Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

மோட்டோவின் அடுத்த பட்ஜெட் ஸ்மார்ட்போன் ரிலீஸ்...எப்ப தெரியுமா? | Moto G14 Specifications in Tamil

Priyanka Hochumin Updated:
மோட்டோவின் அடுத்த பட்ஜெட் ஸ்மார்ட்போன் ரிலீஸ்...எப்ப தெரியுமா? | Moto G14 Specifications in TamilRepresentative Image.

இந்தியாவில் மோட்டோரோலா நிறுவனம் அடுத்த பட்ஜெட் ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்ய உள்ளது. Moto G14 ஆகஸ்ட் 1 ஆம் தேதி முதல் பிளிப்கார்ட் மூலம் பயன்பாட்டிற்கு வரும் என்பது நிரூபணமானது. மேலும் இந்த புது மாடல் பற்றிய விவரக்குறிப்புகளை லேண்டிங் பேஜ் மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் அன்று மதியம் 12 மணி முதல் மோட்டோ ஜி 14 ஸ்மார்ட்போனை ப்ரீ-ஆர்டர் செய்து பெற்றுக்கொள்ளலாம்.

மோட்டோ ஜி 14 அம்சங்கள்

வரவிருக்கும் மோட்டோ ஜி 14 ஆனது, 6.5-இன்ச் முழு எச்டி பிளஸ் டிஸ்பிளேவைக் கொண்டு வரும். 4GB ரேம் மற்றும் 128GB UFS 2.2 சேமிப்பகத்துடன் இணைக்கப்பட்ட ஆக்டா-கோர் யூனிசாக் T616 SoC மூலம் இயக்கப்படும். இது ஆண்ட்ராய்டு 13 அவுட்-ஆஃப்-தி-பாக்ஸில் இயங்குவது உறுதிசெய்யப்பட்டுள்ளது. கூடுதலாக, பின்புறத்தில் 50MP டூயல் ரியர் கேமரா அமைப்பு பொருத்தப்பட்டுள்ளது. அதே போல், முன்பக்கத்தில் 8MP செல்பீ கேமராவும் இருக்கிறது. அது டாப் - சென்டரில் நிலைநிறுத்தப்பட்ட வாட்டர் டிராப்-ஸ்டைல் நாட்ச்சில் வைக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

இதில் 20W சார்ஜிங் ஆதரவை வழங்கும் 5,000mAh பேட்டரியுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனால் 34 மணிநேர டாக் டைம் மற்றும் 16 மணிநேர வீடியோ ஸ்ட்ரீமிங் வழங்குவதாகக் கூறப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போனில் இருக்கும் மற்ற சிறப்பம்சங்கள் - வாட்டர் ரெசிஸ்டன்ஸை உறுதிப்படுத்தும் IP52 மதிப்பீடு, பக்கவாட்டில் பொருத்தப்பட்ட கைரேகை சென்சார் மற்றும் பயோமெட்ரிக் அங்கீகாரத்திற்கான முகம் அங்கீகாரம் மற்றும் டூயல் சிம் 4G இணைப்பு ஆகியவை அடங்கும். இப்படி பல சிறப்புகளைக் கொண்டிருக்கும் மோட்டோ ஜி 14 ஸ்மார்ட்போன் ப்ளூ மற்றும் கிரே கலர் ஆப்ஷனில் கிடைக்கும்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்