Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Oppo Reno 8 Pro Launch Date in India: ஒப்போ ரெனோ 8 ப்ரோ ஸ்மார்ட்போன்...மீடியா டெக் டைமென்சிட்டி 8100 மேக்ஸ் எஸ்ஓசியுடன்...வரப்போகிறது!

Priyanka Hochumin June 21, 2022 & 12:00 [IST]
Oppo Reno 8 Pro Launch Date in India: ஒப்போ ரெனோ 8 ப்ரோ ஸ்மார்ட்போன்...மீடியா டெக் டைமென்சிட்டி 8100 மேக்ஸ் எஸ்ஓசியுடன்...வரப்போகிறது!Representative Image.

Oppo Reno 8 Pro Launch Date in India: ஒப்போ நிறுவனத்தின் அடுத்த லேட்டஸ்ட் ஸ்மார்ட்போன் ரீலாஸ் பற்றிய அதிரடி தகவல். நீங்க நினைத்துக்கூட பார்க்க முடியாத அம்சங்களுடன், எப்பொழுது தெரியுமா?

அனைத்து ஸ்மார்ட்போன் பிராண்ட்களின் புது லான்ச் பற்றிய முழு விவரமும்  Geekbench benchmarking வெப்சைடில் நாம் தெரிந்துகொள்ளலாம். அந்த வகையில் தற்போது அனைவராலும் பேசப்பட்டு வரும் ஒன்று, ஒப்போ ரெனோ 8 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போனின் ரிலீஸ் பற்றி தான். மாடல் நம்பர் CPH2357 என்பது, Oppo Reno 8 Pro 5G இன் குளோபல் வேரியண்டிற்கு சொந்தமானது. இந்த Oppo CPH2357, Geekbench தரப்படுத்தல் இணையதளத்தில் octa-core SoC மற்றும் 12GB RAM உடன் காணப்பட்டது. மேலும் வரவிருக்கும் புது போன் Mali-G610 MC6 GPU உடன் இணைந்து MediaTek Dimensity 8100 அல்லது 8100-Max SoC மூலம் இயக்கப்படுவதாக கூறப்பட்டுள்ளது. அதே போல் பெஞ்ச் மார்க்கிங் வெப்சைடில், ஆண்ட்ராய்டு 12 இல் இயங்கும் ஸ்மார்ட்போன் பட்டியலில் ஒப்போ ரெனோ 8 ப்ரோ 5ஜி இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

இப்படி ஒவ்வொரு அம்சங்களை பட்டியலிடும் வகையில், 2ஜிகாஹெர்ட்ஸ் base frequency கொண்ட ஆக்டா-கோர் SoC பக்கத்தில் CPH2357 என்ற மாடல் நம்பர் பட்டியலிடப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனை மதிப்பிடவேண்டும் என்றால், சிங்கிள்-கோர் செயல்திறனில் 898 மற்றும் மல்டி-கோர் செயல்திறனில் 3,555 மதிப்பெண்களைப் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தத்தக்கது. மேலும் MySmartPrice இன் அறிக்கையின்படி, பட்டியலிடப்பட்ட ஹேண்ட் செட் Oppo Reno 8 Pro இன் உலகளாவிய மாறுபாடாகும். இது இந்தியா மற்றும் பிற சந்தைகளில் ஸ்மார்ட்போனின் உடனடி அறிமுகம் குறித்த தகவலும் கூறப்பட்டுள்ளது.

சீனாவில் மே மாதத்தில் ஒப்போ ரெனோ 8 சீரிஸ் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அந்த சீரிஸில் ஒப்போ ரெனோ 8, ஒப்போ ரெனோ 8 பிளஸ் மற்றும் ஒப்போ ரெனோ 8 ப்ரோ ஆகியவை அடங்கும். கிடைத்துள்ள ஒரு அறிக்கையின்படி, Oppo Reno 8 Pro இந்தியாவில் அறிமுகமாகாததால் Oppo Reno 8 Pro+ இன் விவரக்குறிப்புகளுடன் அந்த ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

Oppo Reno 8 Pro Launch Date in India, Oppo Reno 8 Pro plus, Oppo Reno 8 Pro plus price in india, Oppo Reno 8 Pro plus specifications, Oppo Reno 8 Pro specifications, Oppo Reno 8 Pro price in india, Oppo Reno 8 Pro specs, Oppo Reno 8 Pro plus launch date in india, 

உடனுக்குடன் செய்திகளை (Technology News) தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்