Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Facebook Account Recovery in Tamil: ஹேக் செய்யப்பட்ட பேஸ்புக் அக்கௌன்ட்டை Recover செய்வது எப்படி?

Priyanka Hochumin May 20, 2022 & 17:30 [IST]
Facebook Account Recovery in Tamil: ஹேக் செய்யப்பட்ட பேஸ்புக் அக்கௌன்ட்டை Recover செய்வது எப்படி?Representative Image.

Facebook Account Recovery in Tamil: நீங்கள் அதிகமாக பேஸ்புக் பயன்படுத்துபவரா? உங்களுக்கு நிறைய பேஸ்புக் பிரெண்ட்ஸ் இருக்கிறாங்களா? அப்ப நீங்கள் கட்டாயம் தெரிந்துகொள்ள வேண்டிய விஷயம் இது. முழுமையாகப் படித்து தெரிந்துகொண்டு சந்தர்ப்ப சூழ்நிலையில் பயன் பெறுங்கள். 

பேஸ்புக் நன்மைகள் | Facebook Account Recover Tips 

உலகில் மக்கள் அதிகம் பிடித்து பயன்படுத்தும் சமூக வலைத்தளங்களில் ஒன்று பேஸ்புக். இது முற்றிலும் மக்களின் நன்மைக்காகவே உருவாக்கப்பட்டது. தினமும் வேலை டென்ஷன், வீட்டில் பேசுவதற்கு யாரும் இல்லாமல் இருப்பது மற்றும் வாழ்வில் அடுத்து என்ன செய்வது என்று தெரியாமல் இருப்பவர்கள் போன்ற பலர் இருக்கின்றனர். இந்த வலைத்தளம் மூலம் பெரும்பாலான மக்களைத் தெரிந்துகொண்டு பயன் பெறலாம். எப்படி நல்லது என்று ஒன்னு இருந்தால் கெட்டது என்பதும் இருக்குமோ, அதைப்போலவே இதிலும் நிறைய தவறான விசியுங்கள் இருக்கிறது. 

நெகட்டிவ் | Facebook Hacked Account Recover Tips 

"Information is Wealth" என்ற அந்த காலத்து பழமொழி போல், நீங்கள் தினமும் பகிரும் உங்களின் அன்றாட வாழ்க்கை பதிவால் உங்களைப் பற்றி முழுமையாக தெரிந்துகொள்கின்றனர். மேலும் அதை தவறாக பயன்படுத்தி சம்பாதிக்க நினைக்கும் நிறைய பேர் இருக்கின்றனர். அதே போல் உங்களின் அக்கௌன்ட்டை ஹேக் செய்வது, பெண்களின் புகைப்படத்தை எடுத்து ஆபாசமாக பதிவு செய்வது போன்ற நிறைய தவறுகள் நடக்கிறது. 

ஹேக் செய்துட்டாங்களா? | Facebook Hacked Account Recover Tips

இதையெல்லாம் படிக்கும் பொழுது நீங்கள் யோசிக்கலாம், நம்ப கிட்ட என்ன இருக்குது நம்ப அக்கௌன்ட்ட ஹேக் பண்றதுக்கு? என்று நினைக்கலாம். அப்படி மட்டும் இந்த விஷயத்தை அசால்ட்டாக நினைக்காதீர்கள், இது உங்களுக்கு மட்டுமல்ல பேஸ்புக்கில் உங்களுடன் பிரண்ட்ஸாக இருக்கும் அனைவருக்குமே இது ஆபத்து தான். சரி, ஒருவேலை உங்களுடன் பேஸ்புக் அக்கௌன்ட் ஹேக் செய்திவிட்டார்கள் என்று எவ்வாறு தெரிந்துகொள்வது? மற்றும் அதற்கு என்ன செய்வது? என்று பார்க்கலாம். 

அதற்கு என்ன செய்வது? | Facebook Account Recover Tips 

உங்களுக்கு தெரியாமல் உங்களின் அக்கௌன்ட் செயல்படுவது நீங்கள் கண்டறிந்தால், உங்களுடைய பேஸ்புக் அக்கௌன்ட் ஹேக் செய்துவிட்டதாக அர்த்தம். அப்படி ஒரு வேலை நடந்துவிட்டால், நீங்க பீதி அடைய வேண்டாம். அதற்கு பின்பு நீங்கள் இதை செய்யுங்கள். 

முதலில் உங்கள் பேஸ்புக் அக்கௌன்ட்டின் "பாஸ்வேர்ட்-ஐ" மாற்ற வேண்டும். 

அதை மாற்ற "ப்ரைவஸி & செட்டிங்ஸ்" ஆப்ஷனுக்கு செல்லுங்கள்.

பிறகு பாஸ்வேர்ட் & செக்யூரிட்டி என்பதை செலக்ட் செய்யவும்.

அதற்கு பின்பு 'சேன்ஞ் பாஸ்வேர்ட்'-ஐ கிளிக் செய்யவும். இதில் நீங்கள் புதிய பாஸ்வேர்ட்டை உருவாக்கலாம். ஆனால் உங்களுடைய பழைய பாஸ்வேர்ட்டை விட வலுவான முறையில் உருவாக்குங்கள்.

அதே போல் "பாஸ்வேர்ட் & செக்யூரிட்டி" ஆப்ஷனில், "Where You're Logged in" என்பதை கிளிக் செய்யுங்கள். அது உங்களுடைய பேஸ்புக் அக்கௌன்ட்டை எந்தெந்த டிவைஸ்களில் இருந்து பயன்படுத்தினீர்கள் என்று காண்பிக்கும். எனவே, உங்களுக்கு தெரியாத டிவைஸ் ஏதேனும் தென்பட்டால் அதை உடனடியாக deactivate செய்துவிடுங்கள்.

அதற்கு பிறகு செக்யூர் அக்கவுண்ட் என்பதை செலக்ட் செய்யவும்.

இதைத் தவிர மற்ற ஏதேனும் தகவல் பற்றி தெரிந்துகொள்ள வேண்டுமென்றால் பேஸ்புக்கின் "ஹெல்ப்" பக்கத்தைத் தொடரவும். அங்கு உங்களின் குறைகளைத் தெரிவித்து தீர்வு காணுங்கள்.

இதையும் தாண்டி முக்கியமாக உங்களின் பேஸ்புக் அக்கௌன்ட் ஹேக்கரால் ஹேக் செய்யப்பட்டு, உங்களின் அக்கௌன்ட்டை லாக் செய்துவிட்டால் Facebook.com/hacked என்ற பக்கத்திற்கு செல்லவும். அதற்கு உங்களின் பேஸ்புக் அக்கௌன்ட் உடன் தொடர்புடைய மொபைல் எண்ணை உள்ளிடவும். அப்படி நீங்க உள்ளிடும் எண் சரியாக இருந்தால், பேஸ்புக் உங்களின் கோரிக்கையை ஏற்று உங்களின் குறைகளை நிவர்த்தி செய்யும்.  

எனவே, மிகவும் கவனமாக பேஸ்புக்கை பயன்படுத்துங்கள் மற்றும் குறைகளை எவ்வாறு நிவர்த்தி செய்யலாம் என்று தெரிந்துகொண்டு அதைப் பின்பற்றுங்கள். 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்..


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்