Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Vodafone International Roaming Plans: இன்டர்நேஷனல் ரோமிங் ஸ்கீம்...ஜஸ்ட் ரூ. 599/- மட்டுமே...அதுவும் அன்லிமிடெட்! Vi- யில் மட்டும்!

Priyanka Hochumin May 24, 2022 & 19:30 [IST]
Vodafone International Roaming Plans: இன்டர்நேஷனல் ரோமிங் ஸ்கீம்...ஜஸ்ட் ரூ. 599/- மட்டுமே...அதுவும் அன்லிமிடெட்!  Vi- யில் மட்டும்!Representative Image.

Vodafone International Roaming Plans: வெளிநாடுகளுக்கும் செல்லும் இந்தியர்களுக்கு இது ஒரு சூப்பர் பிளான். நீங்கள் ரூ. 599/- முதல் ரோமிங் சார்ஜ் ஆக்டிவேட் செய்யலாம். 

இந்தியாவில் இருக்கும் சர்வீஸ் ப்ரொவைடர்கள் மக்களுக்கு நிறைய சலுகைகள் தருகின்றனர். மேலும் ஒரு மாநிலத்தில் இருந்து மற்றொரு மாநிலத்திற்கு செல்லும் பொழுது உங்களின் ஸ்மார்ட்போனில் ரோமிங் சர்வீஸ் தானாகவே ஆக்டிவேட் செய்யபப்டும். ஆனால் அதற்கு கட்டணம் வசூலிக்கப்படாது. இருப்பினும் இந்தியாவில் இருக்கும் மக்கள் அதிகமாக வெளிநாடுகளுக்கு சென்று வேலை அல்லது டூர்-க்குச் செல்கின்றனர். அப்பொழுது நீங்கள் மற்ற நாடுகளுக்கு போவதனால் அங்கு உங்களின் சர்வீஸ் ப்ரொவைடர்களுக்கு நீங்கள் கட்டணம் செலுத்த வேண்டும். இல்லையென்றால் அந்த நாட்டில் நீங்கள் புதிதாக சிம் வாங்கி பயனப்படுத்த வேண்டும், அதற்கு தனியாக நீங்கள் செலவு செய்ய வேண்டும். 

Vi இன் புதிய ஸ்கீம் | Vodafone International Roaming Pack

இப்படி வெளிநாடுகளுக்கு செல்பவர்களுக்காகவே Vi நிறுவனம் திங்களன்று ஒரு புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. சந்தாதாரர்களுக்கு மிகவும் சிக்கனமான முறையில் இன்டர்நேஷனல் அன்லிமிடெட் ரோமிங் பேக் ரூ. 599/- முதல் ரூ. 5,999/- வரை உள்ளது. இந்த சந்தா ஐக்கிய அரபு எமிரேட்ஸ், இங்கிலாந்து, அமெரிக்கா, பிரான்ஸ், ஜெர்மனி, இந்தோனேசியா, இத்தாலி, ஆஸ்திரேலியா, தாய்லாந்து மற்றும் பிரேசில் ஆகிய நாடுகளுக்கு செல்பவர்களுக்கு தகுதியானது என்று கூறப்படுகிறது. இந்த திட்டம் உங்களுக்கு அன்லிமிடெட் வாய்ஸ் கால் மற்றும் நீங்க செல்லும் இடங்களுக்கு டேட்டா வழங்கும் ஆதரவை வழங்குகிறது. 

மேலும் இதில் Vi Postpaid ரோமிங் பேக்கில் Always On அம்சம் அளிக்கப்படுகிறது. இதன் மூலம் நீங்கள் கட்டணம் செலுத்திய பேக் காலாவதியான பிறகும் இன்டர்நேஷனல் ரோமிங்கில் இருப்பதால் அதிக கட்டணத்தை குறைக்க உதவுகிறது. 

அரசு அதிரடி...ஒரு மெசேஜ் வாட்ஸ்அப்பில் அனுப்பி...பான் கார்டு, தேர்ச்சி சான்றிதழ் அனைத்தும் பெறலாம்!

வேலிடிட்டி விவரங்கள்  | Vodafone Roaming Recharge 

Vi அறிமுகபடுத்திய இன்டர்நேஷனல் ரோமிங் பேக் ரூ. 599/-க்கு ஆரம்பிக்கப்படுகிறது. இது உங்களுக்கு ஒரு நாள் வேலிடிட்டி வழங்குகிறது. அதுவே நீங்கள் ரூ. 5,999/- திட்டம் எடுத்தால், உங்களுக்கு 28 நாட்கள் வேலிடிட்டி வழங்கப்படும். இவை இரண்டுமே உங்களுக்கு அன்லிமிடெட் வாய்ஸ் கால் மற்றும் டேட்டாவை வழங்குகிறது. அதே போல் உள்ளூர் சேவை வழங்குநர்களுடன் சேர்ந்து மொத்தம் 81 நாடுகளில் ரோமிங் சேவையை Vi அளிக்கிறது. மேலும் உங்களுடைய ஸ்கீம் முடிந்த பிறகும் அதிக கட்டணம் வசூலிக்காமல் இருக்க ஆல்வேஸ் ஆன் அம்சத்தை பயன்படுத்துங்கள். 

அதே போல் நீங்கள் ரோமிங் பேக் ஏழு நாட்கள் எடுத்துக்கொண்டீர்கள், மேலும் ஒரு சில நாட்கள் நீடிக்க விரும்பினால் அதற்கு வாய்ஸ், எஸ்எம்எஸ் மற்றும் டேட்டா ஆகியவை பயன்படுத்தலாம். நீங்கள் பயன்படுத்தியதை பொறுத்து கட்டணம் வசூலிக்கபப்டும். அதுவே ரூ. 599/- கடந்த உடன் நீங்க இன்டர்நேஷனல் ரோமிங் வசதி பயன்படுத்தும் ஒவ்வொரு நாளும் ரூ. 599/- கட்டணம் வசூலிக்கப்படும். 

Vi-யின் புதிய RedX திட்டம் | Vodafone International Roaming Plans

Vi இந்த இந்த RedX திட்டம், ஒவ்வொரு ஆண்டும் ரூ. 2,999/-க்கு இன்டர்நேஷனல் ரோமிங் பேக்கை ஏழு நாட்களுக்கு சந்தாதாரர்களுக்கு வழங்குகிறது. எனவே வெளிநாடு செல்லும் பயனர்கள் டேட்டா பயன்பாட்டில் இடையூறு இன்றி மற்றும் அதிக கட்டணம் செலுத்தாமல் உங்கள் பட்ஜெட்டிற்குள் இந்த திட்டம் மூலம் பயன்பெறலாம். 

ரயில் ஆன்லைன் முன்பதிவில் புதிய மாற்றம்..! எப்படி முன்பதிவு செய்வது..?

உடனுக்குடன் செய்திகளை (Technology News) தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்