Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Assassin’s Creed கேமின் அசத்தலான டீசர் வெளியிடப்பட்டுள்ளது...Codename Red!

Priyanka Hochumin September 12, 2022 & 12:00 [IST]
Assassin’s Creed கேமின் அசத்தலான டீசர் வெளியிடப்பட்டுள்ளது...Codename Red!Representative Image.

கேம் பிரியர்களுக்கு அடுத்து மாஸ்ஸான கேம் ஒன்று வெளியாக போகிறது. தங்களின் புது அறிவிப்பில், யுபிசாஃப்ட் (Ubisoft) நிறுவனம் Assassin's Creed சீரிஸ் தற்போது ஜப்பானை நோக்கி செல்வதாக டீஸ் செய்துள்ளனர். மேலும் இது ஒரு புதிய மெயின்லைன் கேம் என்பதால், அவர்களின் தாயகத்தில் நிஞ்ஜாக்களுடன் இடம்பெறும் என்றும் தெரிவித்துள்ளனர். அதே போல் 2022 யுபிசாஃப்ட் ஃபார்வர்ட்  கேம் ஷோக்கேஸில் பிரெஞ்சு கேம் டெவலப்பர் தன்னுடைய புதிய கேம் ஒன்றை டீஸ் செய்ததாக கூறப்படுகிறது.

டீஸ் வீடியோவில் தெரிந்தது இதுவா?

டீஸ் செய்யப்பட்ட வீடியோவில் கீழே மட்டத்திலிருந்து குதித்து, வலது கையில் ஒரு வாளையும், இடது கையில் கையொப்பம் மறைத்து வைத்திருந்த கத்தியையும் காட்டி, ஒரு நிஞ்ஜா ஒரு வீட்டின் மேல் இறங்குவதை சுருக்கமாகப் பார்க்க முடிகிறது. ஜப்பானை தளமாகக் கொண்ட இந்த சாகச பயணம் தற்போதைக்கு "கோட் ரெட்" என்ற தலைப்பில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

கனவு நிறைவேறி விட்டது!

அசாசின்ஸ் க்ரீட் கோட் ரெட் கேமானது அடுத்து மேஜர் என்ட்ரியாக திகளப்படுகிறது. யுபிசாஃப்ட் கியூபெக் கேமின் ஆக்ஷன் டெவெலப்மென்டை நடத்தி வருவதாக கூறப்படுகிறது. சமீபத்தில் யுபிசாஃப்ட் Assassin’s Creed Mirage ஐ உறுதிப்படுத்தியது. இது Assassin’s Creed இன் விரிவாக்கப் பொதியாகத் (expansion pack) தொடங்குகிறது. இந்த கேமின் வரவேற்பிற்காக நீண்ட நாட்களாக மக்கள் காத்திருந்தனர். இப்பொழுது இன்னும் சிறிது நாட்களில் ஜப்பானுக்கு செல்வதால் கேம் பிரியர்கள் மிகுந்த ஆர்வத்துடன் இருப்பதாக தெரிகிறது. செகிரோ: ஷேடோஸ் டை டுவைஸ் மற்றும் கோஸ்ட் ஆஃப் சுஷிமாவுக்குப் பிறகு ஜப்பானில் அமைக்கப்படும் மற்றொரு பெரிய கேமாக கோட் ரெட் இருக்கப்போகிறது என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்