Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

இன்று விண்ணில் பாய்கிறது சந்திரயான்-3..! இறுதிக்கட்டப் பணிகள் தீவிரம்..!!

Saraswathi Updated:
இன்று விண்ணில் பாய்கிறது சந்திரயான்-3..!  இறுதிக்கட்டப் பணிகள் தீவிரம்..!!Representative Image.

நிலவில் ஆராய்ச்சி மேற்கொள்வதற்காக இந்தியாவால் உருவாக்கப்பட்ட சந்திரயான்- 3 விண்கலம் இன்று பிற்பகல் விண்ணில் செலுத்தப்படவுள்ளது. இதனை சுமந்து செல்லும் எல்.வி.எம்-3 M4 விண்கலத்திற்கான 25 1/2 மணி நேர கவுன்டவுன் நேற்று பிற்பகல் 1.05 மணிக்கு தொடங்கியது. 

நிலாவில் ஆராய்ச்சி மேற்கொள்வதற்காக இந்திய விண்வெளி ஆய்வு மையத்தால் உருவாக்கப்பட்ட சந்திரயான் - 1 விண்கலம், அங்கு தண்ணீர் இருப்பதை உறுதி செய்தது. அதைத் தொடர்ந்து, மேல் ஆராய்ச்சிக்காக அனுப்பப்பட்ட சந்திரயான்-2 விண்கலம் தோல்வியைத் தழுவியது. இதைத் தொடர்ந்து, தற்போது, சந்திரயான் - 3 விண்கலம், நிலவின் தெற்குப் பகுதியில் ஆய்வு மேற்கொள்ளும் நோக்கில் உருவாக்கப்பட்டுள்ளது.

சந்திரயான்-3 விண்கலம் இன்று விண்ணில் செலுத்தப்படுகிறது. இந்த விண்கலத்தை எல்.வி.எம்.3 - M4 ராக்கெட் சுமந்து செல்கிறது. இதையடுத்து, சந்திரயான்-3 விண்கலத்தின் அனைத்து பாகங்களும் முழுமையாக ராக்கெட்டில் பொருத்தும் பணி நிறைவடைந்துள்ளது.

அனைத்து பரிசோதனை மற்றும் சோதனை ஓட்டங்களும் முடிவடைந்த நிலையில், எல்.வி.எம்-3 M4 ராக்கெட்டில் எரிபொருள் நிரப்பும் பணிகள் நேற்று முடிவடைந்தது.  இதைத் தொடர்ந்து, எல்.வி.எம்3-எம்4 ராக்கெட்டுக்கான 25 1/2 மணி நேர கவுன்டவுன் நேற்று பிற்பகல் 1.05 மணிக்கு ஆரம்பமானது.  அதைத் தொடர்ந்து, இன்று (ஜூலை.14) பிற்பகல் 2 மணி 35 நிமிடம் 17 விநாடியில் ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிக்கோட்டாவில் உள்ள சத்தீஷ்தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து  சந்திரயான்-3 விண்கலம் எல்.வி.எம்-3 M4 ராக்கெட் மூலம்  விண்ணில் பாய்கிறது. 

முன்னதாக, நேற்று சந்திரயான்-3 விண்கலத்தின் மாதிரியை திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வைத்து, இஸ்ரோ தலைவர் சோம்நாத் உள்ளிட்ட விஞ்ஞானிகள் சிறப்பு வழிபாடு செய்தது குறிப்பிடத்தக்கது. நிலவை ஆய்வு செய்வதற்காக அனுப்படும் இந்த சந்திரயான்-3 விண்கலம் மூலம் இந்தியாவின் விண்வெளி ஆராய்ச்சி அடுத்த கட்டத்திற்குச் செல்லும் என இஸ்ரோ விஞ்ஞானிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்