Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Samsung Galaxy A04 Core Price: ஒரு புது போன் வரப்போகுதாம்...அதை இப்படியும் அறிவிப்பாங்களா?

Priyanka Hochumin August 12, 2022 & 12:40 [IST]
Samsung Galaxy A04 Core Price: ஒரு புது போன் வரப்போகுதாம்...அதை இப்படியும் அறிவிப்பாங்களா?Representative Image.

Samsung Galaxy A04 Core Price: எந்த பிராண்ட் ஸ்மார்ட்போனாக இருந்தாலும் அதனின் அறிமுகத்திற்கு முன்பு benchmarking website Geekbench இல் காணப்படும். அப்படி காணப்பட்டால் அது முழுக்க முழுக்க உண்மையானதாக தான் இருக்கும். அந்த பட்டியலில் Samsung SM-A042F — Galaxy A04 Core கைபேசியானது 3ஜிபி ரேம் வசதியுடன் வரலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த என்ட்ரியில், சாம்சங் கேலக்ஸி ஏ04 கோர், ஆண்ட்ராய்டு 12 அவுட்-ஆஃப்-தி-பாக்ஸிலும் இயங்கக்கூடியது என்று கூறப்பட்டுள்ளது. இது MT6765V/CB SoC உடன் 2.3GHz அடிப்படை அதிர்வெண்ணுடன் (base frequency) மற்றும் MediaTek Helio G35 SoC மூலம் இயங்கும் என்று கூறப்படுகிறது. Galaxy A04 கோர் மீதான வதந்திக்கு சாம்சங் நிறுவனம் எந்த விவரங்களையும் இன்னும் அறிவிக்கவில்லை. Geekbench இல் பட்டியலிடப்பட்ட சாம்சங் ஸ்மார்ட்போனின் மாடல் நம்பர் SM-A042F ஆக திகழ்கிறது. கைபேசி ஒற்றை மைய செயல்திறனில் 802 மதிப்பெண்களையும், மல்டி-கோர் செயல்திறனில் 3,556 மதிப்பெண்களையும் பெற்றுள்ளது.

மேலே குறிப்பிட்டுள்ள மாடல் எண் Samsung Galaxy A04 Core க்கு சொந்தமானதாக லீக் ட்ராக்கிங் வெப்சைட் ஸ்லாஷ்லீக்ஸ் தெரிவிக்கிறது. மேலும் கீக்பெஞ்ச் பட்டியலை மேற்கோள் காட்டி, இந்த ஸ்மார்ட்போன் MediaTek Helio G35 SoC, Rogue GE8320 GPU உடன் இணைந்து இயக்கலாம் என்றும் பதிவு குறிப்பிடுகிறது. இருப்பினும், தென் கொரிய நிறுவனம் கேலக்ஸி ஏ04 கோர் பற்றிய எந்த விவரங்களையும் இன்னும் அறிவிக்கவில்லை. இந்த ஹாண்ட் செட் Samsung இன் ஏ சீரிஸில் புது பட்ஜெட் ஸ்மார்ட்போனாக திகழ்கிறது. அதே போல் டிப் செய்யப்பட்ட இந்த மலிவு விலை ஸ்மார்ட்போனானது Samsung Galaxy A03 Core உடைய வாரிசு என்று நிறுவனம் கூறியுள்ளது.

சாம்சங் நிறுவனம் லீக் செய்த இமேஜ்களில் சாம்சங் கேலக்சி ஏ 04 கோர் Infinity-V டிஸ்பிளே வடிவில் காட்சியளிக்கிறது. அறிக்கையின் படி, இந்த ஸ்மார்ட்போன் பிளாக், காப்பர் மற்றும் கிறீன் கலர் ஆப்ஷனில் வரலாம். வதந்தியான பட்ஜெட் ஃபோனில் சாம்சங்கின் Exynos 850 SoC இடம்பெறுவதாக முன்னர் தெரிவிக்கப்பட்டது, ஆனால் இது குறித்து கீக்பெஞ்ச் பட்டியலில் எதுவும் குறிப்பிடவில்லை.   

Samsung Galaxy A04 Core Price, Samsung Galaxy A04 Core Price in Bangladesh, Samsung Galaxy A04 Core Price in Pakistan, Samsung Galaxy A04 Core.

உடனுக்குடன் செய்திகளை (Technology News) தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்