Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Google Email Offline: இனி நெட் இல்லாம இ-மெயில் யூஸ் பண்ணலாம்..! அதுக்கு இப்படி பண்ணா மட்டும் போதும்..!

Gowthami Subramani June 29, 2022 & 13:30 [IST]
Google Email Offline: இனி நெட் இல்லாம இ-மெயில் யூஸ் பண்ணலாம்..! அதுக்கு இப்படி பண்ணா மட்டும் போதும்..!Representative Image.

Google Email Offline: இணையதள வசதி இல்லாமல், ஜிமெயிலுக்கு வரக்கூடிய செய்திகளைப் படிக்கவும், பதிலளிக்கவும் மற்றும் தேடவும் முடியும். இந்த அம்சமானது பயனர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் எனக் கூறப்படுகிறது.

இணையதள வசதி

இன்றைய நவீன காலகட்டத்தில், எந்த ஒரு அப்ளிகேஷனும் இணையதளம் மூலமாக இயங்குகிறது. அதே சமயம் ஒரு குறிப்பிட்ட  Application-களை ஆஃப்லைன் முறையில் இயங்க வைப்ப்தற்கான நடவடிக்கையிலும் இணைந்து வருகின்றனர்.

ஒவ்வொரு செயலுக்கும் இண்டர்நெட் பயன்பாடு மிகவும் தேவைப்படுவதாக உள்ளது. இதனை மாற்றும் வகையிலே ஆஃப்லைன் பயன்பாடுகளைக் கொண்டு வர திட்டமிடப்பட்டுள்ளன (Gmail Work Offline).

ஜி-மெயிலின் முக்கியத்துவம்

ஆரம்ப காலத்தில் இருந்தே, ஜி-மெயில் பயன்பாடுகள் முக்கியத்துவம் பெறுகின்றன. தகவல்களைப் பரிமாறிக் கொள்ள ஏராளக்கணக்கான சேட் அப்ளிகேஷன்கள் உள்ளன. ஆனால், இன்று வரை ஜி-மெயில் பயன்பாட்டின் வீதம் குறையாமல் இருந்து வருவதாகக் கூறப்படுகிறது. அதே போல, ஜி-மெயிலில் பயனர்களுக்கு பயனுள்ள வகையில் அப்டேட்டுகளைத் தந்துள்ளன. வீடியோ மீட்டிங், ஜிமெயில் ஸ்பேஸ் (Google Chat) மற்றும் இன்னும் சில அப்டேட்டுகள் ஜி-மெயில் பயன்பாட்டின் மீதான ஆர்வத்தை அதிகரித்தது (Can I Send an Email Without Internet).

ஜிமெயில் இனி இது இல்லை

அதன் படி, ஜிமெயிலில் ஹேங் அவுட்ஸ் (Hangouts) என்ற Chat Page பயன்படுத்தப்பட்டு வந்தது. நாளடைவில், இதன் புதிய அப்டேட்டாக Google Chat அறிமுகப்படுத்தப்பட்டது. Hangouts- ஐ விட, இந்த Google Chat ஒரு தனி சிறப்பைக் கொண்டுள்ளது. பெரும்பாலானோர், இந்த Google Chat பயன்படுத்துவதையே விரும்பினர் (Gmail Offline Mode).

இனி ஆஃப்லைனிலும் (How to Send Data Without Internet)

அவ்வாறு ஜி-மெயில் அப்ளிகேஷன் மட்டுமல்லாமல், வேறு சில சேட் (Chat) அப்ளிகேஷன்களும் இணையதள வசதி இருந்தால் மட்டும, தகவல் பரிமாற்றம் செய்ய உதவும். ஆனால், தற்போது கூகுள் ஆதரவுப் பக்கத்தில் வெளியிட்டுள்ள அறிவிப்பின் படி, இனி ஆஃப்லைன் முறையில் ஜிமெயில் பயன்பாட்டில் இருக்கும் எனக் கூறப்பட்டுள்ளது. இந்த புதிய ஆஃப்லைன் அம்சத்தின் மூலம், ஜிமெயில் பயன்பாட்டில் இணைந்துள்ளவர்கள் செய்திகளை படிக்கவும், பதிலளிக்கவும் முடியும். இதன் மூலமாக, இணையதள வசதி இல்லாத பகுதிகளிலும், இது பெரும் உதவியாக இருக்கும் (Is Gmail Offline Right Now).

Gmail -ஐ Offline முறையில் பயன்படுத்துவது எப்படி? (How to Access Gmail Without Internet Connection)

குறிப்பு

ஜிமெயில் அக்கவுண்டுகள் School or Work Account – உடன் இணைக்கப்பட்டிருந்தால், Admin அந்த அமைப்புகளை மாற்ற முடியும். இவர்கள் தவிர மீதமுள்ளவர்கள், கீழே குறிப்பிட்டுள்ள படிகளைப் பின்பற்றி பயன்படுத்தலாம்.

Graphical user interface, application

Description automatically generated

இதில் முக்கியமான ஒன்று, Google Chrome-ல் ஆஃப்லைனில் Gmail வேலை செய்யும். ஆனால், இது Google Chrome-ல் உள்ள Normal Mode-ல் மட்டுமே பயன்படுத்த முடியும். Incognito Window-வில் பயன்படுத்த முடியாது என்று கூறப்பட்டுள்ளது.

ஜிமெயில் ஆஃப்லைன் முறையில் எப்படி இயக்குவது?

  • Mail.google.com -க்குச் செல்ல வேண்டும்.
  • அதன் Inbox-ல் Settings அல்லது Cogwheel button-ஐக் க்ளிக் செய்ய வேண்டும்.
  • Setting-ல் உள்ள See all settings என்பதைக் க்ளிக் செய்தால் ஒரு Page Open ஆகும்.

Graphical user interface, application

Description automatically generated

  • அதில் Offline என்பதை தேட வேண்டும்.
  • பின், அந்த Offline என்பதைக் க்ளிக் செய்து, Enable Offline Mail என்பதை டிக் செய்ய வேண்டும்.
  • அதன் பின், அதில் குறிப்பிட்டுள்ளவற்றைத் தேர்ந்தெடுத்து, Save Changes செய்ய வேண்டும்.

இவ்வாறு செய்வதன் மூலம், ஜிமெயிலை இனி ஆஃப்லைனில் உபயோகப்படுத்த முடியும்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.....


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்