Fri ,Mar 29, 2024

சென்செக்ஸ் 73,651.35
655.04sensex(0.90%)
நிஃப்டி22,326.90
203.25sensex(0.92%)
USD
81.57
Exclusive

உங்க ஸ்மார்ட்போன் Hack செய்யப்பட்டிருக்கிறதா? சில அறிகுறிகளை வச்சி கண்டுபிடிக்கலாம்!

Priyanka Hochumin September 09, 2022 & 13:30 [IST]
உங்க ஸ்மார்ட்போன் Hack செய்யப்பட்டிருக்கிறதா? சில அறிகுறிகளை வச்சி கண்டுபிடிக்கலாம்!Representative Image.

மனிதர்களாகிய நாம் மிகவும் புத்திசாலிகள் எப்படி தெரியுமா? கற்பனையால் எட்டி பார்க்க முடியாத கண்டுபிடுப்புகளை கண்டுபிடிக்கும் வல்லமை படைத்தவர்கள். இருப்பினும் அதிபுத்திசாலி யார் தெரியுமா? அந்த  கண்டுபிகளில் இருக்கும் ஓட்டையை கண்டறிந்து தன்னுடைய வேலையை காண்பிக்கும் வித்துவான்கள். அது போல தான் டிஜிட்டல் மயமாகி வரும் காலகட்டத்தில் இருக்கும் நாம் சூதானமாக இருப்பது அவசியம். நம்மைப் பற்றிய ஒரு தகவல் கிடைத்தால் போதும், மொத்த விவரத்தையும் கறந்து விடுவார்கள். எனவே, நீங்கள் மிகமுக்கியமாக தெரிந்துகொள்ள வேண்டியது உங்களின் ஸ்மார்ட் டிவைஸ்களை யாரேனும் ஹேக் செய்துவிட்டார்களா என்பது தான்.

உங்களின் ஸ்மார்ட்போன் ஹேக் செய்யப்பட்டுள்ளது என்பதை சில அறிகுறிகளை வைத்து நம்மால் கண்டறிய முடியும். அப்படி ஒருவேளை உங்க போன் ஹேக் செய்யப்பட்டால் அதற்கு என்ன செய்ய வேண்டும் என்னும் வழிமுறையையும் இந்த பதிவில் பார்ப்போம்.

முதலில் ஹேக் செய்யப்பட்டதற்கான அறிகுறிகள்

உங்களின் ஸ்மார்ட்போனில் தேவையில்லா நேரங்களில் நிலையற்ற பாப்-அப் மெசேஜ் ஓபன் ஆகினால் உங்களுடைய போன் ஹேக் செய்யப்பட்டுள்ளது என்னும் உறுதியாகிவிட்டது. மேலும் X ரேடெட் கன்டென்ட் மற்றும்  பிரகாசமான விளம்பரங்கள் அடிக்கடி காணப்பட்டால் உங்கள் போன் ஹேக் செய்யப்பட்டிருக்கும் அறிகுறியை குறிக்கும்.

நாம் வேலை செய்யும் கவனத்தில் தினசரி டேட்டா எந்த அளவிற்கு யூஸ் ஆகிறது என்பதை கவனிக்க மறந்து விடுகிறோம். எனவே, இனிமேல் கவனியுங்கள் வழக்கத்திற்கு மாறாக திடீரென்று அதிக டேட்டா பயன்படுத்தப்பட்டால் உங்களின் போனை சோதனை செய்து பாருங்கள். இதுவும் ஹேக் செய்யப்பட்டிருக்கும் காரணமாக இருக்கலாம்.

நீங்கள் ஒரு நாளைக்கு யாருடன் பேசுனீர்கள் அல்லது யாருக்கு மெசேஜ் அனுப்புனீர்கள் என்று உங்களுக்கு கட்டாயம் தெரிந்திருக்கும். எனவே, நீங்க செய்யாத மெசேஜ் அல்லது வாய்ஸ் கால் நம்பர் தென்பட்டால் உங்கள் போன் ஹேக் செய்யப்பட்டிருக்கலாம்.

உங்களுடைய ஸ்மார்ட்போனை எப்பையும் போல யூஸ் செய்தாலும் போனின் பேட்டரி மட்டும் சீக்கிரம் குறைந்து ரெட் அலெர்ட் காண்பிக்கிறது என்றால் போன் ஹேக் செய்யப்பட்டிருக்கலாம் என்று அர்த்தம்.

அதே போல் நீங்கள் டவுன்லோட் செய்யாத எந்த ஒரு ஆப்ஸூம் உங்கள் போனில் இருந்தால் உங்கள் போன் ஹேக் செய்யப்பட்டிருக்கலாம்.

ஹேக் ஆகிடுச்சா? அப்ப தப்பிக்க என்ன செய்யணும்?

அதற்கும் சில வழிகள் உள்ளது. அதனை அப்படியே பின்பற்றினால் எந்த பிரச்னையும் இல்லை.

உங்களுடைய ஸ்மார்ட்போனை பேக்டரி ரீசெட் செய்யலாம்.

அல்லது உங்கள் போனை ஆன்டி-வைரஸ் சாப்ட்வேர் பயன்படுத்தி முழுமையாக ஸ்கேன் செய்து காத்துக்கொள்ளலாம்.

நீங்கள் டவுன்லோட் செய்யவில்லை ஆனால் சந்தேகத்திற்கு இடமாக இருக்கும் மொபைல் ஆப்ஸ்-களை போனில் இருந்து அன்-இன்ஸ்டால் செய்துவிடுங்கள்.

இன்னும் ஜாக்கிரதையாக இருக்க போனின் பாஸ்வோர்டை கொஞ்சம் கஷ்டமாக இருப்பது போன்று மாற்றி விடுங்கள்.

உங்கள் போன் ஹேக் செய்யப்பட்டிருக்கிறது என்பது தெரிந்ததும் சேவை மையத்திற்கு சென்று அதனை சரி பார்க்கவும். இப்படி செய்வதால் மூலம் பாதுகாப்பு மீறல்களை நம்மால் தடுக்க முடியும்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்