Thu ,Mar 28, 2024

சென்செக்ஸ் 73,651.35
655.04sensex(0.90%)
நிஃப்டி22,326.90
203.25sensex(0.92%)
USD
81.57
Exclusive

இந்தியாவில் கிடைக்கும் Google Bard AI.. அதன் சிறப்பம்சங்கள் என்ன தெரியுமா..? | Google Bard Ai Access And Features

Gowthami Subramani Updated:
இந்தியாவில் கிடைக்கும் Google Bard AI.. அதன் சிறப்பம்சங்கள் என்ன தெரியுமா..? | Google Bard Ai Access And FeaturesRepresentative Image.

கூகுள் பார்ட் தற்போது இந்தியாவில் பயன்படுத்தக் கூடியதாக அமைகிறது. இதனை எவ்வாறு பயன்படுத்தலாம் அதன் அம்சங்கள் மற்றும் இன்னும் சில தகவல்களை இதில் காணலாம்.

கூகுள் ஆண்டுதோறும் வருடாந்திர நிகழ்வாக Google I/O-ஐ நடத்தி வருகிறது. அந்த வகையில், இந்த 2023 ஆம் ஆண்டிற்கான Google I/O மே 10 ஆம் நாள் நடந்தது. இதில், கூகுளின் புதிய தொழில்நுட்ப நிறுவனமான 25 புதிய கூகுள் தயாரிப்புகளை அறிவித்தது. மேலும், அதன் அதிநவீன மொழி மாதிரியான PalM 2 மூலம் இயங்கக்கூடிய அம்சங்களை அறிவித்தது. இந்த ஆண்டு பிப்ரவரியில் அறிமுகப்படுத்தப்பட்ட AI-இயங்கும் சாட்போட், Bard-ன் எதிர்காலம் குறித்து கூறப்பட்டுள்ளது. மேலும், AI chatbot தற்போது அனைவராலும் இயக்கப்படுகிறது.

கூகுள் பார்ட் எப்படி அணுகுவது?

இந்தியா உட்பட 180-க்கும் அதிகமான நாடுகளில் பார்டு அறிமுகப்படுத்தப்பட உள்ளது.

கூகுளின் தேடலில் சென்று bard.google.com –க்குச் சென்று Try Bard ஆப்ஷனைக் க்ளிக் செய்து அதன் தனியுரிமைக் கொள்கையை ஏற்ற பின், பார்ட்-ஐப் பயன்படுத்தலாம். மேலும், சாட்பாட்டை ஆராயவும் தொடங்கலாம்.

இருப்பினும் பார்ட் அதன் பரிசோதனைக் கட்டத்தில் உள்ளதாக கூகுள் எச்சரித்துள்ளது. இந்த Google Bard ஆனது பல மொழிகளில் கிடைக்கும். முன்னதாகவே, AI Chatbot ஆனது கொரியன் மற்றும் ஜப்பானிய மொழிகளில் கிடைக்கிறது.

Google Bard அம்சங்கள்

Google I/O நிகழ்வானது, Google Bard குறித்த அம்சங்களை வெளியிட்டது. அதன் முக்கிய அம்சமாக, பார்ட் பார்வையாளர்களுக்குத் தேவையான பதில்களை Visual ஆக காட்டுவதில் அதிக கவனம் செலுத்துகிறது.

மேலும், Bard-இடம் நாம் கேட்கும் கேள்விகளுக்குக் கூடுதல் பதிலில் படங்களை AI Chatbot சேர்த்து வாடிக்கையாளர்களுக்குக் காட்டும். மேலும், படங்களை வைத்து தேடல் செய்யும் அம்சங்களும் இணைக்கப்பட்டுள்ளது. இது, கூகுள் லென்ஸை பார்டுடன் இணைக்கும் போது செய்யப்படும்.

இது தவிர, Bard Talks, Drive, Gmail, Maps மற்றும் இன்னும் பிற Google பயன்பாடுகள் தரப்படுகிறது. மேலும், Adobe Firefly உடன் இணைந்து AI Chatbot செயல்பட்டு, படங்களைத் தயாரிக்கவும் பயன்படுகிறது. இந்தப் படங்களில் திருத்தம் செய்ய முடியும். மேலும், வடிவமைப்புகளில் சேர்க்க முடியும். அதன் படி, Bard ஆனது ஒரு போதும் சாத்தியமில்லாத விஷயங்களைச் செய்ய அனுமதிக்கும் கருவியாகச் செயல்படுகிறது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்