Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

இவ்ளோ குறைந்த விலையில், கெனான் பவர் ஷாட் வி10 கேமரா..! இதுல இருக்க இன்னொரு சிறப்பம்சம் என்ன தெரியுமா.? | Canon Powershot V10 Speficiations

Gowthami Subramani Updated:
இவ்ளோ குறைந்த விலையில், கெனான் பவர் ஷாட் வி10 கேமரா..! இதுல இருக்க இன்னொரு சிறப்பம்சம் என்ன தெரியுமா.? | Canon Powershot V10 SpeficiationsRepresentative Image.

கேமரா பிராண்ட் ஆன கெனான் தற்போது அசத்தலான அம்சங்களுடன் கூடிய புதிய கெனான் பவர் ஷாட் v10 கேமராவை அறிமுகப்படுத்தியுள்ளது. கெனான் பவர் ஷாட் வி10 கேமரா இலகுரக வகை கேமராக்களில் ஒன்றாகும். இதனை பாக்கெட்டில் வைத்துப் பயணிப்பதற்கு ஏதுவாக அமையும்.

கெனான் பவர் ஷாட் வி10

உயர் தர ஆடியோவை வழங்கக் கூடியதாக இந்த கேமரா உள்ளது. இது பல்வேறு படப்பிடிப்பு முறைகளைக் கொண்டுள்ளது. இது தேவையில்லாத சத்தத்தை ரத்து செய்வதுடன், உயர் தர ஆடியோவை உருவாக்குகிறது. இந்த வகை கேமரா ஆனது, சிக்கலான அமைப்புகள் இல்லாமல் Facebook அல்லது Youtube இணைப்புடன் நேரடி ஸ்ட்ரீமிங்கை ஆதரிக்கிறது. இதனை USB இணைப்பு வழியாக வெப்கேமாகவும் பயன்படுத்த முடியும்.

Canon’s EOS இமேஜிங் தொழில்நுட்பம், குறைந்த ஒளியில் பயன்படுத்தினால் கூட, தெளிவான வண்ணங்களைக் கொண்ட போட்டோக்களைத் தருகிறது. இது குறைந்த இரைச்சல் காட்சிகளை உருவாக்கக்கூடியது. இந்த கேமரா ஆனது, Face Tracking AF மற்றும் Specified Frame AF-ஐக் கொண்டுள்ளது. கேமரா பதிவு செய்வதற்கு ஏதுவாக Tilt Screen, பெரிய ஸ்டீரியோ மைக்ரோஃபோன்கள், ஸ்டான்ட் போன்றவற்றை பயன்படுத்தலாம்.

கெனான் பவர் ஷாட் வி10 அம்சங்கள்

இந்த வகை கேமரா ஆனது 211 கிராமைக் கொண்டுள்ளது. இந்த இலகுரக கேமரா கையில் பிடிப்பதற்கு ஏற்றவாறும், உங்கள் பாக்கெட்டில் பொருத்துவதற்கு ஏதுவாகவும் அமையும்.

இதன் திறன் ஆனது 4K UHD-ஐக் கொண்டுள்ளது. இது வீடியோவிற்கான Wide Angle Lens-ஐயும் கொண்டுள்ளது.

மேலும், இதில் உள்ள ஸ்டீரியோ மைக்ரோஃபோன்கள், அனைத்துத் திசைகளிலிருந்தும் தெளிவாக கேட்கக் கூடிய அதிவேக ஒலியைத் தரும் ஆடியோவைத் தரக்கூடியதாக அமைகிறது.

இந்த கேமராவை நேரடியாக மொபைலுக்கு Wi-Fi, Bluetooth வசதிகளை இணைத்துக் கொள்ளலாம். மேலும், இது GPS வசதியை கொண்டுள்ளது. இது ஆங்கிலம், ஃப்ரெஞ்சு, ஜெர்மன் உள்ளிட்ட பல்வேறு Menu Languages-ஐக் கொண்டுள்ளது.

இந்த கேமராவின் டைமன்ஸன் ஆனது அகலம், உயரம், விட்டத்தைப் பொறுத்து தோராயமாக 63.4 மிமீ, 90.0 மிமீ, 34.3 மி.மீ-ஐக் கொண்டுள்ளது.

போட்டோ Mode-ஐப் பொறுத்த வரை Still Photo Shooting-ல் Auto Photo அதாவது A+ க்குச் சமமான Scene Intelligent Auto-ஐக் கொண்டுள்ளது.

மூவி ரெக்கார்டிங்-ஐப் பொறுத்து, கீழ்க்கண்ட Modes உள்ளது.

Auto Movie

Smooth skin movie4 5

Movie IS mode

Manual exposure movie

இமேஜ் சென்சார்

Canon Powershot V10-ன் இமேஜ் வகையானது உயர் உணர்திறன் கொண்ட அதாவது பின் ஒளிரும் தன்மை கொண்ட CMOS சென்சாரைக் கொண்டுள்ளது.

இந்த சென்சான் அளவு 1.0 இன்ச் ஆகும். CMOS சென்சாரின் பிக்ஸல் அளவைப் பொறுத்த வரை, தோராயமாக Still Photo Shooting-ற்கு 15.2 மெகாபிக்சல்களையும், Full HD 16:9 Movie recording-ற்கு 13.1 மெகாபிக்சல்களையும் கொண்டுள்ளது. தோராயமாக இந்த சென்சாரின் முழு பிக்சல் அளவு 20.9 மெகாபிக்சல்கள் எனக் கண்டறியப்பட்டுள்ளது. RGB பிரைமரி கலர் ஃபில்ட்டர்ஸைக் கொண்டுள்ளது.

இமேஜ் ப்ராசசரைப் பொறுத்த வரை DIGIC X-ஐக் கொண்டுள்ளது. இது போன்ற ஏராளமான சிறப்பம்சங்களை கெனான் பவர் ஷாட் வி10 கொண்டுள்ளது.

இந்த கேமரா சந்தைக்கு வரும் ஜூன் மாதம் 2023 வெளிவர உள்ளதாகக் கூறப்படுகிறது. இந்த கேமராவின் விலையைப் பொறுத்த வரை ரூ.39,995 இருக்கலாம் எனவும் மதிப்பிடப்படுகிறது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்