Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

அட 5ஜி சேவைக்கு புது சிம்மா...அது எப்ப கிடைக்கும்? கட்டணம் இவ்ளோவா?

Priyanka Hochumin August 13, 2022 & 10:45 [IST]
அட 5ஜி சேவைக்கு புது சிம்மா...அது எப்ப கிடைக்கும்? கட்டணம் இவ்ளோவா?Representative Image.

இந்திய தொழில்நுட்ப நிறுவனங்கள் தற்போது 5ஜி சேவைகளை அறிமுகப்படுத்த நோக்கில் தீயா வேலை செய்து கொண்டிருக்கிறது. இந்த மாத இறுதிக்குள் இந்தியாவில் பேர் போன 2 சிறந்த டெலிகாம் நிறுவனங்கள் தங்களின் 5ஜி சேவையை தொடங்கப்போவதாக கூறப்படுகிறது. இது குறித்து மேலும் பல தகவல்களை தெரிந்துகொள்ள தொடர்ந்து படியுங்கள்.

உங்களுக்குத் தெரியுமா வரும் ஆகஸ்ட் 15 ஆம் தேதி சுதந்திர தினத்தன்று ரிலையன்ஸ் ஜியோவின் தலைவரான ஆகாஷ் அம்பானி, "ஆசாதி கா அம்ரித் மஹோத்சவ்" உடன் தங்களின் 5ஜி சேவைக்கான துவக்கத்தை கோலாகலமாக கொண்டாடப்போவதாக கூறியுள்ளார். இவர்கள் முதலில் மெட்ரோ நகரங்களில் இந்த 5ஜி சேவையை ஒரு பைலட் சோதனையாக அறிமுகம் செய்யப்போவதாக குறிப்பிட்டுள்ளனர்.

அது சரி முதல்ல யாருக்கு வரப்போகுது? என்ற நீங்கள் நினைக்கும் கேள்வி எங்களுக்கு நல்லாவே தெரியுது. முன்பே குறிப்பிட்ட மாதிரி மெட்ரோ நகரங்களான டெல்லி, மும்பை, கொல்கத்தா, பெங்களூரு, சென்னை, லக்னோ, ஹைதராபாத், அகமதாபாத் மற்றும் ஜாம்நகர் உள்ளிட்ட ஒன்பது இந்திய நகரங்களில் 5ஜியை அறிமுகப்படுத்த ஜியோ திட்டமிட்டுள்ளது. இவை செயல்பாட்டிற்கு வந்த சிறிது காலத்தில் மற்ற 1000 பகுதிகளில் 5ஜி சேவைகளை வெளியிட ஜிவ் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்த சந்தேகம் தீர்ந்ததா? இப்ப அடுத்து மிக முக்கியமானது நமக்கு 5ஜி சேவை கிடைக்கணும்னா புது சிம் வாங்கணுமா? என்பது தானே உங்களுக்கு தெரியணும். ஆனால் என்ன பண்றது இது குறித்து எந்த தகவலையும் தொலைத்தொடர்பு நிறுவனங்களும் மற்றும் அமைச்சகமும் வெளியிடவில்லை. இருப்பினும் உங்களுக்கு நினைவு இருக்கிறதா? 3ஜி சேவையில் இருந்து 4ஜி-க்கு மாறும் பொழுது புது சிம் வாங்கும் அவசியம் இருந்தது. அதே போல் இந்த மாற்றத்திற்கும் புது சிம் விநியோகம் நடைபெறலாம் என்ற தகவல் பரவலாக பேசப்பட்டு வருகிறது. ஆனால் இதைப் பற்றி இன்னும் அதிகாரபூர்வ தகவல் வெளியாக வில்லை. ஒரு நாள் திடிரென்று 5ஜி சேவைக்கான புது சிம் அறிவிக்கப்படலாம்.

இப்ப கடைசி, அப்படி புது சிம் வாங்கணும்னா அதுக்கு எவ்ளோ ஆகும்? என்பது தான் மிக முக்கியமான கேள்வி. இதுக்கும் பதில் இன்னும் கிடைக்கவில்லை, அனால் தற்போது ஏற்பட்டுள்ள விலை ஏற்றத்திற்கு பிறகு 4ஜி ப்ரீபெய்ட் சேவைகளை காட்டிலும் 5ஜி அதிகமே இருக்கும் இருப்பதில் எந்த சந்தேகமும் இல்லை. 4ஜி ப்ரீபெய்ட் திட்டங்கள் ரூ. 400/- முதல் துவங்கி ரூ. 500/- வரை இருக்கிறது. எனவே, 5ஜி சேவை ரூ. 500/- முதல் துவங்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Is new sim card needed for 5g, does 5g require new sim card, do I need a new 5g sim card, do you need a new 5g sim, what will be the price of jio 5g, 5g service in india, 5g service providers in india, 5g service price in india, 5g service launch date in india, do you need a new 5g sim to get the service, technology news in tamil, tamil technology news, tech news in tamil.

உடனுக்குடன் செய்திகளை (Technology News) தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்