Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

How to Register for SBI WhatsApp Banking Services in Tamil: ஒரே ஒரு அறிவிப்பில் ஒட்டுமொத்த எஸ்பிஐ வாடிக்கையாளர்களும் ஹாப்பி!

Priyanka Hochumin July 25, 2022 & 10:30 [IST]
How to Register for SBI WhatsApp Banking Services in Tamil: ஒரே ஒரு அறிவிப்பில் ஒட்டுமொத்த எஸ்பிஐ வாடிக்கையாளர்களும் ஹாப்பி!Representative Image.

How to Register for SBI WhatsApp Banking Services in Tamil: இந்தியாவின் மிகப்பெரிய வங்கியான ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா (State Bank of India) பகிரங்கமாக ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதனை கேட்டவுடன் எஸ்பிஐ வாடிக்கையாளர்கள் அப்பாடி ஒருவழியாக கொண்டுவந்துடீங்களா? என்று மகிழ்கின்றனர். அது என்னவா இருக்கும்? என்பதை தெரிந்துகொள்ள தொடர்ந்து படியுங்கள்.

சார் இதுவே லேட்டு!

பல வருடங்களாக எஸ்பிஐ வாடிக்கையாளர்கள், SBI-யின் வங்கி சேவையை பெற வாட்ஸ்அப் பேங்கிங் சேவையை கொண்டு வருமாறு கேட்டுக்கொண்டனர். அவர்களின் கோரிக்கையை நிறைவேற்றும் வகையில் எஸ்பிஐ நிறுவனம் வாட்ஸ்அப் பேங்கிங் சேவையை அதிகாரபூர்வமாக அறிமுகப்படுத்தியது. இந்த சேவை மூலம் சில வங்கி சேவைகளை மிகவும் எளிதாக பெற்றுக்கொள்ளலாம். இந்த சேவை செயல்பாட்டிற்கு வருவதால் பலரும் இதன் மூலம் பயன்பெறுவார்கள் மற்றும் வசதியாக இருக்கும். ஏனெனில் இனி எதற்காகவும் உங்களின் கிளை வங்கிக்கு செல்ல வேண்டிய அவசியம் இருக்காது.

இதுக்கு என்ன செய்யணும்?

இந்த சேவையை நீங்கள் பெற வேண்டும் என்றால், முதலில் எஸ்பிஐ வாடிக்கையாளர்கள் குறிப்பிட்ட சேவைக்கு பதிவு செய்ய வேண்டும். அதற்கு 7208933148 என்ற எண்ணிற்கு WAREG என்னும் டெக்ஸ்ட் மெசேஜை டைப் செய்து, பிறகு ஒரு ஸ்பேஸ் விட்டு உங்களின் அக்கவுண்ட் நம்பரை டைப் செய்து SMS அனுப்பவும். அப்புறம் இன்னொரு முக்கியமான மேட்டர்! எஸ்பிஐ வாட்ஸ்அப் பேங்கிங் சேவைக்காக ரெஜிஸ்டர் செய்யும் பொழுது, உங்கள் SBI அக்கவுண்ட் உடன் இணைக்கப்பட்டுள்ள மொபைல் நம்பர் மூலமாக SMS-ஐ அனுப்பவும். வேறு ஏதேனும் ஒரு நம்பரில் இருந்து அந்த எஸ்எம்எஸ்-ஐ அனுப்ப கூடாது.

இதுக்கு அப்புறம் அவங்க பாத்துப்பாங்க...

இப்பொழுது நீங்கள் வெற்றிகரமாக எஸ்பிஐ இன் வாட்ஸ்அப் பேங்கிங் சேவைக்கு ரெஜிஸ்டர் செய்து விட்டீர்கள். இப்போ எஸ்பிஐ இன் 90226 90226 என்னும் நம்பரில் இருந்து உங்களுக்கு ஒரு மெசேஜ் வரும். எனவே, இந்த நம்பரை சேவ் செய்துக்கொள்ளுங்கள், அப்படி உங்களிடம் இருந்தால் விட்டுவிடுங்கள். இப்பொழுது அந்த நம்பருக்கு "Hi SBI" என்று ஒரு மெசேஜை அனுப்பி விடுங்கள். அதற்கு பின்பு ஒரு அறிவிப்பை பெறுவீர்கள், அதன் மூலமாக உங்களின் அக்கவுண்ட் பேலன்ஸ், மினி ஸ்டேட்மென்ட் போன்ற விவரங்களை நீங்கள் தெரிந்துகொள்ளலாம்.

கிரெடிட் கார்டு யூசர்களுக்கு ஒரு குட் நியூஸ்!

மேற் கூறிய சேவைகளை தாண்டி, எஸ்பிஐ இன் கிரெடிட் கார்டு பயனர்களும் ஒரு சில தகவல்களை அணுகும் முடியும். அது எப்படி? என்றால் உங்களின் SBI கிரெடிட் கார்டின் அக்கவுண்ட் சம்மரி, ரிவார்ட் பாயிண்ட்ஸ், அவுட்ஸ்டேண்டிங் பேலன்ஸ் மற்றும் பிற தகவல்களை வாட்ஸ்அப் வழியாக சரிபார்த்து கொள்ளலாம். இது பற்றிய தகவல்களை தெரிந்துகொள்ள, எஸ்பிஐ கார்டு பயனர்கள் வாட்ஸ்அப் இல் 90040 22022 என்ற எண்ணுக்கு "OPTIN" என்று டைப் செய்து மெசேஜ் அனுப்பவும். அதற்கு பின்பு கொடுக்கப்படும் விவரங்கள் மூலம் நீங்கள் தகவல்களை தெரிந்துகொள்ளலாம். அல்லது பதிவுசெய்யப்பட்ட மொபைல் எண்ணில் இருந்து 08080 945040 என்கிற எண்ணிற்கு மிஸ்டு கால் செய்து குறிப்பிட்ட சேவைக்கு ரெஜிஸ்டர் செய்து கொள்ளலாம்.

How to Register for SBI WhatsApp Banking Services in Tamil, sbi whatsapp banking registration, how to register for sbi whatsapp banking services online, how to registration for sbi whatsapp banking, sbi whatsapp banking servies, sbi whatsapp banking registration, sbi whatsapp banking number,  

உடனுக்குடன் செய்திகளை (Technology News) தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்