Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

பங்குதாரர்கள் ஒப்புதல்...ட்விட்டரை மொத்தமாக தன்வசமாகிய Elon Musk!

Priyanka Hochumin September 14, 2022 & 17:00 [IST]
பங்குதாரர்கள் ஒப்புதல்...ட்விட்டரை மொத்தமாக தன்வசமாகிய Elon Musk!Representative Image.

ட்விட்டரை கதிகலங்க வைக்கும் எலான் மஸ்க் தற்போது ட்விட்டரின் சொந்தக்காரங்க ஆகிவிட்டாரா? உங்களுக்கு தெரியாது ஒன்றும் இல்லை. தனது ஒரே ட்வீட் மூலம் அனைவரின் கவனத்தை ஈர்க்கும் எலான் மஸ்க் 44 பில்லியன் அமெரிக்கா டாலர் அதாவது இந்திய நிலவரப்படி சுமார் 3 லட்சம் கோடிக்கு ட்விட்டர் நிறுவனத்தை வாங்க ஒப்பந்தம் மேற்கொண்டனர். எல்லாம் சரியாக போய் கொண்டிருந்த நிலையில் திடீரென்று கடந்த ஜூலை 10 ஆம் தேதி ட்விட்டர் நிறுவனத்துடன் மேற்கொண்ட ஒப்பந்தத்தை ரத்து செய்வதாக மஸ்க் தெரிவித்துள்ளார்.

காரணம்! எலான் மஸ்க் அவர்கள் ட்விட்டர் பணியாளர்களுடன் காணொளி மூலம் மீட்டிங் ஒன்று நடத்தியுள்ளார். அதில் ட்விட்டர் வலை தளத்தில் போலி அக்கவுண்டின் முழு புள்ளி விவரம், புதிய போலி அக்கவுண்ட் உருவாவதை தடுக்கும் நடவடிக்கைகள் என்று அனைத்து விவரங்களை வெளியிட வேணும் என்பர் கூறியுள்ளார். இதனால் ட்விட்டர் கையகப்படுத்த தடையாக பல பிரச்சனை இருந்ததாகவும் அவர் கூறியுள்ளார்.

இப்படியாக இருக்கும் நிலையில் ட்விட்டரின் பங்கு தாரர்கள் ட்விட்டரை 3.50 லட்சம் கோடிக்கு எலான் மஸ்க் அவர்களுக்கு விற்க ஒப்புக்கொண்டதாக கூறப்படுகிறது. இதில் என்ன மாஸ் என்றால், இந்த ஒப்பந்தத்தில் இருந்து மஸ்க் பின்வாங்கிய நிலையிலும் பங்கு தாரர்கள் இந்த முடிவை எடுத்துள்ளார்கள். இதற்கு எலான் மஸ்க் அவர்கள் என்ன செய்வார் என்று காத்திருந்து தான் பார்க்கணும்.

இவ்ளோ கொளறுபடிகள் நடந்து கொண்டிருக்கும் நிலையில் எலான் மஸ்க் இங்கிலாந்தை சேர்ந்த மான்செஸ்டர் யுனைடெட் கால்பந்து கழகத்தை வாங்க தயாராக இருப்பதாக ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். இந்த ட்வீட் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது. எனவே, டெஸ்லா பங்கு தாரர்கள் இது உண்மையா என்று அவரிடம் கேள்வி எழுப்பியதும், இல்லை சும்மா! விளையாட்டுக்கு என்று பதில் அளித்துள்ளார். நான் எந்த ஒரு விளையாட்டு அணியையும் வாங்கும் போவதில்லை என்று கேலி செய்துள்ளார்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்