீர் அறிமுகத்தால் உலக மக்கள் பல கேள்விகளுடன் குழப்பி இருக்கின்றனர். அவர்களின் குழப்பங்களைத் தீர்க்கவே இந்த பதிவு.

எலான் மஸ்க் vs மார்க் ஜூக்கர்பெர்க்:

உலகத்தின் நம்பர் 1 பணக்காரரான எலான் மஸ்க் அவ்வப்போது ட்விட்டரில் மற்றவர்களை வம்பிளித்து கேலி செய்வது வழக்கம். இப்படி சிறு சிறு விஷயங்களுக்கு ட்வீட் செய்தது, இறுதியில் ட்விட்டரை தனக்கானதாக மாற்ற வேண்டும் என்று நினைத்து அதனை வாங்கவும் செய்து விட்டார். அதற்கு பின்னர், அதில் பல மாற்றங்களை கொண்டு வரத் தொடங்கினார் எலான். இது அங்கு வேலை செய்யும் ஊழியர்களுக்கு மட்டும் அல்ல பயனர்களுக்கும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்த சமயத்தில் ட்விட்டருக்கு போட்டியாக ஒரு செயலியை அறிமுகம் செய்தால் நமக்கு சாதகமாக இருக்கும் என்று நினைத்து 'திரெட்ஸ்' எனும் செயலியை அறிமுகப்படுத்தியுள்ளார் மார்க் ஜூக்கர்பெர்க். அத்தோடு 'ட்விட்டருடன் கூண்டில் சண்டை போட தயாரா?' என்று ட்வீட் செய்த எலான் மஸ்க் அவர்களுக்கு பதிலடி தரும் விதமாகவும் இந்த அறிமுகம் அமைத்துள்ளது.

யாருகிட்ட சவால் விடுறீங்க...இனி ட்விட்டர் அவ்ளோ தான்...திரெட்ஸ் ஆப் லான்ச் | Meta Launches Threads AppRepresentative Image

திரெட்ஸ் என்றால் என்ன?

மெட்டா நிறுவனத்தின் திரெட்ஸ் செயலி அதிகாரபூர்வமாக ஜூலை 6, 2023 அன்று உலகளவில் அறிமுகம் செய்யப்பட்டது. திரெட்ஸ் என்பது இன்ஸ்டாகிராமில் டெக்ஸ்ட் அடிப்படையில் உரையாட உதவும் ஒரு செயலியாகும். இதன் மூலம் நீங்கள் நினைத்த எந்த தலைப்பையும் பயன்படுத்தி உரையாடலாம். உங்களின் கருத்துக்களை சுதந்திரமாக உலகிற்கு தெரிவிக்கலாம்.

தற்போதைக்கு, இந்த செயலியை ஐபோன் பயனர்கள் ஆப்பிள் ஸ்டோரில் இருந்து தாராளமாக டவுன்லோட் செய்துகொள்ளலாம். ஆனால் எல்லா பயனர்களுக்கும் கிடைக்குமா என்பது தகவல் இன்னும் வெளியிட வில்லை. மேலும் இன்ஸ்டாகிராம் அக்கவுண்ட் வைத்திருப்பவர்கள், திரெட்ஸ் செயலியை ஓபன் செய்து லாகின் செய்தலே போதும். இதற்காக தனி அக்கவுண்ட் ஓபன் செய்ய வேண்டிய அவசியம் இல்லை.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்