Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

BSNL New Offer Plan: இது நான்குலையும் எது நமக்கு ஏத்தது தெரியுமா? இதை பாருங்க கண்டிப்பா தெரிஞ்சிப்பீங்க!

Priyanka Hochumin June 21, 2022 & 20:30 [IST]
BSNL New Offer Plan: இது நான்குலையும் எது நமக்கு ஏத்தது தெரியுமா? இதை பாருங்க கண்டிப்பா தெரிஞ்சிப்பீங்க!Representative Image.

BSNL New Offer Plan: நீங்க பிஎஸ்என்எல் (BSNL), ஏர்டெல் (Airtel), ஜியோ (Jio) மற்றும் விஐ (Vi) இந்த நான்கு சிம்களில் ஏதேனும் ஒன்றை பயன்படுத்துகிறீர்களா? ம்ம்! இருக்கிறதே இந்த நாலு தான் இதை விட்டா வேற என்ன இருக்கு. சரி இந்த நாள் சர்வீஸ் ப்ரொவைடர்களும் ஒரே விலை ரீசார்ஜ் பிளானில் வெவ்வேறு பெனிபிட்களை வழங்குகிறது. அது எந்த பிளான்னா ரூ. 299/-க்கான திட்டம் தான். அப்ப இதுல எது பெஸ்ட் என்று பார்ப்போமா! ஒரு வேளை நீங்க யூஸ் பண்ற சிம் இல்லைனா வருத்தப்படாதீங்க.

பிஎஸ்என்எல் இன் ப்ரீபெய்ட் திட்டம்

மக்களுக்கு அதிக நன்மைகளை வழங்கும் தொலைதொடர்பு நிறுவனங்களில் பிஎஸ்என்எல் நிறுவனம் முதன்மையில் இருக்கிறது. பிஎஸ்என்எல் வழங்கும் ரூ. 299/- திட்டம் மொத்தமாக 30 நாட்கள் வேலிடிட்டியுடன் வருகிறது. இதில் கிடைக்கும் மற்ற நன்மைகள் என்னவென்றால், பயனர்களுக்கு அன்லிமிடெட் வாய்ஸ் கால், தினமும் 3GB டேட்டா, டெய்லி 100 எஸ்எம்எஸ் என்று இவ்ளோ நன்மைகள் இருக்கிறது. ஆனால் இதையும் தாண்டி ஏதவது இருக்கிறதா? என்றால் ஆம்! அது தான் 30 நாட்கள் வரையிலான வேலிடிட்டி நாட்கள். நாட்கள் ஆக ஆக 30 நாட்கள் வேலிடிட்டி என்பதை மக்கள் மறக்க தொடங்கியுள்ளனர். அதனை நினைவூட்டும் விதமாக பிஎஸ்என்எல் பயனர்களுக்கு இதை வழங்குகிறது.

ஏர்டெல் பிளானின் பெனிபிட்

ஏர்டெலின் இந்த ரூ. 299/- ப்ரீபெய்டு திட்டம் மொத்தமாக 28 நாட்கள் வேலிடிட்டி வழங்குகிறது. மேலும் தினமும் 1.5 ஜிபி டேட்டா, அன்லிமிடெட் வாய்ஸ் கால் மற்றும் 100 எஸ்எம்எஸ் ஆகியவை கூடுதலாக வழங்கப்படுகிறது. இதனின் ஸ்பெஷல் என்னவென்றால், 28 நாட்களுக்கு Xstream மொபைல் பேக், Apollo 24 | 7 வட்டம், FASTag, இலவச Hellotunes மற்றும் Wynk Music உடன் ரூ.100 கேஷ்பேக் போன்ற சலுகைகள் வழங்கப்படுகிறது.

ஜியோவின் அல்டிமேட் சலுகை

மக்கள் அதிகம் பயனப்படுத்தும் ஜியோ, ரூ. 299/- ப்ரீபெய்டு திட்டத்திற்கு மொத்தமாக 28 நாட்கள் வேலிடிட்டியை வழங்குகிறது. தினமும் அன்லிமிடெட் வாய்ஸ் கால், 100 எஸ்எம்எஸ் மற்றும் தினமும் 2 ஜிபி டேட்டா என்று அனைத்தும் கிடைக்கிறது. கூடுதலாக, ஜியோடிவி, ஜியோசினிமா, ஜியோ செக்யூரிட்டி மற்றும் ஜியோ கிளவுட் போன்ற சந்தாக்கள் கிடைக்கிறது.

விஐ-யின் ஆஃபர் என்னவா இருக்கும்

இது நிறைய தருகிறது ஆனால் பயனர்கள் அந்த அளவுக்கு இருக்கிறார்களா என்று தெரியவில்லை. ரூ. 299/- திட்டத்திற்கு தினமும் 1.5 ஜிபி டேட்டா, 100 SMS, அன்லிமிடெட் வாய்ஸ் கால் மற்றும் 28 நாட்கள் வேலிடிட்டி என்று கிடைக்கிறது. மேலும் Vi Hero அன்லிமிடெட் நன்மைகள் மற்றும் Vi Movies & TVக்கான இலவச சந்தா பயனர்களுக்கு வழங்கப்படுகிறது. Vi Hero அன்லிமிடெட் நன்மைகளின் கீழ், பயனர்கள் Binge All Night, Weekend Data Rollover மற்றும் Data Delights ஆகியவை கூடுதலாக வழங்கப்படுகிறது.

இதையெல்லாம் பார்த்து இப்ப எது பெஸ்ட்டுன்னு சொல்லுங்க. வேற என்ன BSNL ரூ. 299/-க்கான ப்ரீபெய்டு பிளான் தான்.

BSNL New Offer Plan, bsnl tamilnadu prepaid plans offers, bsnl offers prepaid plans

உடனுக்குடன் செய்திகளை (Technology News) தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்