Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

டிவிட்டர் பயனாளிகளுக்கு குட்நியூஸ்: இனி பணமழை கொட்டப்போகுது..!

Baskaran Updated:
டிவிட்டர் பயனாளிகளுக்கு குட்நியூஸ்: இனி பணமழை கொட்டப்போகுது..! Representative Image.

யுடியூப், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைதளங்களில் வருவாய் ஈட்டுவது போல் டிவிட்டரிலும் வருவாய் ஈட்டும் வசதி விரைவில் அறிமுகமாகவுள்ளது. 

அமெரிக்காவின்  மிகப்பெரிய தொழிலதிபரான எலான் மஸ்க், டிவிட்டர் நிறுவனத்தை வாங்கியது முதல் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். இதில் ப்ளூ டிக் பெறுதல், தனிநபர்களை சப்ஸ்கிரைப் செய்து சிறப்பு தகவல்கள் பெறுதல் போன்றவை அடங்கும். குறிப்பாக ப்ளூ டிக் பெறுவதற்கு கட்டணம் செலுத்த வேண்டும் என்ற அறிவிப்பு பல விமர்சனங்களை பெற்ற போதிலும், பலரும் கட்டணம் செலுத்தி ப்ளூ டிக் பெற்றனர். 

அப்போது ப்ளூ டிக் பெறுபவர்களுக்கு தகுதி அடிப்படையில் டிவிட்டர் விளம்பரம் மூலம் வரும் வருவாயை பகிர்ந்துக் கொள்ள போவதாக அறிவித்திருந்தார். அதை தற்போது உறுதிப்படுத்தியுள்ளார். அதன்படி ப்ளூ டிக் பெற்ற பயனர்களுக்கு விளம்பர வருவாயில் ஒரு தொகையை பகிரும் பணி தொடங்கியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதுதொடர்பான தகவல்கள் பயனர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளதாம். 

சிலர் தங்களுக்கு வந்திருக்கும் வருவாய் குறித்த தகவல்களையும் பகிர்ந்துள்ளனர். தற்போது ஐரோப்பா உள்ளிட்ட நாடுகளில் மட்டுமே இந்த முறை செயல்படுத்தப்பட்டுள்ளது என்றும், விரைவில் உலகம் முழுவதும் செயல்படுத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் டிவிட்டர் தளத்திற்கு போட்டியாக மெட்டா நிறுவனம் திரெட்ஸ் தளத்தை உருவாக்கியது. டிவிட்டர் செயல்பாடுகள் போல திரெட்ஸ் இருப்பதால், அதன்மீது வழக்கு தொடுக்கவுள்ளதாக எலான் மஸ்க் அறிவித்தது குறிப்பிடத்தக்கது. 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்