Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

கிளோஸ் பிரென்டின் மனைவியுடன் கள்ளத்தொடர்பு...சிக்கிய எலான் மஸ்க்...உண்மை தான் என்ன?

Priyanka Hochumin July 25, 2022 & 17:15 [IST]
கிளோஸ் பிரென்டின் மனைவியுடன் கள்ளத்தொடர்பு...சிக்கிய எலான் மஸ்க்...உண்மை தான் என்ன?Representative Image.

தி வால் ஸ்ட்ரீட் ஜர்னல் எலான் மஸ்க் அவர்களின் பிரைவசியை சீர்குலைக்கும் விதமாக ஒரு பதிவை போட்டுள்ளது. அது என்னவென்றால், கூகுள் இணை நிறுவனர் செர்ஜி பிரின் மனைவியுடன் எலான் மஸ்க் தொடர்பில் இருந்ததாக கூறப்பட்டுள்ளது. இந்த தகவல் உலகளவில் பெரும் பரபரப்பாக பேசபப்ட்டு வருகிறது. இது என்ன சர்ச்சை, எதனால் இந்த குற்றச்சாட்டு, இதற்கு மஸ்க் அளித்த பதில் என்ன? என்று பார்ப்போம்.

தி வால் ஸ்ட்ரீட் ஜர்னலின் அடிப்படையில், கூகுள் நிறுவனத்தின் இணை நிறுவனர் செர்ஜி பிரின் மனைவியுடன் எலான் மஸ்க் தொடர்பில் இருந்ததாக கூறப்படுகிறது. எதனால் இந்த குற்றச்சாட்டு என்றால், மியாமி நகரில் ஆர்ட் பாஸல் என்னும் நிகழ்ச்சி நடைபெற்றது. இது முற்றிலும் பணக்காரர்களுக்கான நிகழ்ச்சியாகும். இதில் மஸ்க் மற்றும் செர்ஜி பிரின் மனைவி நிகோல் ஷனாஹன் பங்கேற்று உள்ளனர். அங்கு தான் அவர்களுக்கு தொடர்பு ஏற்பட்டதாக தி வால் ஸ்ட்ரீட் ஜர்னலின் கூறுகிறது.

இதனைப் பற்றி தெரிந்ததும் செர்ஜி பிரின், கடந்த வருடம் 2021 டிசம்பர் 31 ஆம் தேதி முதல் தன்னுடைய மனைவி நிகோல் ஷனாஹனிடம் இருந்து பிரிந்து வாழ்வதாக கூறப்படுகிறது. மேலும் மஸ்க், செர்ஜி பிரினிடம் பகிரங்கமாக மன்னிப்பு கோரியதாகவும் கூறப்படுகிறது. பின்பு மஸ்க் மற்றும் செர்ஜி பிரின் அவர்களின் நட்புக்கு விரிசல் ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. இதில் எது உண்மை என்று தெரியவில்லை.

இது குறித்த சர்ச்சைக்கு மஸ்க் அளித்த பதில் என்ன என்றால், "இது முற்றிலும் ஆதாரமற்ற செய்தி. நானும் செர்ஜியும் நண்பர்கள் மட்டுமே, நேற்று இரவு கூட ஒரு விருந்தில் ஒன்றாக இருந்தோம்! எனக்கு நிக்கோல் ஷனாஹானை மூன்று வருடங்களில் இரண்டு முறை மட்டுமே பார்த்திருக்கிறேன், இந்த இரண்டு முறையும் அனைவருக்கும் மத்தியில் தான் சந்தித்திருக்கிறேன். காதல் எதுவும் இல்லை" என்று எழும்பிய சர்ச்சைக்கு பதிலளித்துள்ளார்.

சுமார் 242 பில்லியன் டாலர் சொத்துமதிப்புக் கொண்டு உலகின் முதல் பணக்காரனாக திகழ்கிறார் மஸ்க். இவர் மீது கூறப்பட்டுள்ள இதுபோன்ற சர்ச்சை ஒன்றும் புதிதல்ல. எனவே, இது அவருக்கு பெரிய விஷயமாக இருக்காது. இருப்பினும் இது உண்மையா இல்லை அவரின் பங்கு சந்தை விகிதத்தை குறைக்க யாரேனும் செய்த சதியா என்று எதுவும் தெரியவில்லை.

Elon Musk, elon musk fake contact with nicole Shanahan, elon musk latest news, elon musk latest news twitter, elon musk latest tweet, elon musk latest news in tamil, elon musk relationship with friends wife, elon musk relationship with nicole shanahan


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்