Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

வந்தாச்சு ஃபிளிப்கார்ட் பிக் சேவிங்ஸ் டே.. அட்டகாசமான ஆஃபரில் நீங்கள் எதிர்பார்த்த எல்லாத்தையும் வாங்கலாம்.! | Flipkart Big Savings Day 2023

Gowthami Subramani Updated:
வந்தாச்சு ஃபிளிப்கார்ட் பிக் சேவிங்ஸ் டே.. அட்டகாசமான ஆஃபரில் நீங்கள் எதிர்பார்த்த எல்லாத்தையும் வாங்கலாம்.! | Flipkart Big Savings Day 2023Representative Image.

மக்கள் அனைவரும் எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருந்த ஃபிளிப்கார்ட் பிக் சேவிங் டேஸ் விற்பனையானது ஜூன் 10 ஆம் நாள் தொடங்கி, ஜூன் 14 ஆம் நாள் முடிவடைகிறது. இந்த விற்பனையின் போது, எலக்ட்ரானிக்ஸ், மொபைல்கள், லேப்டாப்கள், ஃபேஷன், மற்றும் அத்தியாவசியப் பொருள்கள் போன்றவற்றிற்கு ஃபிளிப்கார்ட்டில் ஆஃபர் வழங்கப்படுகிறது.

நான்கு நாள்கள் உள்ள இந்த விற்பனையில், பயனர்கள் தங்களது விருப்பத்திற்கேற்ப ஆஃபரில் பொருள்களை வாங்கிக் கொள்ளலாம்.

டெபிட் கார்டு சலுகைகள்

HDFC மற்றும் Kotak போன்ற வங்கி டெபிட் மற்றும் கிரெடிட் கார்டு பயனர்கள் ஸ்மார்ட்போன் பிராண்டுகளைக் குறைந்தபட்சம் ரூ.500 தள்ளுபடியும், அதிகபட்சமாக ரூ.5000 தள்ளுபடியும் கொண்டிருக்கிறது.

மளிகைப் பொருள்கள் வாங்கும் போது, பயனர்கள் குறைந்தபட்சமாக ரூ.250 தள்ளுபடி பெறலாம். HDFC மற்றும் kotak வங்கி டெபிட் கார்டு மற்றும் கிரெடிட் கார்டு பயனர்களுக்கு அதிகபட்சமாக ரூ.2,000 தள்ளுபடியும் பெறலாம்.

இதனிடையில், HDFC மற்றும் Kotak வங்கி டெபிட் மற்றும் கிரெடிட் கார்டு பயனர்களுக்கு மற்ற பொருள்கள் வாங்கும் போது, குறைந்தபட்சமாக ரூ.1,250-ம், அதிகபட்சமாக ரூ.5,000-ம் தள்ளுபடி இருக்கும் எனக் கூறப்படுகிறது.

இந்த விற்பனையில் ஃபிளிப்கார்டு ஆக்ஸிஸ் வங்கி கிரெடிட் கார்டைப் பயன்படுத்தக் கூடிய வாடிக்கையாளர்களுக்கு வரம்பற்ற 5% கேஷ்பேக் பெறலாம்.

டிவி மற்றும் மற்ற உபகரணங்களுக்கு 75%, எலக்ட்ரானிக்ஸ்-க்கு 80%, ஃபேஷனுக்கு 50-80% வரையிலும் தள்ளுபடி வழங்கப்படுகிறது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்