Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Elon Musk இன் இந்திய நண்பர்...யார் இவர்...? எப்படி பிரெண்ட்ஸ் ஆனார்கள்...?

Priyanka Hochumin August 24, 2022 & 13:10 [IST]
Elon Musk இன் இந்திய நண்பர்...யார் இவர்...? எப்படி பிரெண்ட்ஸ் ஆனார்கள்...?Representative Image.

உலகின் டாப் பணக்காரனான எலான் மஸ்க் எப்பொழுதும் மக்களின் ட்ரெண்டிங்காக இருக்கிறார். இவர் சமீபத்தில் டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் நிறுவனத்தில் பணிபுரியும் சாஃப்ட்வேர் டெவலப்பவரை நேரில் சந்தித்த புகைப்படம் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. இது சாதாரண சந்திப்பா, இல்லை இதையும் ஏதேனும் பிளான் இருக்கிறதா என்ற  கேள்விக்கான பதிலை இந்த பதிவில் தெரிந்துகொள்ளலாம்.

ட்விட்டரின் ராஜா

டெஸ்லா மற்றும் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் தலைவரான எலான் மஸ்க் உலகின் நம்பர் 1 பணக்காரனாக திககிறார். அது மட்டும் இன்று தன்னுடைய ஒரு ட்வீட் மூலம் கோடிக்கணக்கான மக்களை தன் வசம் கொண்டு வந்துள்ளார். இப்படி இருக்கையில் சில மாதங்களுக்கு முன்பு ட்விட்டரை வாங்க டீல் செய்துள்ளார். ஆனால் அதில் ஒரு சில கொளறுபடிகள் ஏற்பட்டுள்ளதால் நீதிமன்றத்தில் வழக்கு நடந்து கொண்டிருக்கிறது. இப்படி எல்லா பக்கமும் சுத்தி அடித்துக் கொண்டிருந்தாலும் அதை கொஞ்சம் கூட பொறுப்பேற்காமல் தற்போது இவரின் புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் ட்ரெண்டாகி வருகிறது.

யார் அந்த பிரெண்ட்!

எலான் மஸ்க் தன்னுடைய தீவிர ரசிகர் மற்றும் ட்விட்டரில் நீண்ட கால நண்பரான புனேவை சேர்ந்த 23 வயதே ஆன பிரனய் பத்தோல் என்பவரை நேரில் சந்தித்துள்ளார். இவர் டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் நிறுவனத்தில் சாஃப்ட்வேர் டெவலப்பராக பணிபுரிந்து வருகிறார். இவர் சமீபத்தில் டெக்சாஸில் உள்ள ஜிகாஃபாக்டரியில் எலான் மஸ்க் சந்தித்துள்ளார். அப்பொழுது இவர்கள் இருவரும் சேர்ந்து எடுக்கப்பட்ட புகைப்படம் சமூக வலைத்தளங்களில் மக்களால் ஷேர் செய்யப்பட்டு வருகிறது. இதனைப் பற்றி ட்வீட் செய்த பிரனய் பத்தோல்,


கிகாஃபாக்டரி டெக்சாஸில் எலான் மஸ்க்கை சந்தித்தது மிகவும் சிறப்பாகவும் மகிழ்ச்சியாகவும் இருந்தது. இப்படிப்பட்ட அடக்கமான மற்றும் தன்னை மிகையாக எண்ணாத ஒரு நபரை பார்த்ததில்லை. இதனால் தான் எலான் மஸ்க் லட்சக்கணக்கான மக்களுக்கு முன்னோடியாக இருக்கிறார்


என்று பதிவிட்டுள்ளார்.

இவங்க எப்படி பிரெண்ட்ஸ் ஆனாங்க?

பிரனய் பத்தோல் ஒரு ட்விட்டர் செலிபிரிட்டி. இவரின் பர்சனல் அக்கவுண்டை சுமார் 1,80,000/- பேர் பின்பற்றுகின்றனர். இவர் 2018 இல் டெஸ்லா ஆட்டோமேட்டிங் windscreen wipers குறித்து ட்விட்டரில் ட்வீட் ஒன்றை போட்டார். அதற்கு எதிர்பார்க்காத விதமாக எலான் மஸ்க் அவர்கள் ரிப்ளை செய்துள்ளார். அப்போது முதல் இருவரும் நண்பர்களாக தங்களின் உறவை நீடித்து வருகின்றனர். மேலும் அவ்வப்போது ட்விட்டரில் சேட் செய்வதாக கூறப்படுகிறது.

Tags | Elon musk indian friend, elon musk, tesla, twitter, twitter friend.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்