Wed ,Apr 17, 2024

சென்செக்ஸ் 72,943.68
-456.10sensex(-0.62%)
நிஃப்டி22,147.90
-124.60sensex(-0.56%)
USD
81.57
Exclusive

God of War Special Edition: மக்களே God of War Ragnarök இன் ஸ்பெஷல் எடிஷன் வாங்கணுமா? அப்ப ப்ரீ-ஆர்டர் பண்ண ரெடியா இருங்க!

Priyanka Hochumin July 08, 2022 & 12:50 [IST]
God of War Special Edition: மக்களே God of War Ragnarök இன் ஸ்பெஷல் எடிஷன் வாங்கணுமா? அப்ப ப்ரீ-ஆர்டர் பண்ண ரெடியா இருங்க!Representative Image.

God of War Special Edition: கேமிங் தான் எங்களின் மூச்சு, வாழ்க்கை என்று இருக்கும் கேம் பிரியர்களுக்கு ஒரு நற்செய்தி. நீங்கள் ஆவலுடன் எதிர்பார்க்கும் 'காட் ஆஃப் வார்' வீடியோ கேமின் ஸ்பெஷல் எடிஷனை ப்ரீ-ஆர்டர் செய்து வாங்கும் நாளின் தகவல் வெளியாகியுள்ளது.

கேமிங் உலகத்தில் வாழும் ரசிகர்களே இது உங்களுக்கு மிகவும் தெரிந்துகொள்ள வேண்டிய செய்தி. நம்ப எல்லாத்துக்கும் நல்லாவே தெரியும், 'காட் ஆஃப் வார்' கேம் இந்த ஆண்டு நவம்பர் 9 ஆம் தேதி அன்று வெளியாகப் போகிறது. அதுவரைக்கும் ரசிகர்களை ஆவலுடன் வைத்திருக்க இந்த கேமின் கலெக்டர் எடிஷன் ப்ரீ-ஆர்டருக்கு வரப்போகிறது. இது ஜூலை 15 ஆம் தேதி காலை 10 மணி முதல் லைவிற்கு வருகிறது, லான்ச் எடிஷன், டிஜிட்டல் டீலக்ஸ் எடிஷன், கலெக்டர்ஸ் எடிஷன் மற்றும் ஜோட்னர் எடிஷன் ஆகியவை அடங்கும். இந்த எடிஷன் பொருட்கள் எந்த விலைக்கு விற்பனையாகப்போகிறது என்று தெரியவில்லை, ஆனால் அதில் என்னென்ன இருக்கிறது என்று பாப்போம்.

PS4 மற்றும் PS5 இல் முழு God of War Ragnarök கேமிற்கான அச்சிடப்பட்ட வவுச்சர் குறியீடு. இது போதுமே இந்த இதை எப்படியாவது வாங்க வைக்க.

கேம் டிஸ்க் சேர்க்கப்படாத, ஒரு ஸ்டீல்புக் டிஸ்ப்ளே கேஸ். அதில் கரடி மற்றும் ஓநாய் ஆகியவற்றின் காட்சிகளை சித்தரிக்கப்பட்டுள்ளது.

2” வானிர் இரட்டையர்களின் செதுக்கப்பட்ட சிலை.

ட்வார்வன் டைஸ் செட்: இந்த அட்டகாசமான டைஸ் செட் பகடைகளின் தொகுப்புடன் தரமான மரம் கொண்டு பகடை பையில் வெளியில் Yggdrasil சின்னத்துடன் வருகிறது.

16” Mjölnir ரெப்ளிகா: God of War Ragnarök இன் தோரின் கையொப்ப ஆயுதத்தின் மிகவும் விரிவான பிரதி.

அட்ரியஸ் டார்க்டேல் உடை (டிஜிட்டல்), க்ராடோஸ் டார்க்டேல் ஆர்மர் (டிஜிட்டல்), லெவியதன் கோடரிக்கான டார்க்டேல் ஆக்ஸ் கிரிப் (டிஜிட்டல்), டார்க் ஹார்ஸ் டிஜிட்டல் மினி ஆர்ட்புக் (டிஜிட்டல்), டார்க்டேல் பிளேட்ஸ் ஹேண்டில்ஸ் ஆஃப் கேயாஸ் (டிஜிட்டல்), பிளேஸ்டேஷன் 4 தீம் (டிஜிட்டல்), உத்தியோகபூர்வ காட் ஆஃப் வார் ரக்னாரோக் டிஜிட்டல் ஒலிப்பதிவு (டிஜிட்டல்), அவதார் தொகுப்பு (டிஜிட்டல்) ஆகியவை அதனுள் அடங்கும்.

God of War: Ragnarok Jotnar Collector's Edition

இது ரசிகர்களுக்காகவே பிரத்தியேகமாக தயாரிக்கப்பட்ட கூடுதல் ப்ரீ-ஆர்டர் எடிஷன். இதுவும் ஜூலை 15 ஆம் தேதி லைவில் விற்பனைக்கு வருகிறது. இதில் என்னென்ன இருக்கு என்பதை தெரிந்து கொண்டு வாங்கலாமா வேண்டாமா என்று முடிவெடுங்கள். அதில் மேலே குறிப்பிட்டுள்ள அனைத்து பொருட்களும் இடம்பெற்றுள்ளது, அத்துடன் எக்ஸ்ட்ரா இருக்கும் பொருட்களின் பட்டியல் இதோ.

 

பியர் மெக்ரீரியின் இசையுடன் 7-இன்ச் வினைல் ரெக்கார்ட், இதில் இசையமைப்பாளர் பியர் மெக்ரீரியின் அட்டகாசமான இரண்டு பாடல்களும் அடங்கும்.

முறையே ஃபே, க்ராடோஸ் மற்றும் அட்ரியஸைக் குறிக்கும் ஃபால்கன், பியர் மற்றும் ஓநாய் பின் செட், நமது ஹீரோக்களின் குடும்பத்தைக் குறிக்கிறது.

நார்ஸ் புராணங்களில் இருந்து தி லெஜண்டரி டிராப்னிர் ரிங் சிவப்பு துணி பையில் வைக்கப்பட்டு தரப்படும்.

ப்ரோக்கின் டைஸ் செட் நீல விவரங்களுடன் உலோக வெள்ளி பூசப்பட்டு வருகிறது. மேலும் அந்த பகடை பையில் ஹல்ட்ரா பிரதர்ஸ் பிராண்ட் Yggdrasil துணி வரைபடம், Yggdrasil இன் கிளைகள் மற்றும் வேர்களில் உள்ள ஒன்பது பகுதிகளையும் மிகவும் துல்லியாமாக காட்டுகிறது.

God of War: Ragnarok Launch Edition

இந்த கேம் வெளியாவதற்கு முன்பு ப்ரீ-ஆர்டர் செய்பவர்களுக்கு இந்த லான்ச் எடிஷன் கிடைக்கும். இதில்

 • அழகுசாதன பொருட்கள்,
 • க்ராடோஸ் ரைசன் ஸ்னோ ஆர்மர்,
 • மற்றும் அட்ரியஸ் ரைசன் ஸ்னோ டூனிக் ஆகியவை அடங்கும்.

God of War: Ragnarok Digital Deluxe Edition

இந்த எடிஷனை ப்ரீ-ஆர்டர் செய்து வாங்க விரும்பினால், அதில் இந்த பொருட்கள் எல்லாம் இடம்பெற்று இருக்கும்.

 • PS4 மற்றும் PS5 இல் ஃபுல் காட் ஆஃப் வார் ரக்னாரோக் கேம்
 • க்ராடோஸ் டார்க்டேல் ஆர்மர்
 • அட்ரியஸ் டார்க்டேல் உடை (ஒப்பனை)
 • குழப்பத்தின் கத்திகளுக்கு டார்க்டேல் பிளேட்ஸ் கையாளுகிறது
 • லெவியதன் கோடரிக்கான டார்க்டேல் ஆக்ஸ் கிரிப்
 • உத்தியோகபூர்வ காட் ஆஃப் வார் ரக்னாரோக் டிஜிட்டல் ஒலிப்பதிவு
 • டார்க் ஹார்ஸ் டிஜிட்டல் மினி ஆர்ட்புக்
 • அவதார் தொகுப்பு
 • பிளேஸ்டேஷன் 4 தீம் ஆகியவை ஸ்பெஷலாக தரப்படும்.

God of War Special Edition, god of war digital deluxe edition review, god of war jotnar edition price, god of war ragnarok launch date, god of war ragnarok collector's edition release date, god of war ragnarok release date, god of war ragnarok pre order, god of war ragnarok  price in india, god of war ragnarok collectors editionm price, 

உடனுக்குடன் செய்திகளை (Technology News) தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்