Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

BSNL 60 Days Additional Validity Plan: BSNL-ல நீங்க ரூ.2,399/-க்கு ரீசார்ஜ் பண்ணா...365 நாள் இல்ல...இனி 425 நாளுக்கு வேலிடிட்டி உண்டு!

Priyanka Hochumin May 27, 2022 & 21:10 [IST]
BSNL 60 Days Additional Validity Plan: BSNL-ல நீங்க ரூ.2,399/-க்கு ரீசார்ஜ் பண்ணா...365 நாள் இல்ல...இனி 425 நாளுக்கு வேலிடிட்டி உண்டு!Representative Image.

BSNL 60 Days Additional Validity Plan: பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் (பிஎஸ்என்எல்) வருடாந்திர ப்ரீபெய்ட் ரீசார்ஜிற்கான வேலிடிட்டியை கூடுதலாக 60 நாட்கள் வரை நீடித்துள்ளது. இன்னும் நீங்க BSNL-ல ரீசார்ஜ் பண்ணலைனா இந்த ஸ்கீம் எடுத்துக்கோங்க.

இந்தியாவில் இருக்கும் சர்வீஸ் ப்ரொவைடர்கள் புதிதாக நிறைய சலுகைகளை மக்களுக்கு கொண்டு வருகின்றனர். அது மக்களுக்கு மிகவும் பயனளிக்கும் வகையில் இருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. நீங்கள் போஸ்ட் பெய்ட் அல்லது ப்ரீபெய்ட் பயன்படுத்தினால் அதற்கான சலுகைகளைப் பெறுவீர்கள். அந்த வகையில் பிஎஸ்என்எல் தற்போது வெளியிட்ட ஆஃபர் ப்ரீபெய்ட் ஆப்ஷனுக்கு மட்டுமே.

இதற்கு முன்பு ப்ரீபெய்ட் ரீசார்ஜ் செய்யும் வாடிக்கையாளர்களுக்கு - டேட்டா, போன் கால் மற்றும் SMS அனைத்தும் 365 நாள் அல்லது ஒரு வருடதிற்கு அளிக்கப்பட்டது. தற்போது 60 நாட்கள் கூடுதல் வேலிடிட்டி வழங்கப்பட்டுள்ளது. எந்த சர்வீஸ் ப்ரொவைடராக இருந்தாலும் குறிப்பிட்ட ரீசார்ஜ்களுக்கு கூடுதல் வேலிடிட்டி பெரும் ஆப்ஷனை டெலிகாம் சர்வீஸ் ப்ரொவைடர் அடிக்கடி பயனர்களுக்கு வழங்குகிறது. அந்த வகையில் தற்போது அளித்துள்ள சலுகை ஜூன் மாதம் இறுதி வரை செல்லும், எனவே ரீசார்ஜ் செய்யாதவர்கள் உடனே செய்து கூடுதல் சலுகையைப் பெற்றுக்கொள்ளுங்கள். அட ச்ச இப்ப தான் ரீசார்ஜ் பண்ணேன் என்று நினைப்பவர்களுக்கும் ஒரு குட் நியூஸ். உங்களுக்கு இந்த வேலிடிட்டி செல்லுபடியாகும் என்பதை தெரிந்துகொள்ளுங்கள்.

இது குறித்த அறிக்கையை BSNL நிறுவனத்தின் அதிகாரபூர்வ வெப்சைட்டில் தெரிவிப்பது என்னவென்றால், ரூ. 2,399/-க்கு ரீசார்ஜ் செய்யும் வாடிக்கையாளர்களுக்கு 365 நாள் வேலிடிட்டி வழங்கப்பட்டது. அதை தற்போது கூடுதலாக்கி 425 நாட்கள் வரை நீட்டிக்கப்பட்டது. இது ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் ஜூன் 29 ஆம் தேதி வரை ரீசார்ஜ் செய்யும் அனைவருக்கும் இந்த சலுகை கிடைக்கும் என்று குறிப்பிட்டுள்ளது.

இதில் இருக்கும் பெனிபிட்ஸ்

இந்த ரீசார்ஜ் திட்டத்தின் கீழ் கிடைக்கும் பெனிபிட்ஸ் - வடிக்கையாளார்களுக்கு ஹோம், லோக்கல் சர்வீஸ் ஏரியா, மும்பை மற்றும் டெல்லியில் உள்ள MTNL நெட்வொர்க் உட்பட நேஷனல் ரோமிங்கில் அன்லிமிடெட் லோக்கல் மற்றும் STD வாய்ஸ் கால் போன்ற ஆக்சஸை பெறலாம். மேலும் ஒரு நாளைக்கு 2GB வரை ஹை ஸ்பீட் டேட்டா ஆக்சஸ் வழங்கப்படும், பிறகு 40Kbps ஆக ஸ்பீட் குறையும். கூடுதலாக, ஒரு நாளைக்கு 100 SMS வரை வாடிக்கையாளர்கள் அனுப்பலாம்.

இத்துடன் சேர்த்து ரூ. 2,399 BSNL ரீசார்ஜ் திட்டம் தனிப்பட்ட ரிங் பேக் டோனுக்கான அணுகலுடன் (PRBT) 30 நாட்களுக்கு அன்லிமிடெட் பாடல் மாற்ற விருப்பத்துடன் வருகிறது, அத்துடன் 30 நாட்களுக்கு ஈரோஸ் நவ் பொழுதுபோக்குக்கான ஆக்சஸையும் வழங்குகிறது.

இந்தியாவில் பிஎஸ்என்எல் இன்னும் 4ஜி நெட்வொர்க்கை தான் வெளியிடுகிறது, 2022 ஆம் ஆண்டின் இறுதியில் இது முடிவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அப்போதுதான் டெல்கோ பயனர் அனுபவத்தை 4G க்கு மேம்படுத்த முடியும்.

உடனுக்குடன் செய்திகளை (Technology News) தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்