Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

நீட் தேர்வில் தோல்வி...தற்கொலைக்கு முயன்ற இளைஞர்...காப்பாற்றிய டெக்னாலஜிக்கு மக்கள் சலாம்!

Priyanka Hochumin September 10, 2022 & 16:40 [IST]
நீட் தேர்வில் தோல்வி...தற்கொலைக்கு முயன்ற இளைஞர்...காப்பாற்றிய டெக்னாலஜிக்கு மக்கள் சலாம்!Representative Image.

இப்போதைய காலகட்டத்தில் தற்கொலை மிகவும் சாதாரணமாக மாறிவிட்டது. தோல்வியை ஏற்க விரும்பாமல் தங்களுடைய உயிரை மாய்த்துக்கொள்ளும் சம்பவம் தினமும் நடந்து கொண்டு தான் இருக்கிறது. அதுவும் தேர்வு முடிவுகள் வெளியாகும் சமயத்தில் அதிகமாகவே நடப்பதை நாம் பார்த்து கொண்டு தான் இருக்கிறோம். மேலும் டெக்னாலஜி வளர்ந்து வருவதால் தாங்கள் தற்கொலை செய்யப்போவதை சோசியல் மீடியாவில் பதிவிட்டு இறந்து விடுகின்றனர்.

டெக்னாலஜி தான் தப்பு...

இந்த காலத்தில் சிறுசுங்க முதல் பெருசுங்க வரை எல்லாத்துக்கும் சோசியல் மீடியால அக்கவுண்ட் உள்ளது. அதனை வைத்துக் கொண்டு இல்லாத அட்டூழியம் செய்து கொண்டிருக்கின்றனர். தங்களின் பர்சனல் முதல் தற்கொலை வரை அனைத்தையும் பகிரங்கமாக பதிவிடுகின்றனர். இதற்கு கமெண்ட் செய்வதற்கென்றே ஒரு குரூப் இருக்கும். இதுபோன்ற அனாவசியமான செயல்கள் நடந்து கொண்டு இருக்கிறது.

ஆனா இனிமே அப்படி சொல்ல மாட்டாங்க!

இப்படி பண்றதெல்லாம் இவங்க பங்கிட்டு டெக்னாலஜி மேலே பலிய போட்டா என்ன பண்றது. ஆனா இனிமேல் அப்படி யாரும் சொல்ல மாட்டாங்க! ஏனெனில் பேஸ்புக்கின் உதவியால் ஒரு உயிரை காப்பாற்றியுள்ளனர். அது பற்றிய விரிவான தகவல் இதோ. உத்திரபிரதேச மாநிலத்தில் 29 வயதி இளைஞர் நீட் தேர்வில் தோல்வி அடைந்து பெரும் மன அழுத்தத்தில் இருந்துள்ளார். அந்த துக்கம் தாங்காமல் தான் தற்கொலை செய்துகொள்ளப் போவதாக பேஸ்புக்கில் பதிவிட்டுள்ளார். பிறகு விஷம் குடித்து தன் உயிரை மாய்த்துக்கொள்ள முயன்றுள்ளார்.

எப்படியும் காப்பாத்திட்டாங்க...

இருப்பினும் பேஸ்புக்கில் இருக்கும் ரியல் டைம் டெக்னாலஜி அந்த பதிவை கண்டறிந்து உத்திரபிரதேச காவல் துறைக்கு எச்சரிக்கை (SOS alert) தெரிவித்துள்ளது. இந்த தகவல் லக்னோ காவல்துறை அலுவலகத்திற்கு சென்ற உடன் சட்டம் ஒழுங்கு ஏடிஜிபி பிரசாந்த் குமார், அப்பகுதி காவல்துறைக்கு தகவல் தெரிவித்து அந்த இளைஞரை காப்பாற்றியுள்ளனர். இதனால் மக்களிடையில் பேஸ்புக் நிறுவனத்தின் இந்த கண்டுபிடிப்பிற்கு பெரும் பாராட்டை தெரிவித்து வருகின்றனர்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்