Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

iQoo Z6 Lite 5G Launch Date in India: சார்ஜர் இல்லாம வரும் அந்த பிராண்ட் போன்...ஆனா அதோட வாங்குனா கம்மி தான்!

Priyanka Hochumin September 13, 2022 & 11:33 [IST]
iQoo Z6 Lite 5G Launch Date in India: சார்ஜர் இல்லாம வரும் அந்த பிராண்ட் போன்...ஆனா அதோட வாங்குனா கம்மி தான்!Representative Image.

iQoo Z6 Lite 5G Launch Date in India: மக்களின் அதிக கவனத்தை ஈர்த்து கொண்டிருக்கும் iQoo பிராண்டின் அட்டகாசமான லேட்டஸ்ட் ஸ்மார்ட்போன் வெளியாக உள்ளது. செப்டம்பர் 14 அதாவது நாளை வெளியாகவிருக்கும் iQoo Z6 Lite 5G ஸ்மார்ட்போனின் விவரக்குறிப்புகள் மற்றும் விலை போன்ற விவரங்கள் இன்று வெளியாகி உள்ளது. அதைப்பற்றியான முழு தகவலையும் இந்த பதிவில் பார்த்து தெரிந்துகொள்ளுங்கள்.

எவ்ளோ இருக்கும் இந்த மாடல்?

iQoo Z6 Lite 5G ஆனது பேஸ் மாடல் 4ஜிபி ரேம் + 64ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்ட் போனின் விலை ரூ. 13,999/-க்கு இந்தியாவில் விற்பனையாகும். அதே போல் ஹை-எண்டு மாடல் 6ஜிபி ரேம் + 128ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்டின் விலை ரூ. 15,499/- ஆகும். இந்த மாடல் ஸ்மார்ட்போன் மிஸ்டிக் நைட் மற்றும் ஸ்டெல்லார் கிறீன் ஆகிய இரண்டு நிறங்களில் வருகிறது. நீங்கள் iQoo Z6 Lite 5G பிடித்து வாங்க விரும்பினால் நிறுவனத்தின் அதிகாரபூர்வ வெப்சைட் அல்லது மிகப்பெரிய இ-காமெர்ஸ் நிறுவனமான அமேசான் மூலம் வாங்கலாம்.

முக்கிய குறிப்பு: அப்படியா நீங்கள் வாங்குகையில் என்னென்ன சலுகைகள் உங்களுக்கு கிடைக்கும் தெரியுமா? நீங்கள் எஸ்பிஐ கார்டு பயன்படுத்தி வாங்கினால் உங்களுக்கு ரூ. 2,500/- தள்ளுபடி கிடைக்கும். மேலும் இந்த போனின் சார்ஜர் வாங்கும் பொழுது அது வெறும் ரூ. 300/-க்கு கிடைக்கும். இதுவே நீங்கள் தனியே வாங்கும் பொழுது அந்த சார்ஜரின் விலை ரூ. 600/- ஆகும்.

தரமான டிஸ்பிலே

iQoo Lite 5G ஆனது Snapdragon 4 Gen 1 SoC மூலம் இயக்கப்படுகிறது மற்றும் ஆண்ட்ராய்டு 12 அவுட்-ஆஃப்-பாக்ஸில் இயங்குகிறது. இந்த ஹாண்ட்-செட் 6.58-இன்ச் முழு-HD+ டிஸ்ப்ளே 120Hz புதுப்பிப்பு வீதம் மற்றும் 240Hz டச் சாம்ப்ளிங் ரேட் கொண்டுள்ளது. நீண்ட கேமிங் மற்றும் மூவி அமர்வுகளின் போது குளிர்ச்சியை வழங்க 4-காம்போனென்ட் கூலிங்க சிஸ்டம் இதில் இருக்கும் சிறப்பம்சமாகும். iQoo Z6 Lite 5G ஆனது நீட்டிக்கப்பட்ட ரேம் 2.0 அம்சத்தையும் கொண்டுள்ளது, இது பயன்படுத்தப்படாத ஸ்டோரேஜை பயன்படுத்தி கிடைக்கும் மெமரியை நீட்டிக்க வடிவமைக்கப்பட்டுள்ளது.

கேமரா கிளாரிட்டி எப்படின்னு பாருங்க!

ஐ ஆட்டோஃபோகஸுடன் 50 மெகாபிக்சல் பிரைமரி கேமரா மற்றும் 2 மெகாபிக்சல் மேக்ரோ கேமரா என்று டூயல் ரியர் கேமராவைக் கொண்டுள்ளது. அதே போல் செல்பீ மற்றும் வீடியோ கால் பயன்பாட்டிற்கு 2 மெகாபிக்சல் கேமரா பொருத்தப்பட்டுள்ளது. மேலும் 18W பாஸ்ட் சார்ஜிங் ஆதரவை வழங்கும் 5000mAh பேட்டரி உடன் இந்த ஸ்மார்ட்போன் வருகிறது.

மற்ற விவரங்கள் நிறுவனம் தெரிவிப்பது என்னவென்றால், இந்த மாடல் ஸ்மார்ட்போன் சார்ஜர் இல்லாமல் வரும். மேலும் ஸ்மார்ட்போனுக்கான இரண்டு வருட ஆண்ட்ராய்டு அப்டேட்களையும், மூன்று வருட மாதாந்திர பாதுகாப்பு இணைப்புகளையும் வழங்கும் என்று கூறுகிறது. 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்