Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Fun Facts about Technology 2: பாஸே இது கூட தெரியலைன்னா அசிங்கம்..! பாருங்க என்னென்னு..

Priyanka Hochumin August 16, 2022 & 11:15 [IST]
Fun Facts about Technology 2: பாஸே இது கூட தெரியலைன்னா அசிங்கம்..! பாருங்க என்னென்னு..Representative Image.

Fun Facts about Technology 2: ஹலோ மக்களே! இந்த வாரத்திற்கான டெக்னாலஜியைப் பற்றி சுவாரஸ்ய தகவல் என்ன என்று பார்ப்போம். இன்று நீங்கள் பார்க்கப்போகும் தகவல் உங்களுள் எத்தனை பேத்துக்கு தெரியும் என்று தெரியவில்லை. ஆனால் உங்களுக்கு நிச்சியம் உபயோகமாக இருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

1. என்னடா சொல்றீங்க...

நமக்கு வெப் பிரௌசர் என்றாலே நினைவுக்கு வருவது கூகுள், க்ரோம் போன்றவை தான். உங்களுள் எத்தனை பேத்துக்கு Mozilla Firefox என்னும் வெப் பிரௌசர் இருக்கிறது என்று தெரியும். அந்த பிரௌசரின் லோகோ உலக உருண்டையின் கீழ் பகுதியில் ஒரு விலங்கு இருப்பது போல இருக்கும். இந்த பிரௌசரின் பெயரை கேட்ட உடன் அது நரியாகத் தான் இருக்கும் என்று நினைக்கலாம். ஆனால் அது தவறு, Mozilla Firefox லோகோவில் இருப்பது "சிவப்பு பாண்டா". இப்ப ஒரு கேள்வி தோன்றும், அப்புறம் எதுக்கு பாண்டான்னு வைக்காம Fox-ன்னு வச்சிருக்காங்க என்று. இதில் ஒரு சுவாரஸ்ய தகவல் என்ன என்றால், சிவப்பு பாண்டாவின் புனைப்பெயர் (nick name) "Firefox" ஆகும். அதனால் தான் இந்த பிரௌசருக்கு இந்த பெயர் வைக்கப்பட்டுள்ளது.

2. முதலில் உருவாக்கப்பட்ட வைரஸ்!

உலகத்தின் ஏதோ ஒரு மூலையில் "இது இப்படி இருந்திருந்தால்" என்ற கேள்விக்கான விடையை கண்டுபிடிக்க நிறைய முயற்சிகளை எடுக்கின்றனர். அதனின் பிரதிபலிப்பாக தான் நிறைய புது புது டெக்னாலஜி உருவாக்கப்படுகிறது. அதனுள் ஒன்று தான் இது! உலகின் முதல் கம்ப்யூட்டர் வைரஸாக "க்ரீப்பர்" வைரஸ் திகழ்கிறது. இது 1971 ஆம் ஆண்டு BBN இல் உள்ள பாப் தாமஸ் என்பவர் முற்றிலும் ஒரு சோதனை முயற்சிக்காக உருவாக்கியுள்ளார்.

இந்த வைரஸ் TENEX இயங்குதளத்தில் (OS) இல் இயங்கும் DEC PDP-10 கம்ப்யூட்டரை சிதைத்ததோடு, அதனை சுற்றி நிறுவப்பட்ட அச்சுப்பொறிகளை (printers) கெடுத்து "நான் தான் க்ரீப்பர், உங்களால் முடிந்தால் என்னைப் பிடிக்கவும்!" என்று ஷ்கிரீனில் காண்பித்துள்ளது. க்ரீப்பர்-க்கும் மற்ற வைரஸ்-க்கும் உள்ள முக்கிய வேறுபாடு என்ன என்றால், க்ரீப்பர் அதன் பழைய வெர்சனை டூப்ளிகேட் அதாவது நகலெடுக்கும் போது அதை அழித்துவிடும்.   

இந்த தகவல் உங்களுக்கு புதிதாக இருக்கும் என்று நம்புகிறோம். மீண்டும் பல தெரியாத விஷயங்களை தெரிந்துகொள்ள ஆர்வமாக இருந்தால் அடுத்த வாரம் வரை காத்திருங்கள்.

Fun facts about technology, Fun facts about technology 2022, Fun facts about technology history, Fun facts about technology advancement, Fun facts about technology in education, Fun facts about technology tamil, did you know facts on technology, what is a fact about technology, fun technology facts, interesting facts about technology, interesting facts about technology 2022, interesting facts about technology 2021, interesting facts about technology today in tamil, interesting facts about technology today news.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்