Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Fun Facts About Technology 2022: இதெல்லாம் உண்மை...ஆனா கண்டுபிடிச்சது...யாருன்னே தெரியாத ஆச்சர்யம்!

Priyanka Hochumin October 25, 2022 & 14:00 [IST]
Fun Facts About Technology 2022: இதெல்லாம் உண்மை...ஆனா கண்டுபிடிச்சது...யாருன்னே தெரியாத ஆச்சர்யம்! Representative Image.

Fun Facts About Technology 2022: நமக்கு ஒரு சில விஷயங்கள் டெக்னாலஜி சம்மந்தப்பட்டது தெரிந்திருக்கும். இருப்பினும் இந்த போஸ்ட் கார்டு போல சின்ன சின்ன தகவல்களுக்கு நமக்கு பொழுது கழிக்க உபயோகமாக இருக்கும் . அது போல தான் இந்த பதிவில் ஒரு சிலருக்கு தெரிந்திருக்கலாம் அல்லது தெரியாமல் இருக்கலாம். அப்படியான தகவல்களைப் பற்றி பார்ப்போம். 

1. பிட்காயின் நிறுவனர் யார்

சடோஷி நகமோட்டோ என்பது உலகின் மிகவும் பிரபலமான கிரிப்டோகரன்சியான பிட்காயினின் ஒரே புனைப்பெயர். இப்போது வரை, அவரது உண்மையான அடையாளம் உலக மர்மமாகவே உள்ளது. ஆனால் நிறைய பேர் நான் தான் சடோஷி நகமோட்டோ என்று சொல்லிக் கொண்டு சுற்றிக்கொண்டிருந்தனர். 

ஒரு நபர், ஆஸ்திரேலிய கணினி விஞ்ஞானி கிரேக் ஸ்டீவன் ரைட், நகமோட்டோ என்று பகிரங்கமாக கூறிக்கொண்டார், இருப்பினும் இந்த கூற்று சந்தேகத்திற்குரியதாக உள்ளது.

நகமோட்டோவின் பெயர் ஜப்பானியர் என்றாலும், அவர் ஜப்பானில் வசிப்பவர் என்று 2012 இல் கூறினார். அது எந்த அளவிற்கு உண்மை என்று இதுவரை யாருக்கும் தெரியாது. 

2. இவர் டைம் ட்ராவேலரா....

டிக்டாக்கில் ரேடியன்ட் டைம் ட்ராவேலர் என்ற அக்கவுண்ட்டில் பல விசித்திரமான போஸ்ட்களை அவர் பதிவிட்டுள்ளார். அதில் தான் நிஜமாகவே 2671 இருந்து கூறும் ஒரு ரியல் டைம் ட்ராவேலர் என்று அவர் குறிப்பிட்டு வருகிறார். அது எந்த அளவிற்கு உண்மை என்று தெரியவில்லை. சமீபத்தில் போட்ட பதிவில் டிசம்பர் 8, 2022 அன்று ஏலியன்கள் பூமியில் கால் பதிபார்கள் என்று கூறியுள்ளார்.  

3. அதிக இன்டர்நெட் ஸ்பீட் இருக்கும் இடம்!

உலகிலையே அதிக இன்டர்நெட் ஸ்பீட் இருக்கும் இடம் ஜப்பான் தான். அதாவது ஒரு வினாடிக்கு 319 டெராபிட் வேகமான இன்டர்நெட் ஸ்பீட் கொண்டுள்ளது. இது எந்த அளவுக்கு ஸ்பீட் என்று நமக்கு புரியும் மாறி சொல்லனும்னா? வினாடிக்கு சுமார்  80,000 திரைப்படங்களைப் டவுன்லோடு செய்யும் அளவுக்கு வேகமானது. இது எப்படி சாத்தியம்? என்றால், இந்த உலக சாதனையை சாத்தியமாக்க பொறியாளர்கள் ஃபைபர்-ஆப்டிக் கேபிள்களைப் பயன்படுத்தியுள்ளனர்.  


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்