Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Google Pixel 7 Launch Date in India: கூகுளின் அடுத்த பிளாக்ஷிப் Pixel 7 சீரிஸ்...கூடிய விரைவில்! என்னென்ன இருக்குது தெரியுமா?

Priyanka Hochumin September 14, 2022 & 10:55 [IST]
Google Pixel 7 Launch Date in India: கூகுளின் அடுத்த பிளாக்ஷிப் Pixel 7 சீரிஸ்...கூடிய விரைவில்! என்னென்ன இருக்குது தெரியுமா?Representative Image.

சமீபத்தில் ஆப்பிள் நிறுவனம் தங்களின் ஐபோன் 14 சீரிஸ் வெளியிட்டதை தொடர்ந்து, இந்த வருடத்திற்கான அடுத்த பிக் டெக் ஈவென்திற்காக காத்துக்கொண்டிருக்கிறோம். அந்த வகையில் உலகின் மிகப்பெரிய டெக் ஜாம்பவான் என்று கருதும் கூகுள் நிறுவனம் தனது சமீபத்திய பிக்சல் ஹார்டுவேர் நிகழ்வை நடத்தத் தயாராகி வருகிறது. மேலும் அந்த நிகழ்வு அக்டோபர் 6 ஆம் தேதி நடைபெறவுள்ளதாக கூறப்படுகிறது. எனவே, Google I/O 2022 ஈவென்ட் நடைபெற இன்னும் 3 வாரங்களே இருக்கும் நிலையில், கூகுள் தங்களின் Pixel 7 சீரிஸை பகிரங்கமாக அறிவிக்கும் என்ற தகவல் பரவலாக பேசப்படுகிறது.

இதோ இதுவரை நமக்கு கிடைத்த விவரங்களை இந்த பதிவில் பார்த்து தெரிந்துகொள்ளுங்கள்.

இந்த மாடல் தான் வரப்போகிறதா?

Pixel 7 மற்றும் Pixel 7 pro என்னும் இரண்டு மாடல்களை தான் கூகுள் அறிவிக்கப்போகிறது. மேலும் நிறுவனம் வெளியிட வீடியோ டீசர் மூலம் நமக்கு தெரிந்தது என்னவென்றால், இந்த புது மாடல் ஸ்மார்ட்போன் பழைய மாடல்களைப் போன்ற வடிவமைப்பைக் கொண்டு வருகிறது. இந்த புது மாடலில் சென்சாரின் இடம் மாற்றப்பட்டுள்ளது.

கேமரா இப்படி தான் வருமாம்!

Pixel 7 சீரிஸ் போனின் பின்புறத்தில் ஹாரிஸான்டல் கேமரா மாடியூல் அப்படியே இருக்கும். மெயின் கேமரா மற்றும் அல்ட்ரா-வைட்-ஆங்கிள் சென்சார் இரண்டும் ஒன்றாக இணைக்கப்பட்டுள்ளதாம். மூன்றாவது கேமெராவாக டெலிஃபோட்டோ லென்ஸ் தனியாக பொருத்தப்பட்டுள்ளது. பிக்சல் 6 சீரிஸுடன் ஒப்பிடும்போது ரியர் கேமரா மாடியூல் ரெண்டர்களின் பரிந்துரைக்கு ஏற்ப கொஞ்சம் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

எப்பையும் போல் பேக் பேனலில் Google லோகோ நம்மால் பார்க்க முடியும். ஸ்டாண்டர்ட் மாடல் போனில் டூயல் ரியர் கேமரா மற்றும் ப்ரோ வேரியண்டில் ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது. டீசர் வீடியோவை வைத்து பார்க்கும் போது இந்த ஸ்மார்ட்போன்கள் பிளாக், வைட் மற்றும் கோரல் கலர்களில் கிடைக்கும்.

டிஸ்பிளேவைப் பற்றி தெரிஞ்சிக்கணும்னா?

வெளியான டீசர் வீடியோவில் போனின் டிஸ்பிளே அதாவது முன்பகுதி பெரிதாக காண்பிக்கவில்லை. இருப்பினும் Pixel 7 சீரிஸ் அதற்கு முந்தைய மாடல்களைப் போலவே பஞ்ச்-ஹோல் டிஸ்ப்ளே வடிவமைப்பை கொண்டிருக்கலாம். பிக்சல் 6 ஐ விட ஸ்டாண்டர்ட் மாடல் போன் மிகவும் கச்சிதமாக இருக்கலாம் என்றும், அதே சமயத்தில் ப்ரோ மாடல் அதே ஷ்கிரீன் அளவைக் கொண்டு இருக்கும் என்றும் கூறப்படுகிறது. பிக்சல் 7 மாடல் 6.7 இன்ச் 120Hz பேனலுடன் வரலாம் மற்றும் ரெகுலர் வெர்சன் 90Hz புதுப்பிப்பு வீதத்துடன் 6.3 இன்ச் திரையைக் கொண்டிருக்கலாம்.

பவர்ஃபுல் பிராஸசர்...

இந்த இரண்டு மாடல் டிவைஸ்களும் கூகுளின் இரண்டாம் தலைமுறை டென்சர் சிப்செட் மூலம் இயக்கப்படும். பிக்சல் 7 சீரிஸ் ஆண்ட்ராய்டு 13 ஓஎஸ் உடன் அனுப்பப்படலாம். பேட்டரி பற்றிய எந்த தகவலும் இன்னும் வெளியாகவில்லை, இருப்பினும் புது மாடல்கள் பெரிய அலகுகளை வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் பாஸ்ட் சார்ஜிங் டெக்னாலஜியின் ஆதரவையும் கூகுள் வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதுவரை கிடைத்த தகவலைகள் இதுவே. இந்த மாடல்கள் இந்தியாவிற்கு எப்பொழுது வரும் என்று தெரியவில்லை. பெரும்பாலும் விற்பனைக்கு இந்தியா வர வாய்ப்புகள் இல்லை. ஏனெனில் கூகுள் நிறுவனம் தங்களின் பிளாக்ஷிப் போன்களை இந்தியாவில் விற்பனை செய்வது நிறுத்தி பல ஆண்டுகள் ஆகிவிட்டது. பார்க்கலாம் இந்த மாடல் இந்திய மார்க்கெடிற்கு வருமா என்று. 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்