Fri ,Apr 19, 2024

சென்செக்ஸ் 73,088.33
599.34sensex(0.83%)
நிஃப்டி22,147.00
151.15sensex(0.69%)
USD
81.57
Exclusive

இனி வாட்ஸ் அப்-லயும் செய்தி பார்க்கலாம்.. வாட்ஸ் அப் வெளியிட்ட புது அம்சம்..! | Whatsapp Channels Feature

Gowthami Subramani Updated:
இனி வாட்ஸ் அப்-லயும் செய்தி பார்க்கலாம்.. வாட்ஸ் அப் வெளியிட்ட புது அம்சம்..! | Whatsapp Channels FeatureRepresentative Image.

கடந்த சில தினங்களாகவே, மெட்டாவுக்குச் சொந்தமான வாட்ஸ் அப், புதிய புதிய அம்சங்களை வெளியிட்டு வருகிறது. இது பயனர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் வகையிலேயே அமைகிறது. அதன் படி, தற்போது “வாட்ஸ் அப் சேனல்கள்” என்ற புதிய அம்சத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.

இந்த புதிய அம்சமானது, வித்தியாசமான செய்தியை வழங்கக் கூடியதாக அமைகிறது. இதுவே, சேனல்கள் என அழைக்கப்படுகிறது. இது உரையாடலுக்குப் பதிலாக, ஒளிபரப்பு செய்வதற்காக வடிவமைக்கப்பட்டுள்ளது.

சேனல்கள்

சேனல்கள் என்பது, புகைப்படங்கள், வீடியோக்கள், ஸ்டிக்கர்ஸ், உரை, வாக்கெடுப்பு உள்ளிட்டவற்றை அனுப்பும் வழியான ஒளிபரப்பு கருவியாகும். பின் தொடர வேண்டிய சேனல்களைத் தேர்ந்தெடுப்பதற்கு, உள்ளூர் அதிகாரிகளின் புதுப்பிப்புகள், பொழுதுபோக்குகள், விளையாட்டுக் குழுக்கள் மற்றும் இது போன்ற பலவற்றைக் கண்டறியும் வகையில் தேடல் ஆப்ஷனைத் தந்துள்ளது. மேலும், சேட், இமெயில் அல்லது ஆன்லைனில் லிங்க் போஸ்ட் செய்வதன் மூலம் சேனலைப் பெறலாம்.

பிரைவேட் அம்சம்

இது தனிப்பட்ட ஒளிபரப்பு சேவையை உருவாக்குவதாக வாட்ஸ் அப் அறிவித்துள்ளது. இது சேனல் நிர்வாகிகள், அதனைப் பின் தொடர்பவர்களின தனிப்பட்டத் தகவல்களைப் பாதுகாப்பதன் மூலம் தொடங்குகிறது. அதே சமயம், சேனல் நிர்வாகியின் மொபைல் எண், மற்றும் சுயவிவரப் புகைப்படமும் சேனல் பின் தொடர்பவர்களுக்குக் காட்டப்படாது. அதே போல, சேனலைப் பின் தொடர்பவர்களுக்கும், அவர்களது எண், சேனல் நிர்வாகிக்கும், சேனலைப் பின் தொடரும் மற்றவர்களுக்கும் வெளிப்படுத்தாது. இதில், பயனர்கள் அவரவர்களது விருப்பத்திற்கேற்ப யாரைப் பின் தொடர விரும்புகிறார்களோ, அவர்களைப் பின் தொடரலாம்.

சேனல் ஹிஸ்ட்ரி

சேனல் ஹிஸ்ட்ரி ஆனது, வாட்ஸ் அப் சேவையகங்களில் 30 நாள்கள் வரை மட்டுமே சேமித்து வைக்கப்பட்டிருக்கும் என மெசேஜிங் பிளேட்பார்ம் நிறுவனம் கூறியுள்ளது. மேலும், புதுப்பிப்புகளை விரைவாக மறைப்பதற்கான வழிகளைச் சேர்ப்பதாக நிறுவனம் கூறியுள்ளது.

அட்மின் பவர்

சேனல் நிர்வாகிகள் அவர்களது சேனலில் இருந்து ஸ்கிரீன் ஷாட் எடுப்பது, ஃபார்வர்டு செய்வது போன்றவற்றைத் தடுப்பதற்கான விருப்பம் இருக்கும். மேலும், நிர்வாகிகள் கடைசியாக தங்கள் சேனலை யார் பின் தொடரலாம் மற்றும் அவர்களின் சேனலை கோப்பகத்தில் கண்டறிய வேண்டுமா இல்லையா என்பதையும் முடிவு செய்வதற்கு இது சாத்தியமாக அமையும். சேனல்களின் முக்கிய நோக்கம், அதிக பார்வையாளர்களைச் சென்றடைவதே ஆகும். அதே சமயம், Default ஆக சேனல்கள் end-to-end encrypt செய்யப்படவில்லை என கூறியுள்ளது.

எப்போது பயன்படுத்த முடியும்?

வாட்ஸ் அப்பில் இந்த சேனல்கள், கொலம்பியா மற்றும் சிங்கப்பூரில் உள்ள நிறுவனங்களைத் தேர்ந்தெடுத்து அதில் முதலில் கிடைக்கும். அதன் பிறகு, சேனல்கள் உருவாக்கம், கற்றுக் கொள்ளுதல், அனுபவத்தை மாற்றியமைத்தல் என்பதைப் பொறுத்து சேனல்களைப் பல நாடுகளுக்குக் கொண்டு வரப்போவதாகக் கூறப்படுகிறது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்