Sat ,Apr 20, 2024

சென்செக்ஸ் 73,088.33
599.34sensex(0.83%)
நிஃப்டி22,147.00
151.15sensex(0.69%)
USD
81.57
Exclusive

தீபாவளி பர்ச்சேஸ்-க்கு நம்ப Samsung...வெறும் 20 நிமிடங்களில்...லோன் தராங்க! எல்லாமே வாங்கலாம்

Priyanka Hochumin October 21, 2022 & 14:15 [IST]
தீபாவளி பர்ச்சேஸ்-க்கு நம்ப Samsung...வெறும் 20 நிமிடங்களில்...லோன் தராங்க! எல்லாமே வாங்கலாம்  Representative Image.

தீபாவளிக்கு வீட்டுக்கு தேவையான உபயோக பொருட்களை தள்ளுபடியில் வாங்கிக்கலாம் என்று எல்லாரும் நினைப்பார்கள். அதுக்கு தான் பல எலக்ட்ரானிக்ஸ் கடையில் EMI வசதிகள் தரப்பட்டுள்ளது. ஆனால் நமக்கு கூடுதல் பணம் தேவைப்படும் என்ற போது என்ன செய்யலாம்? கவலை விடுங்க. நமக்கு மிகவும் ஈஸியான வழியில் சாம்சங் நிறுவனம் கடன் உதவி தராங்க.

தீபாவளி பர்ச்சேஸ்-க்கு நம்ப Samsung...வெறும் 20 நிமிடங்களில்...லோன் தராங்க! எல்லாமே வாங்கலாம்  Representative Image

எப்போது ஆரம்பித்தது?

Samsung நிறுவனம் ஸ்மார்ட்போன், டிவி இது போன்ற எலக்ட்ரானிக்ஸ் பொருட்களை மற்றும் விற்கலை, அவங்க சாம்சங் பைனான்ஸ் பிளஸ் (Samsung Finance Plus) என்ற தொழிலும் உள்ளது. சாம்சங் நிறுவனம் இந்த திட்டத்தை 2020 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தியது. ஆனால் அப்போது சாம்சங் கேலக்ஸி ஸ்மார்ட்போன்களுக்கு மட்டும் கடன் உதவி வழங்கப்பட்டது. இந்த சேவை இதுவரை நாடு முழுவதும் 1200 நகரங்களில் சுமார் 3,000 ரீடெயில் ஸ்டோர்களில் அணுக கிடைக்கிறது. இதை 2022 ஆம் ஆண்டு இறுதிக்குள் 5,000 க்கும் மேற்பட்ட சில்லறை விற்பனை நிலையங்களுக்கு விரிவுபடுத்த திட்டமிட்டுள்ளதாக சாம்சங் நிறுவனம் தெரிவித்துள்ளது.

தீபாவளி பர்ச்சேஸ்-க்கு நம்ப Samsung...வெறும் 20 நிமிடங்களில்...லோன் தராங்க! எல்லாமே வாங்கலாம்  Representative Image

தீபாவளி ஸ்பெஷல்!

இந்த Diwali 2022 இல் வாடிக்கையாளர்களை மகிழ்விக்க ஸ்மார்ட்போன்களுக்கு மட்டும் இல்லாமல் ஸ்மார்ட் டிவிகள், சவுண்ட்பார்கள், குளிர்சாதன பெட்டிகள், வாஷிங் மெஷின்கள், மைக்ரோவேவ் ஓவன்கள் மற்றும் ஏர் கண்டிஷனர்கள் போன்ற அனைத்து சாம்சங் தயாரிப்புகளுக்கும் லோன் வழங்கப்படுகிறது. இது இந்த தீபாவளி பண்டிகையை மேலும் சிறப்பாக்கியுள்ளது. சரி, இந்த லோன் வாங்க என்ன செய்யணும் என்னும் விரிவாக பார்க்கலாம்.

தீபாவளி பர்ச்சேஸ்-க்கு நம்ப Samsung...வெறும் 20 நிமிடங்களில்...லோன் தராங்க! எல்லாமே வாங்கலாம்  Representative Image

எது முக்கியம் தேவை....

Samsung Finance Plus மூலம் லோனுக்கு விண்ணப்பிப்பவர்கள் 22 வயதிற்கும் மற்றும் அதற்கு மேல் இருக்க வேண்டும். அப்ப தான் லோன் உண்டு! ஸ்ட்ரிக்டா சொல்லிட்டாங்க. வேற தேவைப்படும் ஆவணங்கள்,

வீட்டு முகவரி

பான் கார்டு நம்பர்

மொபைல் எண்

இமெயில் ஐடி

Direct debit registration-க்கான அக்கவுண்ட் விவரங்கள்

KYC ஆவணங்கள் (ஆதார் அட்டை, பான் கார்டு மற்றும் ஓட்டுநர் உரிமம்)

சரிபார்ப்புக்காக ஒரு செல்பீயையும் நீங்கள் கிளிக் செய்ய வேண்டும்

வேலை தொடர்பான தேவையான விவரங்கள்.

தீபாவளி பர்ச்சேஸ்-க்கு நம்ப Samsung...வெறும் 20 நிமிடங்களில்...லோன் தராங்க! எல்லாமே வாங்கலாம்  Representative Image

அடுத்து என்ன செய்வது...

மேலே கொடுக்கப்பட்ட அனைத்து ஆவணங்களும் பக்காவா இருந்தா, அதை எடுத்துட்டு உங்களுக்கு அருகில் இருக்கும் சாம்சங் ரீடெய்ல் ஸ்டோருக்குச் செல்லுங்கள். அங்கே Samsung Finance Plus சேவை வழங்கும் டெஸ்க்கை கேட்டறிந்து, KYC சரிபார்ப்பிற்கான இ-டாக்குமென்ட்களை சமர்ப்பிக்க வேண்டும். அவர்கள் கேஒய்சி சரிபார்ப்பு மற்றும் கிரெடிட் ஸ்கோரிங் போன்றவற்றை செக் செய்வார்கள். எல்லாம் சரியாக இருந்தால் அடுத்த 20 நிமிடத்தில் எளிதான இஎம்ஐ பேமெண்ட் திட்டங்களுடன் உங்களுக்கான கடன் வழங்கப்படும்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்