Sun ,Apr 14, 2024

சென்செக்ஸ் 74,244.90
-793.25sensex(-1.06%)
நிஃப்டி22,519.40
-234.40sensex(-1.03%)
USD
81.57
Exclusive

Elon Musk Says Humanity Reach Mars Mission Tamil: மஸ்கின் சூசக ட்வீட்...2029 இல் இது கண்டிப்பாக நடக்கும்! இது கட்டளையா இல்ல கேரண்டியா?

Priyanka Hochumin July 08, 2022 & 19:00 [IST]
Elon Musk Says Humanity Reach Mars Mission Tamil: மஸ்கின் சூசக ட்வீட்...2029 இல் இது கண்டிப்பாக நடக்கும்! இது கட்டளையா இல்ல கேரண்டியா? Representative Image.

Elon Musk Says Humanity Reach Mars Mission Tamil: கூடிய விவரைவில் மனிதர்கள் செவ்வாய் கிரகம் சென்று வாழத் தான் போகிறார்கள் என்று திட்டவட்டமாக தெரிவித்தார் எலான் மஸ்க். ஏன் இவ்ளோ உறுதியாக கூறுகிறார் பார்ப்போம்?

என்ன ஒரு கனவு

ஒரு மனிதன் டாக்டர் ஆகணும், என்ஜினியர் ஆகணும், கலெக்டர் ஆகணும்லா கனவு காணுவாங்க. ஆனால் இவரு இருக்காரே எலான் மஸ்க் மனிதர்களை செவ்வாய் கிரகத்தில் ஒரு காலனி (அதாவது குடுயிருப்பு) உருவாக்கி அதுல அவர்களை வாழ வைக்கணும்னு கனவு கண்டிருக்காரு. இதுக்கே அவருக்கு ஒரு சல்யூட் கொடுக்கணும். அதற்காக SpaceX நிறுவனம் இயலாது உழைத்து கொண்டிருக்கிறது.

ஆராய்ச்சியாளர்கள் என்ன செய்றாங்க?

உலகில் உள்ள ஆராய்ச்சியாளர்கள் அனைவரும் பூமியைத் தவிர்த்து பிற கோள்களில் மனிதர்கள் உயிர் வாழும் தகுதி எதுக்கு இருக்கிறது என்று தீவிரமாக ஆராய்ச்சி செய்து வருகின்றனர். அதிலும் மிக முக்கியமாக மார்ஸ் அதாவது செவ்வாய் கிரகத்தில் மனிதர்கள் வாழும் தகுதி இருக்கிறது என்று கண்டறியப்பட்டது. இருப்பினும், அடுத்தகட்ட தேடல்கள் குறித்து மிகவும் தீவிரமாக ஆராய்ச்சிகள் நடந்து வருகிறது.

இன்னொரு முக்கியமான விஷயம் என்ன என்றால், நாசாவின் பெர்சவரன்ஸ் ரோவர் செவ்வாய் கிரகத்தில் வெற்றிகரமாக தரையிறக்கப்பட்டுள்ளது. அது செவ்வாய் கிரகத்தை முழுமையாக உலா வந்து புகைப்படங்களை எடுத்து பூமிக்கு அனுப்புகிறது. அதனை நாசா அவ்வப்போது சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து மக்களுக்கு தெரிவிக்கிறது.

இதை பாத்துட்டு ட்வீட் போட்ட மஸ்க்

ட்வீட் போடும் விருப்பத்தில் இருக்கும் மஸ்க், இந்த தகவல் தெரிந்ததும் எப்படி சும்மா இருப்பாரு. உடனே போட்டாரு ஒரு ட்வீட், 'கூடிய விரைவில் மனிதர்கள் செவ்வாய் கிரகத்தில் வாழ்வார்கள்' என்று கூறியுள்ளார். இவர் எப்போதும் சும்மாலாம் ட்வீட் போட மாட்டார், இப்படி ஒன்னு போட்டாருன்னா கண்டிப்பா பின்னாடி ஏதாவது அர்த்தம் இருக்கும். மஸ்க்கின் அந்த கனவை உறுபடுத்த ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் அயலாது பாடுபட்டு வருகிறது.

அதனை தொடர்ந்து, 1969 இல் முதன் முதலில் நிலவில் கால் பாதிக்க முடியும் நாம், எதிர்காலத்தில் செவ்வாய் கிரகத்திலும் அதனை செய்ய முடியும் என்று கூறுயுள்ளார்.

ஸ்பேஸ் எக்ஸ் இன் செவ்வாய் கிரகம் செல்லும் ஷிப்

மஸ்க் 2020 ஆம் ஆண்டின் நடுப்பகுதியில் ஸ்பேஸ் எக்ஸ் இன் ஷிப் செவ்வாய் கிரகத்தில் தரையிறங்கும் என்பர் தெரிவித்தார். ஆனால் அது இன்னும் வளர்ச்சி நிலையில் உள்ளதால், 2029 இல் கண்டிப்பாக செவ்வாய் கிரகத்தில் தரையிறக்கப்படும் என்று கூறியுள்ளார். இதுவரை ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் லான்ச்-கான உரிமத்தை பெறவில்லை. அமெரிக்க ஃபெடரல் ஏவியேஷன் அட்மினிஸ்ட்ரேஷன் (FAA) ஸ்டார்ஷிப்பின் முதல் சோதனையின் போது 75 நிபந்தனைகளை விதித்துள்ளதாம். மேலும் சோதனையின் பொழுது ஸ்டார்ஷிப் இதுவரை 400 ஆதி உயரம் வரை சென்றுள்ளதாம். இதனை பார்க்கும் போது இதுவரை கட்டமைக்கப்பட்ட ராக்கெட்டில் மிகவும் சக்தி வாய்ந்த ராக்கெட் ஸ்டார் ஷிப் இது தான் என்று தெரிவிக்கப்படுகிறது.

மனிதர்களுக்கு பயிற்சி

செவ்வாய் கிரக உருவகப்படுத்தல் இடம், அதாவது செவ்வாய் கிரக மாதிரி சூழல் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. அது  ஹூஸ்டன் அருகே பாலைவனப் பகுதியில் மணற்குன்றின் மீது உருவாக்கப்பட்டது. ஏனெனில் மார்ஸில் மனிதர்களை அனுப்புவதற்கு முன்பு ஆண்டு எப்படி எல்லாம் இருக்கும் என்று அவர்களை தயார் படுத்த இந்த இடம் உதவியாக இருக்கும் என்று கூறப்படுகிறது. அதனால் அந்த இடத்தில் ஓராண்டு மனிதர்கள் தங்கி பயிற்சி எடுக்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இவை அனைத்தும் சரியாக நடந்தால் மனிதர்களை செவ்வாய் கிரகம் அனுப்ப நாசா திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

Elon musk says humanity reach mars mission tamil, Elon Musk Mars, elon musk says humanity reach mars mission, elon musk mars mission name, elon musk mars mission date, elon musk mars colony plan, elon musk tweet, 

உடனுக்குடன் செய்திகளை (Technology News) தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்