Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Solar Storm to Strike Earth Today: பூமியைத் தாக்க வரும் சோலார் புயல்..? இதனால இவ்வளவு பெரிய ஆபத்தா…?

Gowthami Subramani July 19, 2022 & 09:15 [IST]
Solar Storm to Strike Earth Today: பூமியைத் தாக்க வரும் சோலார் புயல்..? இதனால இவ்வளவு பெரிய ஆபத்தா…?Representative Image.

Solar Storm to Strike Earth Today: சூரியன் ஒரு பெரிய சூரியப் புயலை வெளியிடும் எனவும், அது பூமியைத் தாக்கக்கூடியவையாக அமையும் எனவும் கூறப்படுகிறது. இதனால், இருட்டடிப்பாகவும், சக்திவாய்ந்த சூரிய புயலை ஏற்படுத்தக் கூடியவையாகவும் அமையும்.

இதனால், பூமியில் ஏற்படும் விளைவுகள் பற்றி இங்கு காண்போம். இந்தப் புயலின் காரணமாக நமது கிரகத்தில் பெரும் விளைவுகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளது. கடந்த ஜூன் மாதம் 14 ஆம் நாள், சூரியனில் இருந்து வெடித்த சூரிய ஒளி பற்றிய எச்சரிக்கையை தேசிய பெருங்கடல் மற்றும் வளிமண்டல நிர்வாகம் (NOAA) தெரிவித்தது.

இது குறித்து, விண்வெளி நிபுணர்கள் கூறியதாவது, சூரிய எரிப்பு விரைவில் பூமியைத் தாக்கக் கூடும் என தெரிவித்தனர்.

சூரிய எரிப்பு என்றால் என்ன?

சூரியனின் மேற்பரப்பில் மிகப் பெரிய வெடிப்புகள் உருவாகும். இந்த வெடிப்பு மின் காந்த கதிர்வீச்சு மற்றும் கடுமையான வெப்பத்தின் வெடிப்புகளைத் தருகிறது. ஆனால், பூமி வெப்பத்தால் பாதிக்கப்படாது என்ற போதிலும், மின் காந்த கதிர்வீச்சால் எளிதில் பாதிக்கப்படலாம் எனவும் கூறப்படுகிறது.

இந்த மின் காந்த கதிர்வீச்சு காரணமாக, தகவல் பரிமாற்றங்கள் பாதிக்கப்படலாம் என ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

இயற்பியலாளரின் ட்வீட்

பூமியை மின் காந்த கதிர்வீச்சு மூலம் தாக்க நினைக்கும் இந்த சூரிய புயல் பற்றிய தகவல்களை இயற்பியலாளரான டாக்டர் தமிதா ஸ்கோ ட்வீட் செய்திருந்தார். அதில், அவர் கூறியதாவது, பூமி தாக்கும் மண்டலத்தில் இருக்கும் போது, பாம்பு போன்ற இழை ஒரு பெரிய சூரிய புயலாக ஏவப்பட்டது. இன்று அதாவது ஜூலை 19 தொடக்கத்தில் சூரிய புயலின் தாக்கம் ஏற்படக் கூடும் என நாசா அறிவித்துள்ளது.

விளைவுகள்

மேலே கூறப்பட்டது போல், பூமி வெப்பத்தால் பாதிப்படையாது என்றாலும், மின் காந்த கதிர்வீச்சால் பாதிப்படையும். இதன் காரணமாக, ரேடியோ, ஜிபிஎஸ் பயனர்களுக்கான தகவல் தொடர்பு பரிமாற்றத்தில் இடையூறுகள் ஏற்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.....


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்