Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Fun Facts about Technology 3: டாப் நிறுவங்களின் இன்டெரெஸ்ட்டிங் facts...! நம்புனா நம்புங்க...!

Priyanka Hochumin August 23, 2022 & 13:30 [IST]
Fun Facts about Technology 3: டாப் நிறுவங்களின் இன்டெரெஸ்ட்டிங் facts...! நம்புனா நம்புங்க...!Representative Image.

Fun Facts about Technology 3: வணக்கம் மக்களே! இந்த வாரத்திற்கான டெக்னாலஜியைப் பற்றிய சுவாரஸ்ய தகவல்கள் என்ன என்று பார்க்கலாம் வாங்க. உங்களுக்கு உலகின் முன்னணி தொழிநுட்ப நிறுவனங்களைப் பற்றிய இன்டெரெஸ்ட்டிங் தகவல்கள் தெரிந்துகொள்ளனுமா? தொடர்ந்து படியுங்கள்.

1. இது என்ன Amazon-னுக்கு வந்த சோதனை....

1994 ஆம் ஆண்டு ஜெஃப் பெசோஸ் என்பவரால் உருவாக்கப்பட்ட நிறுவனம் தான் அமேசான். ஆனால் அவர் முதலில் அப்ரகாடப்ரா (Abracadabra) என்னும் வார்த்தையை மனதில் கொண்டு, நிறுவனத்தை கடாப்ரா இன்க் (Cadabra Inc.) என்று பதிவு செய்தார். இருப்பினும் இதனை மக்கள் பயன்படுத்தும் பொழுது தவறாக உச்சரிக்க வாய்ப்புள்ளது. மேலும் போனில் பேசும் பொழுது இந்த வார்த்தை "கேடவர்" என்று ஒலித்ததாகக் கூறப்படுகிறது. இதனால் அவர் பெயரை மாற்ற முடிவு செய்தார். ஒரு எபிபானிக்குப் பிறகு, அகராதியைப் (dictionary) புரட்டும் பொழுது கிடைத்த வார்த்தை தான் அமேசான். அதனால் அதனையே நிறுவனத்தின் பேராக வைக்கலாம் என்று முடிவு செய்தார்.

2. Nokia இதெல்லாம் பண்ணிருக்காங்களா?

நோக்கியா நிறுவனத்தைப் பற்றி தெரியாத நபர்கள் இந்த உலகத்தில் இருக்கவே முடியாது. ஆனால் அவர்கள் அதற்கு முன்பு என்னெல்லாம் செய்து இருப்பார்கள் என்று என்னைக்காவது யோசித்து இருக்கிறீர்களா? இதோ பாருங்க என்ன செஞ்சிட்டு இருந்தாங்கன்னு. 1865 ஆம் ஆண்டு ஒரு காகித ஆலை தொடங்கி தொடங்கியது முதல், அதனை தொடர்ந்து டாய்லெட் பேப்பர், டயர்கள், கம்ப்யூட்டர்கள், கேபிள்கள், ரப்பர் பூட்ஸ் மற்றும் தொலைக்காட்சிகள் போன்ற பொருட்களை தயாரித்து விற்றுக் கொண்டிருந்தனர். நம்பினால் நம்புங்கள்!

3. என்னது மரத்தால் செய்யப்பட்டதா?

முதல் கம்ப்யூட்டர் கண்டுபிடிக்கப்பட்டது என்னவோ 1822 இல். ஆனால் அது நாளடைவில் மேம்படுத்தப்பட்டு பிறகு அந்த கம்ப்யூட்டருக்கான மவுஸ் 1964 ஆம் ஆண்டு டக் ஏங்கல்பார்ட் என்பவரால் கண்டுபிடிக்கப்பட்டது. இன்னொரு சுவாரஸ்யமான செய்து என்ன தெரியுமா? அந்த மவுஸ் மரத்தால் தயாரிக்கப்பட்டது மற்றும் செவ்வக வடிவில் வடிவமைக்கப்பட்டது.

Fun facts about technology, Fun facts about technology 2022, Fun facts about technology history, Fun facts about technology advancement, Fun facts about technology in education, Fun facts about technology tamil, did you know fun facts on technology, what is a fact about technology, fun technology facts, interesting facts about technology, interesting facts about technology 2022, interesting facts about technology 2021, interesting facts about technology today in tamil, interesting facts about technology today news.  


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்