Fri ,Mar 29, 2024

சென்செக்ஸ் 73,651.35
655.04sensex(0.90%)
நிஃப்டி22,326.90
203.25sensex(0.92%)
USD
81.57
Exclusive

அமேசான், நெட்பிளிக்ஸ் எல்லாம் ப்ரீதான்.. ஆனால்.. ஜியோ செய்த தில்லாலங்கடி!!

Sekar Updated:
அமேசான், நெட்பிளிக்ஸ் எல்லாம் ப்ரீதான்.. ஆனால்.. ஜியோ செய்த தில்லாலங்கடி!!Representative Image.

ஜியோ தனது வாடிக்கையாளர்களுக்கு நெட்ப்ளிக்ஸ் சந்தாவை இலவசமாக கொடுப்பதாகக் கூறிய நிலையில், அது போஸ்ட்பெய்டு கஸ்டமர்களுக்கு மட்டும் தான் தெரிய வந்ததால், ப்ரீபெயிடு வாடிக்கையாளர்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.

இந்திய டெலிகாம் துறையில் ஜியோவின் வரவு மிகப்பெரிய இணைய புரட்சியை ஏற்படுத்தியது என்றே கூறலாம். ஜியோ வருவதற்கு முன்பு, இந்திய மொபைல் சந்தாதாரர்கள் மாதம் ஒரு ஜிபி டேட்டாவுக்கு 200 ரூபாய், 300 ரூபாய் செலவழித்த நிலையில், ஜியோ வந்த பிறகு ஒரு நாளைக்கு 2 ஜிபி, 3 ஜிபி பயன்படுத்தும் அளவுக்கு இணைய சேவை மிகவும் விலை மலிவானதாகி விட்டது.

குறிப்பாக, ஜியோ இலவச கால், டேட்டா என்பதோடு நிறுத்திக் கொள்ளாமல் அமேசான் பிரைம், நெட்பிளிக்ஸ், ஹாட்ஸ்டார் போன்ற ஓடிடி சேவைகளையும் இலவசமாக கொடுத்து வாடிக்கையாளர்களை கவர்ந்து வருகிறது. 

ப்ரீபெய்டு திட்டத்தில் பெரும்பாலும் அமேசான் அல்லது ஹாட்ஸ்டார் போன்றவற்றில் ஏதேனும் ஒன்றை மட்டும் இலவசமாக கொடுக்கும் ஜியோ, தற்போது தனது போஸ்ட்பெய்டு திட்டத்தில் அமேசான் மற்றும் நெட்பிளிக்ஸ் என இரண்டையும் கொடுத்து வாடிக்கையாளர்களை கவர்ந்து வருகிறது. 

ஜியோவில் ப்ரீபெய்டு வாடிக்கையாளர்கள் இருக்கும் அளவிற்கு போஸ்ட்பெய்டு வாடிக்கையாளர்கள் இல்லை எனக் கூறப்படுகிறது. இதனால் தான் போஸ்ட்பெய்டு வாடிக்கையாளர்களை கவர இந்த திட்டத்தை தொடங்கியுள்ளதாகக் கூறப்படுகிறது. ஆனால் இது, ஜியோ ப்ரீப்பெய்டு வாடிக்கையாளர்கள் மத்தியில் கோபத்தை ஏற்படுத்தியுள்ளதால், நாங்க மட்டும் என்ன "தக்காளி தொக்கா" என கொந்தளித்து வருகின்றனர்.

சரி, ஜியோ தனது போஸ்ட்பெய்டு வாடிக்கையாளர்களுக்கு கொடுக்கும் திட்டத்தின் நன்மைகளை தெரிந்துகொள்ள வேண்டாமா? அமேசான் பிரைம் மற்றும் நெட்பிளிக்ஸ் இலவசமாக கொடுக்கும் ஜியோவின் இந்த போஸ்ட்பெய்டு திட்டத்தின் விலை ரூ.399 ஆகும். 

இந்தத் திட்டத்தில், இந்தியாவில் உள்ள அனைத்து நெட்வொர்க்குகளுக்கும் பேச வரம்பில்லா கால் வசதி கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் 75 ஜிபி டேட்டாவும் வழங்கப்படுவதோடு, முழுமையாக டேட்டாவை பயன்படுத்தி முடிக்கவில்லை என்றால், 200 ஜிபி டேட்டா வரை ரோல் ஓவர் செய்துகொள்ளும் அம்சமும் கூடுதலாக வழங்கப்படுகிறது. 

இது தவிர நெட்பிளிக்ஸ் மற்றும் அமேசான் பிரைம் சந்தாக்களை முற்றிலும் இலவசமாக வழங்குகிறது. வழக்கமாக நாம் ப்ரீபெய்டில் டேட்டாவுக்கு செலவழிக்கும் தொகையோடு ஒப்பிடும்போது, இது கூடுதல் செலவாக தெரியவில்லை. மேலும் கூடுதலாக உலகம் முழுவதும் ரிலீஸாகும் பிரபலமான திரைப்படங்கள் மற்றும் வெப்சீரிஸ்களை இலவசமாக கண்டு ரசிக்க முடியும் என்பதால் பலரும் இந்த திட்டத்திற்கு மாற ஆர்வம் காட்டி வருகின்றனர். 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்