Fri ,Mar 01, 2024

சென்செக்ஸ் 73,745.35
1,245.05sensex(1.72%)
நிஃப்டி22,338.75
355.95sensex(1.62%)
USD
81.57
Exclusive

Google Jobs Tool: எப்படியாவது வேலைக்கு போகணும்னு நினைக்கிறீர்களா...உங்களுக்கு உதவ கூகுள் செய்த செயல்!

Priyanka Hochumin May 24, 2022 & 20:30 [IST]
Google Jobs Tool: எப்படியாவது வேலைக்கு போகணும்னு நினைக்கிறீர்களா...உங்களுக்கு உதவ கூகுள் செய்த செயல்!Representative Image.

Google Jobs Tool: கொரோனா சமயத்தில் வேலை தேடுவது கடினமாகி விட்டது. இளைஞர்களுக்கு புத்துணர்ச்சி அளிக்கும் வகையில், அவர்கள் வேலை தேடுவதை சுலபமாக்கி விட்டது இந்த "Interview Warmup" அம்சம்.   

உலகத்தில் இருக்கும் அனைவரும் அறிந்த ஒரு முக்கிய தொழில்நுட்ப நிறுவனம் கூகுள். அது பயனர்களுக்கு வேலையை சுலபமாக்க Machine Learning மற்றும் Artificial Intelligence போன்ற தொழில்நுட்பத்தை மையமாக கொண்டு செயல்பட்டு வருகிறது. கூகுளின் கீழ் நிறைய செயலிகள் மற்றும் தொழிநுட்ப கருவிகள் இருக்கிறது. அதில் தற்போது புதிதாக இருப்பது "Interview Warmup" அம்சம்.  

கூகுள் நிறுவனம் சமீபத்தில் இந்த ஆண்டு Google I/O Event 2022 இன் முக்கிய நிகழ்வான டெவலப்பர் மீட்டிங் சமீபத்தில் நடந்து முடிந்தது. அதில் அவர்கள் இந்த ஆண்டு என்னென்ன செயல்பாடுகளை மேற்கொள்ள போகிறார்கள் என்ற முழு விவரமும் தெரிவிக்கப்பட்டது. 

கூகுளின் இன்டெர்வியூ டிரெய்னிங் | Google New Job Tool  

வேலை தேடுவது எவ்ளோ கடினமானது என்று இன்ஜினியரிங் பட்டதாரிகளுக்கு நன்றாக தெரியும். உங்களுக்கு இன்டெர்வியூ செஷனுக்கான முழு பயிற்சியையும் இந்த கருவி உங்களுக்கு வழங்குகிறது. இந்த கருவி Machine Learning மற்றும் Artificial Intelligence உதவியுடன் செயல்படுகிறது. இங்கு கேட்கப்படும் கேள்விகளுக்கு பதிலளித்து உங்களை திருத்திக்கொள்ளவும், மேம்படுத்துக்கொள்ளவும் பெரும் உதவி செய்கிறது. நீங்கள் முழுமையாக இதில் பயிற்சி பெற்ற பிறகு நம்பிக்கையுடன் வேலைக்கான இன்டெர்வியூக்கு செல்லலாம். 

இன்டர்நேஷனல் ரோமிங் ஸ்கீம்...ஜஸ்ட் ரூ. 599/- மட்டுமே...அதுவும் அன்லிமிடெட்! Vi- யில் மட்டும்!

இந்த கருவி முதன்மையாக கூகுள் பயிற்சி சான்றிதழ் படிப்பிற்காக தான் உருவாக்கப்பட்டது. தற்போது அதை மேம்படுத்தி வேலை தேடும் அனைவர்க்கும் உதவும் வகையில் அனுமதிக்கப்பட்டது. இது "Grow Google" சேவையின் கீழ் இயங்கும் பலவற்றுள் ஒரு பகுதியாக திகழ்கிறது. மேலும் நீங்கள் டேட்டா அனலிட்டிக்ஸ், ப்ராஜெக்ட் மேனேஜ்மென்ட், யுஎக்ஸ் டிசைன், ஈ-காமர்ஸ் ஆகியவற்றில் தகுதி படுத்திக்கொள்ள எளிமையென்ப வழி இதுவே. 

இதில் நீங்கள் செய்ய வேண்டியது | Google Job Search Tool 

முதலில் Interview Warmup இணையதளத்தில் 'Start Practicing' பட்டனை கிளிக் செய்யவும்.

அது உங்களை நிறைய துறைகளைக் கொண்ட பக்கத்திற்கு அழைத்துச் செல்லும். அதில் உங்களுக்கு தேவையான துறையை தேர்ந்தெடுக்கவும்.

நீங்கள் செலக்ட் செய்த பிறகு, அந்த துறை சம்மந்தப்பட்ட ஐந்து நேர்காணல் கேள்விகள் கேட்கப்படும். பிறகு நீங்கள் அக்கேள்விகளுக்கு பதிலளிக்க வேண்டும். 

நீங்கள் பதில் அளித்த பிறகு அதை ஆய்வு செய்து மதிப்பளிக்கப்படும். மேலும் நீங்கள் எதை சரிசெய்ய வேண்டும் என்பதையும் காண்பிக்கும்.

இதன் மூலம் நீங்கள் உங்களுக்கு தேவையானதைக் கற்றுக்கொண்டு தெளிவு பெறுவீர்கள். 

அதுமட்டும் இல்லாமல் அணைத்து கேள்விகளையும் ஒரே பார்க்கும் விருப்பமும் உள்ளது. அதில் கேட்கப்படும் கேள்விகள் - பின்னணி, சூழ்நிலை மற்றும் தொழில்நுட்பம் ஆகியவற்றை உள்ளடக்கியது. பதிலளிப்பதும் மட்டுமல்லாமல் பேச்சு அனுபவமும் உங்களுக்கு கூகுள் கற்றுக்கொடுக்கும். எனவே நீங்கள் இன்டெர்வியூக்கு முழுமையாக தயாராகி வேலை பெறலாம்.

ஹேக் செய்யப்பட்ட பேஸ்புக் அக்கௌன்ட்டை Recover செய்வது எப்படி?

Google Jobs Tool, google new jobs tool, google job search tool

உடனுக்குடன் செய்திகளை (Technology News) தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்